ஹேமா கேட்ட உதவியால் கதறும் பாரதி..கண்ணம்மா எடுத்த முடிவு.. வெண்பாவுக்கு கடைசியில் கிடைத்த தண்டனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியிடம் ஹேமா என்னுடைய அப்பா யார் என்று கேள்வியை கேட்டு பாரதியை கதறவிட்டிருக்கிறார்.

மருத்துவமனையில் இருந்து வந்த வெண்பா பழைய மாதிரி கெத்தாக இருக்கலாம் என நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அவருடைய அம்மா ஷர்மிளா அவரை மிரட்டி படிய வைத்திருக்கிறார்.

மனசாட்சியிடமே மல்லு கட்டிய பாரதி

மனசாட்சியிடமே மல்லு கட்டிய பாரதி

பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோட் ஆரம்பத்தில், கண்ணம்மா நான் மீண்டும் சேர்ந்து வாழலாமா என சொன்னதை பாரதி நினைத்துப் பார்த்துக் கொண்டு இருக்கிறார். அப்போது அவருடைய மனசாட்சி அவருக்கு முன்பு வந்து கண்ணம்மா சொன்னது சரிதானே அப்படியே செய்யலாமே எனக் கூற டி என் ஏ டெஸ்ட் ரிசல்ட் வர வரைக்கும் எந்த முடிவும் எடுக்க மாட்டேன் என பாரதி சொல்லி கொண்டிருக்கிறார். அவருடைய மனசாட்சி ஒருவேளை டிஎன்ஏ டெஸ்டில் ரிசல்ட் பாசிடிவ் என வந்தால் கண்ணம்மா அப்போது இதே நிலைமையில் இருந்து உன்னை ஏற்றுக்கொள்வாள் என்று எப்படி சொல்ல முடியும்? அவள் உன்னை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் என்ன செய்வாய் என்று கேள்வி கேட்க, என்ன நடந்தாலும் பரவாயில்லை ஆனால் நான் என்னுடைய முடிவிலிருந்து இனி மாற மாட்டேன் நான் உலகத்திலேயே அதிகமாக நம்புனது என்னுடைய அம்மாவையும் வெண்பாவையும் தான் ஆனால் வெண்பாவே என்னை ஏமாற்றி விட்டாள் .அதற்குப் பிறகு யாரையும் என்னால் நம்ப முடியவில்லை என்று கூற இனி உன் வாழ்க்கை உன் கையில் என சொல்லி மனசாட்சி மறைகிறது.

லட்சுமியின் சாமர்த்தியம்

லட்சுமியின் சாமர்த்தியம்

அடுத்த பக்கத்தில் ஹேமா ,லட்சுமி இருவரும் ஹோம் ஒர்க் செய்து கொண்டிருக்கும்போது கீழே கண்ணம்மா கதவை திறக்கும் ஓசை கேட்கிறது. லட்சுமி எழுந்து சென்று கீழே போய் கண்ணம்மாவிடம் ஸ்கூலில் நடந்த விஷயங்களை சொல்ல, அவர் அப்பா பத்தி கேட்டா நீ சமாளிச்சுக்க என கூறுகிறார். நீ எதுவும் அப்பாவை பற்றி சொல்லலையா? என கண்ணம்மா கேட்க, நான் எதுவுமே சொல்லவில்லை அப்பா பற்றி கேட்டால் அம்மா கோபப்படுவார் என்று மட்டும்தான் சொல்லி வைத்திருக்கிறேன். நீயும் அதுபோல சொல்லிவிடு என்று லட்சுமி ஒன்றும் நடக்காதது போல, ஹேமா முன்பு நின்று கொண்டு தண்ணி வேண்டுமா? என கேட்டு தண்ணி எடுப்பதற்கு சென்று விடுகிறார் கண்ணம்மா குழப்பத்தோடு வீட்டிற்குள் வந்து ஹேமாவின் அருகில் அமர்கிறார்.

கதறி அழும் கண்ணம்மா

கதறி அழும் கண்ணம்மா

என்னுடைய ஹாண்ட் ரைட்டிங் குட்டி குட்டியா இருக்குது, உங்க எழுத்து பெருசா இருக்கும் உங்களை போல லட்சுமி எழுதுகிறார் என்றால், எழுத்து எல்லா ஜீனில் இருந்து தான் வருமாம் அப்போ நான் அப்பா மாதிரி எழுதறேனா ?என்னோட அப்பா எங்க இருக்கிறார். யார் என்று கேள்வியை கேட்க கண்ணம்மா லட்சுமியை கத்தி கூப்பிட, லட்சுமி பயந்தபடி முன்பு வந்து நிற்க, உன்னோட அப்பா யாரு? எனக்கு கேட்க நீங்கதான் அம்மா என்று லட்சுமி பயந்தபடி கூற அதை பார்த்து ஹேமாவும் பயந்து விடுகிறார். இனி என்னிடம் அப்பாவை பற்றி கேட்கக் கூடாது அப்பாவும் உனக்கு நான் தான் அம்மாவும் நான் தான் என்று ஹேமாவிடம் சொல்லிக்கொண்டு ரூமுக்குள்ளே சென்று கண்ணம்மா அழுகிறார். நீ பாரதியை வெறுத்து ஒதுக்கிட்ட எப்படி நான் உன்கிட்ட அவர்தான் உன்னுடைய அப்பா என்று சொல்ல என கண்ணம்மா அழுது கொண்டிருக்கிறார்.

ஹேமாவால் கதறும் பாரதி

ஹேமாவால் கதறும் பாரதி

அடுத்ததாக ஹாஸ்பிடல் இருந்து வரும் வெண்பாவுக்கு சாந்தி ஆரத்தி எடுக்க சர்மிளா ஆரத்தி தட்டை தட்டி விட்டு குழந்தையை அபார்ஷன் பண்ணிக்கிட்டு வந்திருக்க இவளுக்கு ஆர்த்தியா எனக் கூறுகிறார். பின்பு ரோஹித் வெண்பா ரூம்பில் தான் இருப்பார் என சொல்ல கண்டவனை எல்லாம் என் ரூமில் இருக்கக் கூடாது என வெண்பா ஆவேசமாக பேச வக்கீலுக்கு போன் போட்டு கருகலைப்பு செய்த கேஸை மீண்டும் எடுக்க சொல்ல, வெண்பா பயந்து போய் ரோகித் ரூம்பில் இருக்கட்டும் என ஒப்புக்கொண்டு இருக்கிறார். அடுத்ததாக ஹேமா பாரதிக்கு போன் போட்டு எனக்கு ஒரு உதவி செய்வீங்களா? எனக்கேட்ட பாரதி ஆவலோடு என்ன சொல்லு என கேட்க என்னுடைய அப்பா யாரு உங்களுக்கு தெரியுமா? சொல்லுங்க என கேட்க எந்த பதிலும் சொல்லாமல் எந்த கேள்விக்கு எனக்கே பதில் தெரியாதோ அதே கேள்வியை என்கிட்டயே கேட்கிறியே என பாரதி அழுது கொண்டே எனக்கும் தெரியாது என்று கூறிவிடுகிறார் .இதனால் ஹோமா அழுது கொண்டே போனை வைத்து விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+