கண்ணம்மாவை கலங்கப்படுத்திய பாண்டி.. ஊர்க்காரர்களின் செயல்.. பாரதி எடுக்கப் போகும் முடிவால் திருப்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவின் கர்ப்பை பாண்டி அசிங்கப்படுத்தி கண்ணம்மாவை பற்றி ஊருக்குள் தவறாக சித்தரிக்கிறார்.

பாண்டி செயலால் ஊர்காரர்கள் கண்ணம்மாவை சந்தேகப்படுகின்றனர்.

ஊர்க்காரர்களின் கேள்விகளுக்கு தாமரை கோபத்தில் பதில் கொடுத்திருக்கிறார்.

தன்னைப் பற்றிய வதந்தி எதுவும் தெரியாமல் கண்ணம்மா திணறிக் கொண்டிருக்கிறார்.

ஊருக்குள் பரவும் செய்தி

ஊருக்குள் பரவும் செய்தி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோடில் மண்டபத்துக்குள் சமையல் வேலை செய்து கொண்டிருந்த கண்ணம்மா ஸ்வீட் செய்வதற்காக முந்தரி, பாதாம் போன்றவற்றை எடுப்பதற்காக மணமகன் அறைக்குள் நுழைய அங்கிருந்த பாண்டி பாத்ரூமுக்குள் மறைந்து கொள்கிறார். பிறகு கண்ணம்மா தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு வெளியே வந்த பிறகு சிறிது நேரம் கழித்து பாண்டி வெளியே வர அங்கே மண்டபத்தில் இருந்த ஊர்கார இளைஞர்கள் சிலர் பார்த்து இவர்கள் இருவருக்கும் ஏதோ தவறான தொடர்பு இருப்பதாக ஊருக்குள் தகவல் பரவுகிறது.

கண்ணம்மா நெருப்பு மாதிரி

கண்ணம்மா நெருப்பு மாதிரி

ஊருக்குள் சீட்டு அடித்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள் சிலர் பேசிக் கொண்டிருக்கையில் கண்ணமாவை பற்றி தவறான பேச்சு எழுகையில், அந்த பொண்ணு திமிராக அலைந்து கொண்டிருக்கும் அந்த பொண்ணா அப்படி என்று சிலர் கேட்க அது பாவப்பட்ட நமக்கு தான் அப்படி பணக்காரனுக்கு அப்படி கிடையாது என்று கண்ணம்மாவின் கேரக்டரை தப்பாக பேசுகின்றனர். அடுத்ததாக தாமரை ரேஷன் கடைக்கு சென்று இருக்கும் போது அந்த பக்கம் கண்ணம்மா வண்டியில் போக அங்கு இருப்பவர்கள் கண்ணம்மாவின் நடத்தை பற்றி தப்பாக பேச தாமரை வாய்க்கு வந்ததெல்லாம் பேசாதீங்க என் தங்கச்சி நெருப்பு மாதிரி என்று கண்ணம்மாவுக்கு ஆதரவாக சண்டை இடுகிறார்.

பாண்டியின் அடுத்த பிளான்

பாண்டியின் அடுத்த பிளான்

கண்ணமாவை பற்றி ஊர் முழுக்க தப்பாக பேச்சு வர பாண்டி ஊருக்குள் வந்து வண்டியை கண்ணம்மாவின் வீட்டு முன்பு நிறுத்திவிட்டு கோவிலுக்கு சென்று வர அதுவும் அங்கு இருப்பவர்களால் தவறாக பேசப்படுகிறது. வேண்டுமென்றே கண்ணம்மா வீட்டு கதவை பாண்டி தட்டியதும் ஹேமா வந்து கதவை திறக்க தண்ணீர் கேட்டு குடித்துவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். அதைப் பார்த்த ஊர்க்காரர்கள் மாறி மாறி முகத்தைப் பார்த்துக் கொண்டு பேசிக் கொண்டிருப்பதை பார்த்த பாண்டி அங்கே இருக்கும் பாரதியை பார்த்து உன்னுடைய மனைவியை பற்றி நான் எப்படி பெயரை கெடுத்து வைத்திருக்கிறேன் பார் என்று நக்கலாக மனதிற்குள்ளே பேசிக்கொண்டு கிளம்புகிறார்.

சூழ்ச்சி தெரியாத கண்ணம்மா

சூழ்ச்சி தெரியாத கண்ணம்மா

அடுத்ததாக கண்ணம்மா மசாலா பாக்கெட்டுகளை கடைகளுக்கு டெலிவரி செய்ய அங்கு இருப்பவர்கள் மசாலா ஒன்னும் வேண்டாம். இங்கிருந்து கிளம்பு வியாபாரத்தை கெடுக்காதே என திட்டி அனுப்புகின்றனர். இதனால் கண்ணம்மா ஏன் என்னாச்சு எல்லாரும் ஏன் இப்படி மசாலா வேணாம்னு சொல்லி அனுப்புறாங்க என தெரியாமல் முழிக்கிறார். பிறகு பாண்டி சரக்கு அடித்துக் கொண்டிருக்கும் போது அவரது நண்பர்கள் குரூப்பில் உங்களது கதை தான் வந்திருக்கிறது என பேச இன்னொரு நண்பன் கண்ணம்மா நைட்டோட நைட்டாக இந்த ஊரை விட்டு ஓடிடுவா என பேச பாண்டி அப்படி ஓடக்கூடாது ஒன்று எனக்கு வப்பாட்டியா இந்த ஊருக்குள்ள இருக்கணும், இல்லன்னா அவ கண்ணீர் விட்டு கஷ்டப்படணும் என சொல்லுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+