சௌந்தர்யாவால் பாரதியின் திடீர் முடிவு..கண்ணம்மாவுக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி..எதிர்பாராத திருப்பங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாரதிகண்ணம்மா சீரியல் கண்ணம்மாவிடம் லட்சுமி அடுக்கடுக்காக பல கேள்விகளை கேட்டு கொண்டிருக்கிறார். எல்லா பக்கமும் திரும்பும் கேள்விகளால் கண்ணம்மா நிலைகுலைந்து போய் இருக்கிறார்.

இதுவரைக்கும் போனை சுவிட்ச் ஆப் செய்து வைத்திருந்த பாரதி சௌந்தர்யாவிடம் முதல் முறையாக பேச அவர் சொன்ன தகவல்களால் பாரதி அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

பழைய நிலைக்கு மாறும் சௌந்தர்யா

பழைய நிலைக்கு மாறும் சௌந்தர்யா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலின் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ஹேமாவை நினைத்து சௌந்தர்யா தன்னுடைய கணவரிடம் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது பாரதிக்கு திரும்பவும் போன் போட போன் சுவிட்ச் ஆஃப் என வருகிறது .இதனால் எங்க போய் தொலைஞ்சான்னு தெரியலயேன்னு பாரதி மீது கோபபடுகிறார். அதுமட்டுமல்லாமல் 10 வருடங்களுக்கு முன்னாடி பார்த்த சௌந்தர்யாவை இனி பார்ப்பான். அவன் வாயாலே நீ என்னுடைய பொண்ணு என்று சொல்ல வைக்கிறேன் என சௌந்தர்யா ஆவேசமாக பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அஞ்சலி நீங்க செய்றதை செய்ங்க அத்தை நாங்க உங்களுக்கு சப்போர்ட்டாக இருப்போம் என்று கூறுகின்றார்.

அடுத்தடுத்த கேள்விகள்

அடுத்தடுத்த கேள்விகள்

அடுத்ததாக லட்சுமி கண்ணம்மாவிடம் தனக்கு சத்தியம் செய்து தரச் சொல்லி கேட்கிறார். அதற்கு என்ன சத்தியம் என கண்ணம்மா கேட்ட, சத்தியம் செய் அம்மா அதற்கு பிறகு சொல்கிறேன் என்று கூறி, ஏன் ஹேமாவிடம் உண்மையை சொல்லக்கூடாது என்று நினைக்கிறீர்கள். எதற்காக நீங்களும் அப்பாவும் பிரிஞ்சீங்க? உங்களுக்குள்ள என்ன பிரச்சனை? ஏன் எங்கள பொண்ணா ஏத்துக்க மாட்டாரு? ஏன் பேச மாட்டார்? என அடுத்தடுத்த கேள்விகளை கேட்டுக் கொண்டிருக்கிறார். லட்சுமியின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் கண்ணம்மா லட்சுமியை அடிக்க கை ஓங்குகிறார். இப்படி எல்லாம் மாத்தி மாத்தி கேள்வி மேல கேள்வி கேட்டா? நான் எப்படி தான் சமாளிக்கிறது என கண் கலங்கி அழுகிறார்.

போன் செய்த பாரதி

போன் செய்த பாரதி

ஹாஸ்பிடல் ரூமுக்குள் சென்றால் ஹேமா ஒரு பக்கம் என்னுடைய அப்பா யார் என்று கேட்கிறாள். வெளியே வந்தால் ஏன் உண்மையை சொல்ல வேண்டியதானே என்று அத்தை மாமா கேக்குறாங்க, அடுத்ததாக லட்சுமி எதற்காக உங்களுக்குள் பிரச்சனை என்று கேட்கிறார். நான் என்ன செய்வது என்று கண்ணம்மா புலம்பி கொண்டிருக்கிறார். அப்போது டிஎன்ஏ டெஸ்ட் கிடைத்ததும் பாரதி சௌந்தர்யாவுக்கு போன் போட சௌந்தர்யா அவரிடம் கோபமாக பேசி கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் என்ன நடந்தது என தெரியாத பாரதி என்ன ஆச்சி என மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.ஹேமா காணாமல் போய் கடத்தப்பட்டு பின்பு மீட்கப்பட்ட தகவலை சொல்கிறார்.

பாரதி எடுத்த நல்ல முடிவு

பாரதி எடுத்த நல்ல முடிவு

ஆனால் இவ்வளவு பிரச்சனைகளுக்கு பிறகும் ஹேமா கண் முழித்ததும் என்னுடைய அப்பா யாரு என்று தான் கேட்கிறாள். நாங்கள் என்ன பதில் சொல்றது என சொல்ல பதறிப் போன பாரதி, நீங்கள் மருத்துவமனையில் தானே இருக்கீங்க. நான் இன்னும் நான்கு மணி நேரத்தில் அங்கே இருப்பேன் நான் இங்கே வந்த வேலை நன்றாக முடிந்து விட்டதுய என்னுடைய வாழ்க்கையில் இனி பிரச்சனையே இல்லை என்று பொதுப்படையாக கூறுகிறார். குழப்பத்தோடு சௌந்தர்யா நீ எதற்காக டெல்லி போன, எதுக்காக போனை சுவிட்ச் ஆப் பண்ணி வச்சிருக்க? என கேட்க அது எதுவும் என்கிட்ட கேட்காதீங்க, என் சூழ்நிலை அப்படி, எல்லாத்துக்கும் நேரில் வந்து விளக்கம் சொல்கிறேன் என்று கூறுகிறார். பின்பு அவசர அவசரமாக சென்னைக்கு கிளம்புகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+