இந்த அவமானம் தேவையா!? ஹேமா கேட்ட ஒரே கேள்வியால் ஆடிப் போன பாரதி.. எதிர்பார்த்த முடிவு வந்துவிட்டது
சென்னை: பாரதி கண்ணம்மா சீரியலில் ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது .அதில் தன்னுடைய அப்பா யார் என்று ஹேமா பாரதியிடமே கேட்டுக் கொண்டிருக்கிறார்.
டி என் ஏ டெஸ்ட் முடிவு வந்த பிறகு தான் கண்ணமாவை ஏற்றுக்கொள்வேன் என பிடிவாதமாக இருக்கும் பாரதியிடம், ஹேமாவின் கேள்வி மீண்டும் நிகழ்ச்சிக்கு பரபரப்பை பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

எதிர்பார்ப்பை கூட்டிய ப்ரோமோ
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலின் முதல் பாகம் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய இருக்கிறது என்ற தகவல்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தது. இந்த நிலையில் சீரியலின் கதை முடிவடைவது போல இல்லையே, இன்னும் பல உண்மைகள் வெளியே வர வேண்டியது இருக்கிறதே என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். அது குறித்து சமூக வலைத்தளத்தில் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். ஆரம்பம் முதலே இந்த சீரியல் சமூக வலைதளத்தில் நெகட்டிவ் கருத்துகளாலே பாப்புலர் ஆகிவிட்டது. இந்த நிலையில் தற்போது சீரியல் எப்போது முடிவடையும் என்று பலர் எதிர்பார்த்து கருத்து தெரிவித்த வந்த நிலையில் இன்றைய ப்ரோமோ ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பை கூட்டி இருக்கிறது.

அடுத்து அப்பாவை தேடும் ஹேமா
சீரியல் எப்போ முடியும் என்று ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு கண்ணம்மா தான் ஹேமாவின் அம்மா என்பது தெரியும் போது மகிழ்ச்சியாக இருந்தாலும் இன்னும் இந்த சீரியல் முடிவடையில்லையா? சும்மாவே பக்கம் பக்கம் பக்கமாக பேசும் ஹேமா இனி அடுத்தது அப்பா யார் என்று பல பக்கங்களுக்கு எப்போது பேசுவார் என்று கருத்து தெரிவித்து வந்தனர் ரசிகர்கள் எதிர்பார்த்த தருணம் தற்போது வந்துவிட்டது.

ஹேமா கேட்ட அந்த கேள்வி
ஹேமா ஸ்கூலில் இருக்கும் போது டீச்சர் அவரை கூப்பிட்டு பள்ளியில் ஆனுவல் டே ஃபங்ஷன் வரப்போகுது அதுக்கு உன்னோட டாடி கண்டிப்பா வரணும் என்று சொல்லிரு என சொன்னதும், டாக்டர் பாரதி என்னுடைய டாடி கிடையாது என ஹேமா சொல்கிறார். அதற்கு டீச்சர் அப்போ உன்னோட அப்பா யாரு? என கேட்க பாரதிக்கு போன் செய்து ஹேமா எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவீங்களா? என கேட்க, உனக்கு என்ன வேணும் சொல்லு என பாரதி சொல்கிறார. என்னுடைய அப்பா யாருன்னு உங்களுக்கு தெரியுமா ப்ளீஸ் சொல்லுங்க என்னோட அப்பா யாரு ?என கேட்கிறார். இந்த ப்ரோமோ தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் கலாய்க்கப்பட்டு வருகிறது.

இந்த அவமானம் தேவையா பாரதி
இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் பலர் இந்த அவமானம் பாரதிக்கு தேவையா? ஒரு டாக்டராக இருந்துவிட்டு இப்படி எல்லாம் அவமானப்பட வேண்டுமா? என்று கேள்வி எழுப்பியிருக்கின்றனர். அது மட்டும் இல்லாமல் ஒரு வழியா இறுதி கட்டத்தை பாரதி கண்ணம்மா நெருங்கி விட்டது.அதுவே பெரிய ஆறுதல் என்றும் சிலர் பெருமூச்சு விட்டு வருகின்றனர்.இன்னும் ஒரு சிலர் அடுத்தது அப்பா யாரு என்று அடுத்த பாகம் வரைக்கும் இழுத்துக் கொண்டு போய் விடுவார்களோ? என்று பயத்தோடு கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். பாரதி கண்ணம்மா சீரியலுக்கு பலதரப்பட்ட கருத்துக்களும் குவிந்து வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications