கண்ணம்மாவுக்கு ஆதரவாகவும் பாரதிக்கு எதிராக புது வில்லன்.. குழந்தைகளை பார்ப்பதில் ஏற்பட்ட சிக்கல்
சென்னை: பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி தன்னை நம்பாமல் டிஎன்ஏ டெஸ்ட்டை நம்பியதால் பாரதியோடு இனி சேர்ந்து வாழ முடியாது என்று கண்ணம்மா வீட்டை பூட்டி விட்டு யாருக்கும் சொல்லாமல் ஊரை விட்டு கிளம்பி விட்டார்.
கண்ணம்மாவையும் குழந்தைகளையும் தேடி பாரதியும் வீட்டை விட்டு கிளம்பி இருக்கிறார்.
கண்ணம்மாவுக்கு ஆதரவாக மொத்த ஊரும் ஆதரவு கொடுக்க, அங்கே பாரதி வந்தால் இனி பிரச்சனை என அனைவரும் கூறிக் கொண்டிருக்கின்றனர்.

வீட்டை விட்டு கிளம்பும் பாரதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோட்டில் தனது குழந்தைகளை தேடி தான் செல்லப் போவதாக தன்னுடைய துணிகளை எல்லாம் பேக்கில் எடுத்துக்கொண்டு பாரதி கிளம்ப, சௌந்தர்யா எங்கு போய் தேடுவ எங்க இருக்கான்னு தெரியலையே என தடுக்கிறார். அதுபோல அகிலனும் எங்கேயும் போக வேண்டாம் ஏதாவது தகவல் கிடைக்கும் என சொல்கிறார். ஆனால் அதை பாரதி ஏற்க மறுக்கிறார். கண்ணம்மாவை தப்பா நினைச்சது நான்தான் என்னால தான் அவ இவ்வளவு கஷ்டப்படுற, நான் அவங்களை தேடி வீட்டுக்கு கூட்டிட்டு வருவேன் என உறுதியாக சொல்கிறார். பின்பு பாரதியின் அப்பா அவனை தடுக்காதே அவன் எடுத்த முடிவு சரிதான் என சொல்லி வழி அனுப்பி வைக்கிறார்கள்.

தாமரையின் அறிமுகம்
அடுத்த பக்கத்தில் கண்ணம்மா சொந்த ஊருக்கு குழந்தைகளோடும் அப்பாவோடும் வந்து சேர்ந்ததும் அங்கிருக்கும் ஒருவரிடம் வீடு வாடகைக்கு கேட்க அவர் நீங்க நம்ம ஊரு ஆளுங்க உங்களுக்கு இல்லாததா, கண்ணம்மாவிடம் நான் உனக்கு பெரியப்பா முறை வேண்டும் என சொல்லி வீட்டு சாவியை கொடுக்கின்றனர். அந்த வீட்டின் நபரின் மகளாக பிக் பாஸ் தாமரை செல்வி என்ட்ரி கொடுக்கிறார். இந்த சீரியலிலும் தாமரை செல்வி தாமரை என்கிற கேரக்டரில் நடிக்கிறார்.கண்ணம்மாவின் அக்காவாக தாமரை வருகிறார். அவருடைய மகளாக பூஜா என்கிற குழந்தையும் வருகின்றனர். இவர்கள் கண்ணம்மா குடும்பத்தோடு நன்கு பேசி பழகுகின்றனர்.

பாரதிக்கு துணைக்கு கிடைத்த உறவு
அடுத்ததாக கண்ணம்மாவை தேடி பாரதி ரோடு ரோடாக அலைந்து கொண்டிருக்கிறார். அப்போது கண்ணம்மாவின் சித்தியின் தம்பி பாரதியை பார்த்து என்ன கண்ணம்மாவை தேடுகிறீர்களா? என கேட்க ஆமா உனக்கு எப்படி தெரியும் என பாரதி கேட்க, அவர் கண்ணம்மா குழந்தைகள் மட்டுமல்ல எங்க மாமாவையும் அதான் உங்க மாமனாரையும் கானோம். எல்லாரையும் சேர்ந்துதான் ஊரை விட்டு போயிருக்காங்க என கூறுகின்றார். எனக்கு மாமா கண்டிப்பாக கிடைத்தாக வேண்டும் அப்படி கிடைத்தால் தான் எனக்கு சாப்பாடு அதனால் நானும் உங்க கூட சேர்ந்து தேடட்டுமா என கேட்டு பாரதியும் சரி என்று கூறுகிறார்.

ஊர்க்காரர்கள் கொடுக்கும் ஆதரவு
அடுத்து கண்ணம்மா எங்க தான் போயிருப்ப என கேட்க, பாரதி தெரியலையே என சொல்ல, ஒருவேளை கண்ணம்மா ஒரு ஊரில் ஏற்கனவே இருந்தாளே அதே ஊருக்கு போய் இருக்கலாம் இல்ல என சொல்ல, பாரதி இது எனக்கு தோணவே இல்லையே என சொல்லி அந்த ஊருக்கு வாங்க போய் தேடிப் பார்க்கலாம் என கிளம்புகின்றனர். இந்த பக்கம் கண்ணம்மா ஊரில் வாடகைக்கு வீடு எடுத்த நிலையில் ஊர் மக்களை சந்தித்து பேசுகிறார். அப்போது ஊர் பெரிய மனுஷங்க உன்னுடைய அப்பா வாழ்க்கையில் நடந்த எல்லா விஷயங்களையும் ஒன்று விடாமல் எங்க கிட்ட சொல்லிட்டாரு எனவே உனக்கு எந்த பிரச்சனையும் வராது. பத்து வருஷமா உன்ன விலக்கி வச்சிருக்கான் அந்த மனுஷன் கூட வாழ்ந்து உன் வாழ்க்கையை பாழாகிட்டு, இனி உன்ன திருமணம் செய்த அந்த டாக்டர் உன்னை தேடி இந்த ஊருக்கு வந்துருவானு நீ பயந்துகிட்டு இருந்ததா உன் அப்பா சொன்னாரு, நம்மளுடைய ஊருக்குள் யாரும் அப்படி வந்துவிட முடியாது. நீ பயப்படாத உனக்காக நாங்க இருக்கிறோம் என கூறிக் கொண்டு அந்த ஊரிலேயே வேலை செய்ய வழி செய்து கொடுக்கின்றனர். அதுபோல குழந்தைகளையும் இந்த ஸ்கூலில் சேர்த்து விடு என சொல்ல கண்ணம்மா சந்தோஷப்படுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications