பாரதி சொன்ன வார்த்தை... கோபத்தில் கண்ணம்மா எடுத்த முடிவு.. எதிர்பாராத சீரியலின் கடைசி முடிவு
சென்னை: பாரதிகண்ணம்மா சீரியலில் தலையில் அடிபட்டிருந்த பாரதிக்கு கண்ணம்மாவை நேரில் பார்த்ததும் யார் என்று தெரியாது என கூறிவிட்டார்.
தன்னுடைய குழந்தைகளையும் யார் என்று எனக்குத் தெரியாது என்று பாரதி கூறியதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
பாரதியை குணப்படுத்துவதற்கு கண்ணம்மா பாரதியோடு சேர்ந்து பழக வேண்டும் என்று மருத்துவர் கூறி இருக்கிறார்.
குழந்தைகளை பார்த்ததும் பாரதி இது உங்களுடைய குழந்தையாய் என கேட்டதால் கண்ணம்மா கோபத்தில் இருக்கிறார்.

யாரையும் ஞாபகம் இல்லை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோட்டில் கண்ணம்மாவை மருத்துவமனைக்கு சௌந்தர்யா கூட்டிக்கொண்டு வருகிறார். பாரதி முன்பு கண்ணம்மா நின்று கொண்டிருக்கும்போது, இது யார் என்று மருத்துவர் கேட்க? பாரதி தெரியவில்லை என்று சொன்னதும் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அருகில் இருக்கும் இந்த குழந்தைகள் இரண்டு பேரையும் தெரிகிறதா? என கேட்க பாரதி அகிலன், அஞ்சலியை பார்த்து உங்க குழந்தையா எனக்கேட்க ஹேமா, லட்சுமி இருவரும் கதறி அழுகின்றனர்.

ஆழ்மனதில் பதிந்த பெயர்
அடுத்ததாக பாரதி எனக்கு எதுவும் ஞாபகம் வரலை தலை வலிக்குது என சொல்ல, டாக்டர் நீங்க ரெஸ்ட் எடுங்க என சொல்லி எல்லோரையும் வெளியே அழைத்து வந்து பேசுகிறார் அப்போது பாரதிக்கு எதுவும் ஞாபகத்தில் இல்லை ஆனால் அவருடைய ஆழ்மனதில் கண்ணம்மா என்ற பெயர் மட்டும் பதிந்து போய் இருக்கிறது. அதை வைத்து தான் நினைவுகளை மீட்டெடுக்க வேண்டும் அதனால் அதற்காக கண்ணம்மா உதவி தேவைப்படுகிறது என்று கூறுகிறார்.

மறுத்த கண்ணம்மா
பாரதியுடன் சேர்ந்து கண்ணம்மா வாழ்ந்து நினைவுகளை மீண்டும் ரீ கிரியேட் செய்ய வேண்டும், அதற்காக கண்ணம்மா பாரதியோடு இருக்க வேண்டும் அவருடன் அன்பாக பேசி பழையபடி வாழ வேண்டும் என்று டாக்டர் சொல்ல, அதற்கு கண்ணம்மா எல்லோரும் மருந்து மாத்திரை மூலமாக குணப்படுத்த பாருங்க யார் என்ன சொன்னாலும் என்னால இதெல்லாம் பண்ண முடியாது என சொல்லி குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.

கதறி அழுத சௌந்தர்யா
அடுத்ததாக டாக்டர் அனைவரையும் கூட்டிக்கொண்டு பாரதியின் முன்பு நிற்க வைத்து இவர்கள்தான் உங்களுடைய குடும்பத்தில் உறுப்பினர்கள் என ஒவ்வொருத்தராக அறிமுகம் செய்து வைக்கிறார். கடைசியாக இவர்தான் உங்களுடைய அம்மா என்று சௌந்தர்யாவை அறிமுகம் செய்து வைத்ததும் பெத்த பிள்ளைக்கு எல்லோரையும் அறிமுகம் செய்து வைப்பாங்க, ஆனால் இப்போ உனக்கு அம்மாவையே அறிமுகம் செய்து வைக்கிற நிலைமை வந்துடுச்சு என சௌந்தர்யா அழவும் பாரதி நீங்கதான் என் அம்மானு சொல்றாங்க, நீங்க அழுவாதீங்க நீங்க அழுதா எனக்கு பின் பக்கம் வலிக்குது என சொல்ல சௌந்தர்யா நான் அழவில்லை என சொல்கிறார்.

குழந்தையாக மாறிய பாரதி
பின்பு பாரதி நான் உங்களை அம்மானு கூப்பிடலாமா என கேட்கிறார். அதற்கு தானே நான் ஏங்கி கொண்டு இருக்கிறேன் கூப்பிடு என சௌந்தர்யா சொல்ல, பாரதி அம்மா என கூப்பிடுகிறார். அடுத்ததாக பாரதியை டிஸ்சார்ஜ் செய்து கண்ணம்மா இருக்கும் ஊருக்கு அழைத்து வருகிறார்கள். எல்லோரும் பாரதியை நலம் விசாரிக்க பாரதி எதுவும் தெரியாமல் குழந்தை போல நின்று கொண்டிருக்கிறார். அதை பார்த்து அனைவரும் வருத்தப்படுகின்றனர். இந்த ஊருக்கு எத்தனை பெரிய நல்ல விஷயத்தை எல்லாம் இந்த டாக்டர் செய்தார். ஆனால் அவருடைய நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்று அனைவரும் கூறிக் கொண்டிருக்கின்றனர். அப்போது வீட்டு வாசலில் நின்று பாரதியின் நிலைமையை பார்த்து கண்ணம்மா கண்ணீர் விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications