
மொத்த திரைப்பட வில்லிகளின் கேரக்டரையும் காட்டி மிரட்டிய வெண்பா...கடைசியில் காத்திருந்த ஆப்பு
சென்னை: பாரதி கண்ணம்மா சீரியல் முடிவடைய இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில், தான் இதுவரைக்கும் பாரதிக்கு எதிராக செய்த அத்தனை செயல்களையும் வெண்பாவே ஒத்துக்கொண்டார்.
வெண்பாவின் சூழ்ச்சிகளில் மாட்டியிருந்த பாரதி கடைசியில் எதிர்பாராத முடிவை எடுத்திருக்கிறார்.
கார்த்திகை தீபம் சீரியலில் நடிக்கும் தீபாவின் மறுபக்கம்."அந்த பிரபலத்தால்" தான் வாய்ப்பு கிடைத்ததாம்

வெண்பா சொன்ன உண்மைகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோட் ஆரம்பத்தில் ஏற்கனவே செல்வா மற்றும் துர்கா என இருவரும் பாரதிக்கு எதிராக வெண்பா செய்த செயல்களை சொல்லிவிட்ட காரணத்தால் பாரதி கோபத்தோடு வெண்பாவிடம் எதற்காக என்னுடைய வாழ்க்கையை சீரழிச்சா? என்று கேள்வி கேட்க, வெண்பா சிரித்துக் கொண்டே இருக்கிறார். வெண்பாவை அடிக்க பாய ரோகித்தும் அகிலனும் பாரதியை பிடித்துக் கொள்கின்றனர். பிறகு வெண்பா காலேஜில் படிக்கும் போது ஹேமாவை கொன்றதிலிருந்து கண்ணம்மாவை கொலை செய்ய முயற்சி செய்தது. டெஸ்ட் ரிப்போர்ட்டை மாற்றியது.இரண்டு முறை ஏமாற்றி திருமணம் செய்ய முயற்சித்தது என அனைத்து உண்மைகளையும் சொல்ல மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகிறது.

பிடிச்சி ஜெயில்ல போடுங்க சார்
அதுமட்டுமல்லாமல் எனக்கு பிடித்ததை நான் எடுத்துக்குவேன். அப்படி இல்லன்னா பிடுங்கிப்பேன் என கூறுகிறார். அதோடு பாரதி எனக்கு நீ வேணும் உன்னை இப்பவும் நான் காதலிக்கிறேன். உன்னை என்னைப் போல யாரும் காதலிக்க முடியாது. உன்னை நான் யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று சொல்ல, ஷர்மிளா வெண்பாவை பிடித்து இழுத்து கன்னத்தில் அறைந்து விடுகிறார். அப்போது அங்கே சரியாக போலீஸ் வருகிறது. இங்கே யார் ஃபோன் பண்ணினது என போலீஸ் கேட்க, நான் நான் தான் போன் பண்ணினேன். இங்கே பல கொலைகளை செய்த கொலையாளி வெளியில் சுதந்திரமா சுத்திக்கிட்டு இருக்கா என சொல்ல, யார் என்று போலீஸ் கேட்டதும் இதோ இருக்கிறாளே, நானே பெற்று அதிகமாக செல்லம் கொடுத்து வளர்த்த என்னுடைய மகள் இவளை தான் என்று சொல்கிறார்.

திரும்ப வருவாராம்
போலீசை பார்த்ததும் வெண்பா அதிர்ச்சியானாலும் பிறகு பாரதியிடம் இது ஒரு சின்ன பிரேக் தான். நான் திரும்ப வருவேன் என்று கன்னத்தை தடவியப்படியே சொல்ல, போலீஸ் அவரை கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு செல்கிறது. வெண்பா போலீஸ் ஓடு சென்ற பிறகு நான் தான் வெண்பாவை வளர்க்க தெரியாமல் வளர்த்து விட்டேன். அவள் செய்த தவறுக்கு என்னை மன்னித்து விடுங்கள் என்று ஷர்மிளா பாரதி மற்றும் மொத்த குடும்பத்திடம் மன்னிப்பு கேட்கிறார். அதேபோல என்னுடைய மனைவி செய்த தப்புக்கு நானும் மன்னிப்பு கேட்கிறேன் என்று ரோகித்தும் மன்னிப்பு கேட்கின்றார். இருவரும் பாரதியை கண்ணம்மாவோடு சேர்ந்து வாழ வேண்டும் என்று கூறிக்கொண்டு அந்த இடத்தை விட்டு கிளம்புகின்றனர்.

மன்னிப்பு கேட்ட பாரதி
அடுத்து பாரதி கதறி அழுது கொண்டு இருக்கிறார் தன்னுடைய அப்பாவை பிடித்துக் கொண்டு நான் அவளை ஒரு நல்ல பிரண்டா நினைச்சு தான் பழகினேன். ஆனால் என் வாழ்க்கையில் ஏன் இப்படி எல்லாம் நடக்கணும், என்னுடைய மொத்த வாழ்க்கையும் நான் இத்தனை வருடங்களாக இழந்து விட்டேனே, என்னுடைய மனைவி ஒரு தெய்வம் அவளை நான் தப்பாக நினைத்து விட்டேன் என்று அழுகிறார். அடுத்து கண்ணம்மாவிடம் சென்று உன்னை நான் புரிஞ்சுக்காம இருந்து விட்டேன். என்னை மன்னித்துவிடு என்று காலில் விழுகிறார். ஆனால் கண்ணம்மா எதுவும் பேசாமல் அப்படியே நிற்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.