அந்த அம்மாவே நான்தான்.. உண்மையை சொன்ன கண்ணம்மா..மீண்டும் முதலில் இருந்தா? முடியல சாமி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் ஹேமாவின் அம்மா நான் தான் என்ற உண்மையை கண்ணம்மா கூறி இருக்கிறார்.
கண்ணம்மா சொன்ன உண்மையை நம்பாத ஹேமா நீங்க என்னிடம் பொய் சொல்கிறீர்கள் என்று மீண்டும் பழைய இடத்திலேயே வந்து நிற்கிறார் .இந்த சீசன் இப்போது முடிந்து விடும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மீண்டும் மீண்டும் ஏமாற்றம் தான் கிடைத்து வருகிறது.

கதறி அழும் ஹேமா
பாரதிகண்ணம்மா சீரியலின் இன்றைய எபிசோட்டின் ஆரம்பத்தில் ஹேமா தன்னை அனாதை ஆசிரமத்தில் கொண்டு விடும்படி கண்ணம்மாவிடம் கெஞ்சி கொண்டிருக்கிறார் .ஹேமாவிடம் இப்படி பேசக்கூடாது என சௌந்தர்யா கூறினாலும் ஹேமா அதை கேட்டப்பாடு இல்லை. அப்பா என்னை சொந்த பெண்ணாக பார்த்ததில்லை. அப்பா அப்போதே சொன்னார் உன்னை ஆசிரமத்தில் இருந்து தான் எடுத்து வந்தார்கள் என்று அதனால் தான் என்னிடம் அவர் பொய் சத்தியம் செய்து விட்டார் என்று கண்ணீர் விட்டு அழுதபடி பேசிக் கொண்டிருக்கிறார். ஹேமாவை சமாதானம் செய்வதற்காக சௌந்தர்யாவும் பேசிக் கொண்டிருக்கிறார்.

அம்மாவே கண்ணம்மா தான்
மீண்டும் மீண்டும் ஹேமா தன்னை ஒரு அனாதை எனக்கு என்று யாரும் இல்லை என்னை கொண்டு அனாதை ஆசிரமத்தில் விட்டு விடுங்கள் என்று பேசிக்கொண்டு இருப்பதால் கண்ணம்மா நான் தான் உன்னுடைய அம்மா என்ற உண்மையை கூறுகிறார். இதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்திருக்கும் போது ஹேமா, இதை நான் நம்ப மாட்டேன். நீங்க பொய் சொல்றீங்க .இவ்வளவு நாள் உங்ககிட்ட கேட்டிருக்கேன் .என்னுடைய அம்மா யாரு என்று என்னுடைய அம்மாவை நினைத்து நான் பல நாட்கள் அழுது இருக்கிறேன் ஆனால் அப்போ எல்லாம் நீங்க ஒன்றுமே சொல்லலையே இன்னைக்கு வந்து நான்தான் உங்க அம்மா என்று சொல்கிறீர்கள் நான் அனாதை ஆசிரமம் போகக்கூடாது என்பதற்காக நீங்க இப்படி சொல்றீங்க என்று கூறுகிறார்.

இரட்டை குழந்தைகள் உண்மை
நான்தான் உன்னை பெத்து எடுத்த அம்மா என்று கண்ணம்மா அழுகிற போது, லட்சுமி தானே உங்களுக்கு பிறந்த பொண்ணு என்று கேட்கவும் நீயும் லட்சுமியும் இரட்டை குழந்தைகள் என கண்ணம்மா சொன்னதும், அப்போ லஷ்மி மட்டும் உங்க கூட இருக்கா? நான் மட்டும் எதற்காக அனாதை ஆசிரமத்தில் இருந்தேன். நானும் உங்க கூட தானே இருந்திருக்கணும் என்று கேட்கிறார் .அப்போது எனக்கு இரண்டு குழந்தை பிறந்தது தெரியாது. யாரோ உன்னை என்னிடம் இருந்து தூக்கிக்கொண்டு அனாதை ஆசிரமத்தில் கொண்டு விட்டு விட்டார்கள் .அதற்கு பிறகு அங்கிருந்து உன்னை சௌந்தர்யா பாட்டி தூக்கிக் கொண்டு வந்து வளர்த்திருக்கிறார்கள். ரொம்ப நாளைக்கு பிறகு தான் எனக்கு நீ என்னுடைய குழந்தை என்று எனக்கு தெரியும் .நான் வந்து உன்னை கூட்டிக் கொண்டு சென்று விடலாம் என நினைத்தேன். அப்போது உன் மீத உன்னுடைய அப்பா அதிகமாக பாசத்தை வைத்திருந்தார்.

மீண்டும் ஆரம்பித்த இடத்திலேயே வந்து விட்டதே
உனக்காக ஒரு பெரிய குடும்பம் இருக்கிறது. உன் மீது பாசமாக இருக்கும் இவரிடமிருந்து உன்னை பிரிக்க வேண்டாம் என்றுதான் நான் தூரமாகவே இருந்து அடிக்கடி உன்னை பார்த்து வந்தேன் என்று கதறி அழுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைந்து இருக்கிறது. சௌந்தர்யா தான் குழந்தையை பிரித்து தூக்கிக் கொண்டு வந்ததையோ, இல்லை மொத்த குடும்பத்திற்கும் ஹேமா தான் தன்னுடைய மகள் என்று தெரியும் என்பதையோ அல்லது பாரதி தான் உன்னுடைய அப்பா என்பதையோ கண்ணம்மா இன்று எதுவும் கூறவில்லை .இனி ஹேமா என்னுடைய அப்பா யார் என்பதை கேட்டு இன்னும் எத்தனை எபிசோடுகள் கடத்த போகிறாரோ? என்று பார்க்கும் ரசிகர்கள் காண்டாகி குழம்பி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications