வெண்பாவின் கேரக்டரை தெரிந்து கொண்ட பாரதி... கடைசியில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே முடிச்சிட்டாங்க
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் முதல் பாகம் கடைசி கட்டத்தில் நெருங்கி இருக்கிறது.
இதுவரைக்கும் வெண்பா செய்து வந்த நாடகத்தையும் அவருடைய கேரக்டரையும் பாரதி கடைசியில் புரிந்து கொண்டார்.
குடும்பத்தின் முன்னிலையில் அனைவருக்கும் வெட்ட வெளிச்சமாக வெண்பாவின் நாடகம் தெரிய வந்ததால் பாரதி எடுத்த முடிவு ரசிகர்களுக்கு எதிர்பார்த்தபடியே இருக்கிறது.

வெண்பாவின் கர்ப்பத்தை பற்றி உளறிய பாரதி
பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசொடின் ஆரம்பத்தில் வெண்பாவின் கழுத்தில் தாலி கட்ட முடிவெடுக்க காரணம் என்னவென சௌந்தர்யா பாரதியின் கன்னத்தில் அறைந்து காரணத்தை சொல்லு என கேட்கிறார் .அதற்கு பாரதி வெண்பா ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறார். அவளை காப்பாற்றுவதற்காக தான் நான் இந்த ஒரு முடிவை விருப்பமில்லாமல் எடுத்தேன் என்று கூறுகிறார். என்ன அவள் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறார் என்று சௌந்தர்யா மேலும் கேட்கும்போது வெண்பா தற்போது கர்ப்பமாக இருக்கிறார் என பாரதி கூறுகிறார். இதை கேட்ட அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

கல்யாணத்துக்கு சம்மதித்த காரணம்
வெண்பாவின் கர்ப்பத்துக்கு நீதான் காரணமா? சொல்லு என சௌந்தர்யா பாரதியிடம் கேட்கிறார். அதற்கு பாரதி இல்லை என்று சொன்னதும் அப்போ எதுக்கு வெண்பா கலுத்தில் தாளிக்கட்ட முடிவு பண்ணுணா என கேட்க? வெண்பா போன மாசம் ஏதோ பார்ட்டிக்கு போயிருக்கா, அப்போ அவளை யாரோ ஒருத்தன் ஜூஸ்ல மயக்கம் மருந்து கலந்து கொடுத்து கெடுத்து இருந்தாங்க, அவளோட கர்ப்பத்துக்கு யார் காரணம் என தெரியாததால் அந்த குழந்தையை கலைக்க மனம் இல்லாமல் குழந்தைக்கு ஒரு சமூக அந்தஸ்து வேண்டும் என எண்ணை தாலி கட்ட சொல்லி வற்புறுத்தினார். இல்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என வெண்பா கூறி தற்கொலை முயற்சி செய்து விட்டாள். அவளை நான் மருத்துவமனையில் சேர்த்திருந்தேன். திரும்பவும் இதே மாதிரி செய்து விடக்கூடாது என்று தான் நான் திருமணத்திற்கு சம்மதம் சொன்னேன் என்று சொல்கிறார்.

ரோஹித் கூறிய உண்மை
உடனே கண்ணம்மா நீ பெத்த குழந்தைக்கு உன்னால அப்பாவாக இருக்க முடியல, நீ எவனோ பெத்த குழந்தைக்கு அப்பாவாக போகிறாயா? என கேள்வி கேட்கிறார். பாரதி பதில் சொல்லாமல் தலைகுனிந்து நிற்கிறார். ஷர்மிளா உன் கர்ப்பத்துக்கு காரணம் யாரு ?என வெண்பாவிடம் கேட்க ரோஹித் நான் தான் என்று நடந்த விஷயங்களை கூறுகிறார் .அது மட்டும் அல்லாமல் இது எல்லாமே வெண்பாவுக்கு தெரியும். நானும் அவளும் தப்பு பண்ணியது என்று ரோஹித் சொன்னதும், பாரதி அதிர்ச்சியாகி ரோகித் சொல்றது உண்மையா? என வெண்பாவிடம் கேட்கிறார். அதற்கு வெண்பா சாரி என்று சொன்னதும் பளார் என கன்னத்தில் அறைகிறார்.

சௌந்தர்யா கேட்ட கேள்வி
நான் உன்னை நல்ல பிரண்டா தான் பார்த்தேன் ஆனா நீ என்னை எப்படி எல்லாம் என்னை யூஸ் பண்ணி இருக்கா? இதுக்கு காரணம் என்று பாரதி வெண்பாவிடம் கோபப்படுகிறார். அதற்கு நீ எனக்கு நல்ல பிரண்ட், உன் மீது காதலால் நான் இப்படி செஞ்சிட்டேன் என வெண்பா கூறுகிறார். உடனே சௌந்தர்யா எல்லா பழியையும் தூக்கி அவ மேல போடாத, அவ யார்கிட்டயோ குழந்தை வாங்கிட்டு வந்து இருக்கான்னு கூட இருக்கட்டும். அவ தாலி கட்ட சொன்னா நீ முடியாதுன்னு சொல்ல வேண்டியது தானே? எனக்கு இன்னும் விவாகரத்து ஆகல, இப்போ உன் குழந்தை தாலி கட்டினால் இரண்டு பேரும் ஜெயிலுக்கு தான் போகணும்னு சொல்ல வேண்டியது தான? இத பற்றி நீ என்கிட்ட, நம்ம குடும்பத்துக்கிட்ட யாருகிட்டயாவது நீ பேசினியா? நாங்க எல்லாம் உனக்காக இருக்க தானே செய்தோம்? என்று திட்டிக் கொண்டிருக்கிறார். சௌந்தர்யாவின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் பாரதி தலை குனிகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோடு முடிவடைந்து விட்டது.












Click it and Unblock the Notifications