பரிதாப நிலையில் வெண்பா.. கண்ணம்மாவுக்கு கிடைக்கும் அதிர்ச்சி.. பாரதி செய்த எதிர்பாராத செயல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாரதி கண்ணம்மா சீரியலில் ஜெயிலில் இருக்கும் வெண்பா கண்ணம்மாவை பழிவாங்க வேண்டும் என்று நினைத்து நினைத்தே யாரைப் பார்த்தாலும் அவர்கள் கண்ணமாவாகவே வெண்பாவிற்கு தெரிகிறார்.

கண்ணமா இருக்கும் ஊருக்கே பாரதி வரக்கூடாது என்று ஊர் கட்டுப்பாட்டுகளை மீறி பாரதி அரசு அனுமதி பெற்றுக்கொண்டு மீண்டும் அந்த ஊரில் கம்பீரமாக வந்திருக்கிறார்.

ஊருக்குள் மீண்டும் வந்த பாரதி

ஊருக்குள் மீண்டும் வந்த பாரதி

பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோட்டின் ஆரம்பத்தில் கண்ணம்மா வீட்டிற்கு வரும் ஊர் பெரிய மனுஷங்க இனிமே பாரதி இந்த ஊருக்குள் நுழைய முடியாது. அக்கம் பக்கத்தில் இருக்கும் ஊரிலும் தங்க முடியாது. எல்லோருக்கும் சேதி சொல்லி ஆச்சி. இனி வேறு வழி இல்லாமல் அவர் மூட்டை முடிச்சு கட்டிக் கொண்டு பட்டணத்துக்கு தான் போய் ஆக வேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கே பாட்டு சத்தம் கேட்க அனைவரும் திரும்பி பார்க்கும் போது காரில் பாட்டு போட்டுக்கொண்டு ஸ்டைலாக பாரதி மீண்டும் ஊருக்குள்ளே வருகிறார். பாரதியின் இந்த அட்ராசிட்டியை பார்த்து அனைவரும் அதிர்ச்சியாக இந்த ஊருக்குள் உன்னை வரக்கூடாது என்று சொல்லி இருந்துல்லா என கேட்க பாரதி இனிமே நான் இந்த ஊரில் தான் இருப்பேன். உங்களால் ஒன்னும் பண்ண முடியாது என சொல்கிறார்.

போலீஸ் பாதுகாப்பு

போலீஸ் பாதுகாப்பு

ஊர் பெரிய மனுஷங்க உன்னால இந்த ஊர்ல இருக்க முடியாது. உனக்கு இந்த ஊர்ல யார் அப்படி ஆதரவு தருகிறார்கள் என கேட்க, போலீஸ் வருகிறது. அனைவரும் போலீஸ் வந்ததை பார்த்து அதிர்ச்சியாக ஊர் பெரியவர்களிடம் போலிஸ் அதிகாரிகள் பாரதி அரசாங்கத்திடம் இந்த ஊருக்கு மருத்துவ சேவை செய்ய அனுமதி வாங்கி வந்திருப்பதாக கூறுகிறார். மேலும் இந்த ஊர் சமுதாய கூட்டத்தில் தான் தங்குவாரு அவரை நீங்க யாரும் வெளியே அனுப்ப முடியாது. தேவைப்பட்டால் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்க சொல்லி இருக்காங்க என சொல்ல அனைவரும் அதிர்ச்சடைகின்றனர்.

குறையாத கண்ணம்மா நோய்

குறையாத கண்ணம்மா நோய்

பின்பு பாரதி நான் செய்ய வேண்டிய சேவைகளை செய்து முடித்துவிட்டு தான் இந்த ஊரை விட்டு போவேன் என கூறுகிறார். அதே நேரத்தில் வென்பா ஜெயிலில் இருக்க இரண்டு நாள் லீவு முடிந்து வேலைக்கு வரும் ஜெயிலரிடம் அங்கே பணியில் இருக்கும் காவல் பெண்கள் புகார் தெரிவிக்க, வெண்பாவுக்கு பாடம் புகட்டாமல் விடமாட்டேன் என உள்ளே செல்ல வென்பா கண்ணுக்கு அவர் கண்ணம்மா போலவே தெரிவதால் அவரையும் கண்ணம்மா என நினைத்து வெண்பா அடித்து துவைத்து அனுப்புகிறார். ஆக்ரோஷமாக சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறார். வெண்பாவிடம் இருந்து தப்பித்து வெளியே வந்த ஜெயிலர் உன்னை என்ன செய்கிறேன் பார் என கூறிக்கொண்டு செல்கிறார்.

ஹேமா எடுக்க போகும் முடிவு

ஹேமா எடுக்க போகும் முடிவு

அடுத்ததாக பஞ்சாயத்து கூடி பாரதி புத்திசாலித்தனமாக அரசாங்கத்திடம் அனுமதி வாங்கி இந்த ஊருக்குள்ள நுழைந்து இருக்காரு. அவரை இந்த ஊரை விட்டு ஓட வைக்க வேண்டும். அதுக்காக அவருக்கு இந்த ஊர்ல யாரும் அண்ணம், தண்ணி கூட கொடுக்க கூடாது. யாரும் அவங்க கிட்ட சிகிச்சை எடுத்துக்க கூடாது. அவரை இந்த ஊரை விட்டு தள்ளி வைத்து இருக்கோம். அவருக்கு யாராவது உதவி செஞ்சா அவங்களையும் ஊரை விட்டு தள்ளி வைத்து விடுவோம் என முடிவெடுக்கின்றனர். அதற்குப் பிறகு ஹேமா, லட்சுமி மற்றும் பூஜா என மூவரும் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருக்கும்போது ஹேமாவின் கண்களை கட்டிக்கொண்டு அனைவரையும் தேடிக் கொண்டிருக்கிறார். அப்போது பாரதி அங்கு வர கண்ணை கட்டிக் கொண்டிருந்த ஹேமா பாரதியை பிடித்து பூஜாவை பிடித்ததாக சந்தோஷத்தோடு துள்ளி குதிக்கிறார். பிறகு பாரதி நான் பூஜா இல்லை உன்னோட டாடி என்று சொல்ல ஹேமா அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+