கடைசியில் காப்பாற்றப்பட்ட ஹேமாவால் கிடைத்த அதிர்ச்சி.. ரோகித்திடம் மாட்டிய வெண்பா.. எதிர்பாராத முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாரதி கண்ணம்மா சீரியல் இன்றைய எபிசோட்டில் ஹேமாவை தேடிக் கொண்டிருந்த கண்ணம்மா மற்றும் குடும்பத்தினர் கடைசியில் காப்பாற்றி விட்டனர். ஆனால் ஹேமாவின் தலையிலிருந்து ரத்தம் சொட்டி மயக்க நிலைக்கு போயிருக்கிறார்.

வெண்பாவின் சூழ்ச்சிகளை ரோஹித் தெரிந்து கொண்டு வெண்பாவுக்கு ஷாக் கொடுக்கிறார்.

உதவிக்கு மறுத்த போலீஸ்

உதவிக்கு மறுத்த போலீஸ்

பாரதி கண்ணம்மா சீரியல் இன்றைய எபிசோட் ஆரம்பத்தில் ஹேமா லைவ் லொகேஷன் அனுப்பிய நம்பரில் இருக்கும் போட்டோவில் இருக்கும் நபரை தேடினால் ஹேமா கிடைத்து விடுவாள் என ஒவ்வொரு காரில் குடும்பத்தினர் அனைவரும் தேடி அலைகின்றனர். அகிலன் டோல்கேட்டில் இருந்த காவல்துறையினரிடம் குழந்தை காணாமல் போன செய்தியை கூறி ஹெல்ப் கேட்க அவர்கள் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது நீங்கள் அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் சென்று கம்ப்ளைன்ட் கொடுத்து விட்டு வந்து தேடுங்கள் என்று அனுப்பி வைத்துவிட்டு அவர்கள் ஒரு குற்றவாளியை தொலைத்ததும் அவர்களை தேடிக் கொண்டிருக்கின்றனர்.

ரவுடிகளை மிரட்டும் வெண்பா

ரவுடிகளை மிரட்டும் வெண்பா

கண்ணம்மா குடும்பத்தோடு ஒவ்வொரு வண்டியாக தேடிக் கொண்டிருக்கும் போது லாரியில் இருக்கும் ரவுடிகள் கண்ணம்மா மற்றும் குடும்பத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்து பயந்து இருக்கின்றனர். அப்போது வெண்பா போன் செய்து பார்டர் தாண்டிட்டிங்களா? என கேட்க இன்னும் கால் மணி நேரத்திற்குள் நாங்கள் பாடரை தாண்டி விடுவோம் டோல்கேட்டில் செக்கிங்கில் நின்று கொண்டிருக்கிறோம் என்று சொன்னதும் வெண்பா பயந்தபடியே கண்டிப்பாக கைமாற்றி விடுவீங்களா? அந்த ஹேமா இனி திரும்பி வரவே கூடாது நான் இதுக்கு தான் அப்பவே சொன்னேன் என்று ரவுடிகளுடன் கத்திக் கொண்டிருக்கிறார். ரவுடிகள் நாங்கள் எல்லாம் முடித்துவிட்டு போன் பண்ணுகிறோம் என கட் பண்ணி விடுகிறார்கள்.

ஹேமாவை கண்டுபிடித்த குடும்பத்தினர்

ஹேமாவை கண்டுபிடித்த குடும்பத்தினர்

இதே நேரத்தில் லைவ் லொகேஷன் முடிய இன்னும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் வண்டி மூவ் ஆகின்றது. இதனால் எந்த வண்டி நகர்கிறது என்பதை வைத்து தேடியப்படியே லாரியை சுற்றி வளைக்கின்றனர். அந்த வண்டியில் இருந்து ரவுடிகள் அகிலனை அடித்துக் கொண்டிருக்கும் போது கண்ணம்மா ஓடி சென்று அங்கே இருந்த போலீசை கூட்டிக்கொண்டு வர ரவுடிகள் தப்பி ஓடுகின்றனர் .அடுத்து வண்டியின் பின்னாடி இருந்த ஹேமாவை காப்பாற்றி எதற்காக வீட்டை விட்டு வெளியே வந்த என கண்ணம்மா அழுதபடி கேட்க, இனி உன்னை விட்டு நான் எங்கேயும் செல்ல மாட்டேன் அம்மா என்று ஹேமா சொல்லிக் கொண்டிருக்கும்போதே மயக்கமாக அப்போதுதான் தலையில் அடிபட்டு இருப்பதை குடும்பத்தினர் பார்க்கின்றனர். உடனே ஆம்புலன்ஸ் வரவைத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர்.

வெண்பாவை எச்சரித்த ரோகித்

வெண்பாவை எச்சரித்த ரோகித்

அதே நேரத்தில் வெண்பா பார்த்து கேட்டதோடு ரவுடிக்கு போன் போட்டு விசயம் என்ன ஆச்சி என மீண்டும் கேட்க ரவுடிகள் நடந்ததை எல்லாம் சொல்கின்றனர். கண்ணம்மாவும் அவரது ஆட்களும் வந்து ஹேமாவை காப்பாத்திட்டாங்க எங்க ஆளில் ஒருவன் போலீசில் மாட்டிக் கொண்டான் நாங்கள் தப்பித்து விட்டோம் அதனால் இந்த சிம் கார்டை நான் உடைத்து கூற வீசி விடுகிறேன் உங்களிடம் பேச இனி வேற நம்பரிலிருந்து கூப்பிடுகிறேன் என சொல்லி வைக்கிறகின்றனர். இதனால் அதிர்ச்சியாகி தனியாக புலம்பிக்கொண்டு இருக்கிறார். அப்போது சாந்தி வந்து என்ன என கேட்க ஹேமாவை கண்ணம்மா போய் காப்பாற்றி விட்டாள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் .குடிக்க தண்ணி கொண்டுவரேன் என சாந்தி கிளம்பியதும், ரோகித் வந்து என்ன வெண்பா இன்னைக்கு ரொம்ப டல்லா, கோவமா இருக்கே, நேத்திக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்த, நீ ஏதோ தப்பு பண்ணு தானே தெரியுது தப்பு பண்ணுனா பின்னாடி எவ்ளோ பெரிய பிரச்சனை வரும்னு தெரிஞ்சு பண்ணு என அட்வைஸ் கொடுத்து கொண்டு கிளம்புகிறார்.

 ICUவில் இருக்கும் ஹேமா

ICUவில் இருக்கும் ஹேமா

அதே நேரத்தில் டெல்லியில் இருக்கும் பாரதி டோர் லாக் செய்யும்போது கையில் அடிபட்டு ரத்தம் வருகிறது. அதற்கு முதலுதவி செய்து தண்ணீர் குடித்துவிட்டு ஜக் கீழே வைக்கும் போது கண்ணாடி ஜக் கீழே விழுந்து உடைந்து விடுகிறது கண்ணாடி கீழே விழுந்தால் குடும்பத்திற்கு நல்லது இல்லையே என்று அம்மா சொல்லுவாங்களே அப்போ வீட்ல யாருக்காவது பிரச்சினையா? என கேட்போமா என போனை எடுத்த பாரதி வேண்டாம் ரிசல்ட் வந்த பிறகுதான் யாரிடமும் பேச வேண்டும் என்றபடி மீண்டும் போனை வைத்துக் கொண்டிருக்கிறார். இந்த பக்கம் ஹேமாவை ஹாஸ்பிடல் கூட்டி செல்ல அவளை ICUக்கு அழைத்து செல்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+