களைகட்டிய பாரதிகண்ணம்மா திருமணம்... கடைசி நேரத்தில் பாரதி கொடுத்த அதிர்ச்சி.. செமையான முடிவு
பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி மற்றும் கண்ணம்மாவின் திருமண வரவேற்பிற்கு விஜய் டிவி சீரியல் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர்.
சென்னை: பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி மற்றும் கண்ணம்மாவின் திருமணத்திற்கு பாரதி தன்னுடைய கையாலேயே கண்ணம்மாவிற்கு புடவை நெய்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
திருமணத்திற்கு தாலி செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த தங்கம் திடீர் என தொலைந்து போன நிலையில் கண்ணம்மாவின் அம்மாவின் தாலியை கொடுத்து புதிய தாலி செய்வதற்காக பாரதி முடிவெடுத்து இருக்கிறார்.
விஜய் டிவியின் தமிழும் சரஸ்வதியும், நம்ம வீட்டு மீனாட்சி சீரியலில் இருந்து நடிகர்கள் பாரதி மற்றும் கண்ணம்மாவின் வரவேற்பில் கலந்து கொண்டிருக்கின்றனர்.

காணாமல் போன பாரதி
விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசொட்டின் ஆரம்பத்தில் பாரதி காணாமல் போய் இருக்கிறார். அகிலன் மற்றும் கணபதி இருவரும் தேடிக்கொண்டிருக்கின்றனர். பாரதி இரவோடு இரவு முழுக்க எங்கே சென்றார் என தெரியாமல் வீட்டில் இருப்பவர்களிடம் சொன்னாலும் அவர்கள் பயந்து விடுவார்கள் அதனால் நாமே எங்காவது தேடிப் பார்ப்போம் என்று சௌந்தர்யாவிடம் சாக்லேட் வாங்க செல்வதாக ஏமாற்றிவிட்டு வெளியே கிளம்ப இருக்கின்றனர். அப்போது கூட்டத்திற்கு நடுவில் இருந்து பாரதி வருகிறார். பாரதியை பார்த்ததும் கணபதியும் அகிலனும் அதிர்ச்சி அடைகின்றனர். சௌந்தர்யா எங்கே சென்றாய் இவ்வளவு நேரம் என்று கேட்டு மேடையில் உட்கார வைக்கின்றனர்.

மனைவிக்காக நெய்த புடவை
கணபதி பாரதியிடம் நைசாக இரவு முழுக்க எங்கே சென்றீர்கள் என கேட்க இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரியவரும் என்று பாரதி கூறுகிறார். கல்யாண புடவை இன்னும் வாங்கவில்லை எப்படி வாங்குவது என கேட்க அதற்கு நான் ரெடி செய்து விட்டேன் என்று கூறுகிறார் .பிறகு கண்ணமாவும் மேடைக்கு வந்ததும் சடங்கு சம்பிரதாயங்கள் நடைபெறுகிறது. இருவருக்கும் நிச்சயதார்த்த ஓலை வாசித்து திருமணத்திற்கு புடவை கொடுக்க கூறுகின்றனர். அப்போது பாரதி கொடுத்த புடவையை பார்த்து அனைவரும் அதிசயப்படுகின்றனர். மிகவும் அழகாக இருக்கிறது என்று பலர் பாராட்டிக் கொண்டிருக்கும்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் பாரதி தான் இந்த புடவையை தன் கையாலே கண்ணமாவுக்காக நெய்து கொண்டு வந்திருக்கிறார் என்று கூறுகிறார்.

பாரதி கொண்டு வந்த தாலி
அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. பாரதியின் செயலை பார்த்து கண்ணம்மா தனியாக நின்று மனதிற்குள்ளே ரசித்தபடி புடவையை பார்த்துக் கொண்டிருக்க, பாரதி வந்து கண்ணம்மாவிடம் புடவை எப்படி இருக்கிறது என கேட்க, கண்ணம்மா ரொம்பவே அழகாக இருக்கிறது என்று கூறுகிறார். பிறகு ஊர்காரர்கள் அனைவரும் வந்து தாலிக்கு பொன் உருக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அப்போது அங்கே வைத்திருந்த தங்கம் காணாமல் போய்விடுகிறது. தங்கத்தை காணவில்லை என்று அனைவரும் பதறிக் கொண்டிருக்கும் போது பாரதி ஒரு செயினை கொடுக்கிறார். இது பழைய தாலியாக இருக்கிறதே என்று ஆசாரி கேட்க, இது கண்ணம்மாவுடைய அம்மாவுடைய தாலி தான் இதிலேயே கண்ணம்மாவுக்கு தாலி செய்து விடுங்கள் என்று பாரதி கூறுகிறார். பிறகு தாலி உருக்கும் நிகழ்ச்சி நல்லபடியாக முடிவடைகிறது.

வரவேற்பில் கலந்து கொண்ட பிரபலங்கள்
இரவு ஊர்க்காரர்கள் அனைவரும் கூடி இருக்க மேடையில் கண்ணம்மா மற்றும் பாரதி என தனித்தனியாக ஆட்டம் போடுகின்றனர். பின்பு லட்சுமியும், ஹேமாவும் டான்ஸ் ஆடுகின்றனர். அப்போது ரோஹித் வருகிறார் அவரை கணபதி வரவேற்று மேடையில் பேச வைக்க, சிறப்பு விருந்தினர்களாக கண்ணம்மா மற்றும் பாரதியின் திருமணத்திற்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நம்ம வீட்டு மீனாட்சி சீரியல் நடிகை டான்ஸ் இருக்கிறது என்று சொல்ல, அங்கே ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடுகின்றனர். பிறகு தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இருந்து அந்த சீரியலில் தமிழ், வசு வசுவின் கணவர் என பலர் வருகின்றனர். அனைவரும் கண்ணம்மா மற்றும் பாரதியை பாராட்டி வாழ்த்துகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைந்து இருக்கிறது.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications