கண்ணம்மாவின் பழைய முடிவை கையில் எடுத்த பாரதி... புது ஆட்டத்தை தொடங்கிய வெண்பா.. எதிர்ப்பாராத முடிவு
சென்னை: பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி கண்ணம்மாவுடன் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்று கண்ணம்மாவின் வீட்டிற்கு குடும்பத்தோடு வருகிறார். அங்கே கண்ணம்மா வீட்டில் இல்லை.
தங்களை யாரும் தொடர்பு கொள்ள கூடாது என்று கண்ணம்மா செய்து வைத்திருக்கும் மொத்த செயல்களையும் பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர்.

வீட்டை விட்டு கிளம்பிய கண்ணம்மா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் இன்றைய எபிசோட்டின் ஆரம்பத்தில் பாரதி தன்னுடைய குடும்பத்துடன் கண்ணம்மாவை தேடி வீட்டிற்கு வர வீடு பூட்டி இருப்பதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அப்போது வீட்டு வாசலில் ஒரு லெட்டர் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதை எடுத்து படித்த போது அதில் கண்ணம்மா எங்களை யாரும் தேட வேண்டாம் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று எழுதி வைத்திருப்பதை பார்த்து எல்லோரும் அதிர்ச்சியாகின்றனர். பாரதி என்னை விட்டுட்டு எங்க போன கண்ணம்மா என கண்கலங்கி அழுகிறார். கண்ணம்மா நம்ம வீட்டுக்கு வரலைன்னு சொன்னா நான் அவ வர வரைக்கும் இந்த வீட்டிலேயே இங்கே இருக்கலாம் என்று முடிவு பண்ணி தான் இங்கே வந்தேன். ஆனால் இப்போ எங்கே சென்றாய் என்று கூட தெரியாமல் போய்விட்டாளே என அழுது புலம்பி கொண்டிருக்கிறார்.

ஜெயிலுக்குள் வெண்பா
அப்போது அஞ்சலி கண்ணம்மாவிடம் ஃபோனில் பேசி பார்க்கலாம் என போன் செய்து பார்க்கும் போது போன் சுவிட்ச் ஆஃப் என வருகிறது. அப்போது அருகில் சிம்கார்டு உடைந்து கீழே கிடப்பதை எழில் பார்க்கிறார். இது கண்ணம்மாவின் சிம் ஆகத்தான் இருக்க வேண்டும் என்று பாரதி அந்த இடத்திலேயே அழுது கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் ஜெயிலில் வெண்பா உன்னை சும்மா விடமாட்டேன் கண்ணம்மா நீ ஜெயித்ததாக மட்டும் நினைக்காத என தனியாக பேசிக் கொண்டிருக்கிறார்.

தெருவில் தேடும் குடும்பத்தினர்
சுவற்றில் கண்ணம்மாவின் புகைப்படத்தை வரைந்து அதில் கண்ணம்மா என எழுதி வைத்துக்கொண்டு வெண்பா கத்திக் கொண்டிருப்பதை பார்த்து வார்டன் வந்து எச்சரிக்கிறார். வெண்பாவின் அருகில் இருக்கும் இன்னொரு கைதி வெண்பாவுக்கு எதிராக வார்டனிடம் போட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அடுத்த பக்கத்தில் பாரதி குடும்பத்தினர் கண்ணம்மாவை ரோடு ரோடாக தேடிக் கொண்டிருக்கின்றனர். அப்போது கண்ணம்மா வேலையையும் ரிசைன் செய்து விட்டதாக பாரதிக்கு போனில் தகவல் கிடைக்கிறது. இதை கேட்ட பாரதி இன்னும் அதிர்ச்சி அடைகிறார்.

பேக்கை கையில் எடுத்த பாரதி
அதே நேரத்தில் கண்ணம்மா தன்னுடைய அப்பாவின் சொந்த ஊருக்கு குழந்தை மற்றும் அப்பாவுடன் பஸ்ஸில் சென்று கொண்டிருக்கிறார். அவரது சொந்த ஊரில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்க ஊரில் விசாரிக்கின்றனர். பாரதியின் வீட்டில் அனைவரும் வருத்தமாக இருக்க அஞ்சலி, அக்கா இருந்த வேலையும் விட்டுட்டா குடும்ப செலவுக்கு என்ன பண்ணுவாள் குழந்தைகளை எப்படி வளர்க்க போறார் என தெரியலையே என பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பாரதி வேகமாக மாடிக்கு சென்று தன்னுடைய துணிகளை எல்லாம் பேக்கில் எடுத்துக் கொண்டு கண்ணம்மாவை தேடி போகப் போவதாக கூறுகிறார். இதைக் கேட்ட அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications