
கண்ணம்மாவை கடுப்பாக்கி குழப்பும் மனசாட்சி.. பாரதிக்கு வந்து போகும் ஞாபகம்.. இனி நடப்பது இது தானா?
சென்னை: பாரதி கண்ணம்மா சீரியலில் தலையில் அடிபட்டிருந்த பாரதிக்கு கண்ணம்மா உதவி செய்வதற்காக பழைய கண்ணம்மாவாக நெருங்கி பழகிக் கொண்டிருக்கிறார்.
பாரதியின் உடல் நலத்தில் அக்கறை கொண்டு கண்ணம்மா செய்வதை பார்த்து கண்ணம்மாவின் மனசாட்சி கண்ணம்மாவை கிண்டல் செய்கிறது.
கண்ணம்மா ஒவ்வொரு நினைவுகளாக நினைவு படுத்த பாரதிக்கு அடிக்கடி ஞாபகம் வந்து போகிறது.
பாரதிக்கு அடிக்கடி வந்து போகும் நினைவால் குடும்பத்தினர் கவலையில் இருக்கின்றனர்.
செழியன் செய்யும் சூழ்ச்சி.. எழிலுக்கு எதிராக வர்ஷினி போடும் திட்டம்.. ஈஸ்வரிக்கு கிடைத்த அதிர்ச்சி!?

மனசாட்சியின் கேள்வி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோட் ஆரம்பத்தில் கண்ணம்மாவின் மனசாட்சி கண்ணம்மாவின் முன்பு தோன்றி உனக்கு பாரதியின் மீது காதல் வந்துவிட்டது என சொல்கிறது அப்படி எதுவும் இல்லை என்று கண்ணம்மா கோபத்தோடு சத்தம் போடுகிறார். அடுத்து பாரதிக்கு மீண்டும் பழைய நினைவுகளை கொண்டு வரும் முயற்சியில் குடும்பத்தினர் அனைவரும் பிளான் செய்கின்றனர்.

குடும்பத்தினரின் அடுத்த பிளான்
அப்போது பாரதியிடம் காரைக்கொடுத்து அவரை அனுப்பி வைத்து வழியில் கண்ணம்மா லிப்ட் கேட்ட பிறகு சீட்டு பெல்ட் போட தெரியாது என்பதால் பாரதி கண்ணம்மாவுக்கு சீட்டு பெல்ட் போட சொல்லிக் கொடுக்கிறார் அப்போது பழைய நினைவுகள் மீண்டும் வந்து மயங்கி விழுகிறார்.இரவு சாப்பிடும் போது பாரதிக்கு உப்புமா செய்து கொடுத்து பழைய நினைவுகளை கொண்டு வர முயற்சி செய்கின்றனர். அப்போதும் பாரதிக்கு நினைவுகள் வந்து மயங்கி விழுகிறார்.

மனசாட்சியிடம் மறுக்கும் கண்ணம்மா
இந்த நேரத்தில் மீண்டும் கண்ணம்மா முன்னாடி மனசாட்சி தோன்றி பாரதி உன்னை எப்படி காதலிக்கிறார் என்பதை பார்த்துக்கொள் என சொல்ல, நான் யாரையும் ஏற்றுக் கொள்ள போறதில்லை. மன்னிக்கவும் போறதும் இல்லை என்று கண்ணம்மா கோபத்தோடு கூறிக் கொண்டிருக்கிறார். பின்பு பாரதிக்கு இப்படி அடிக்கடி நினைவு வந்து வந்து போய்க்கொண்டிருக்கிறது. இனி என்ன செய்ய என்று சௌந்தர்யா அல்லது புலம்பி கொண்டிருக்கிறார். அதற்கு கணபதி புது பிளான் போடுவோம் என்று அடுத்த பிளானை தொடங்குகிறார்கள். பாரதி குளக்கரையில் அமர்ந்திருக்கிறார். அப்போது தனக்கு எதுவும் ஞாபகம் இல்லை என்று மீண்டும் குழப்பத்தோடு அமர்ந்திருக்கிறார். அப்போது கணபதி இவர்தான் உங்களுடைய தம்பிஅகிலன்,இவர் அகிலனின் மனைவி, இவர்தான் உங்களை பெற்றெடுத்த அம்மா என்று சௌந்தர்யாவை அறிமுகம் செய்கிறார்.

சௌந்தர்யாவின் ஆறுதல் வார்த்தை
சௌந்தர்யா பாரதியின் நிலைமையை பார்த்து அழுகிறார். அடுத்த நாள் சௌந்தர்யா கோவிலில் அருகே உட்கார்ந்து இருக்க ,அப்போது ஹேமா லட்சுமி இருவரும் வருகின்றனர். இருவரும் அப்பாவை எப்படியாவது குணப்படுத்திருங்க, எங்களுக்கு மீண்டும் அதே பழைய அப்பா வேண்டும் .இப்போ கொஞ்சம் நாளாக தான் அப்பா என்று சந்தோசமாக கூப்பிட்டுக் கொண்டு இருந்தேன். மீண்டும் அவர் லட்சுமி, ஹேமா என எங்கள் இருவரையும் கொஞ்ச வேண்டும் என்று லட்சுமி கூற, சௌந்தர்யா பழையபடி பாரதி உங்ககிட்ட சந்தோசமாக பேசி பழகுவான், இது நடக்கும் என கூறுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.