பாரதியின் பாசத்தை பார்த்து ஏங்கும் கண்ணம்மா..சௌந்தர்யாவுக்கு இன்ப அதிர்ச்சி..எதிர்பாராத கடைசி முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாரதிகண்ணம்மா சீரியலில் பாரதியோடு லட்சுமி சேர்ந்து விட்டதால் ஹேமா கோபத்தோடு இருக்க கண்ணம்மா பாரதியின் பாசத்தை பற்றி புரிய வைக்கிறார்.

பாரதியோடு லட்சுமி சேர்ந்து விட்டதை கேட்டு சௌந்தர்யா இன்ப அதிர்ச்சி அடைகிறார்.

கண்ணம்மாவிடம் பாண்டி வாழ்க்கையிலும் வியாபாரத்திலும் இருவரும் பார்ட்னராக சேர்ந்து கொள்ளலாமா என கேட்டதற்கு கண்ணம்மா பாண்டியை கன்னத்தில் அறைந்து விட்டார்.

லட்சுமிக்கு பாரதியின் அறிவுரை

லட்சுமிக்கு பாரதியின் அறிவுரை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலின் இன்றைய எபிசோடில் ஆரம்பத்தில் பாரதி லட்சுமிக்கு சாப்பாடு ஊட்டி கொண்டிருக்கும் போது, லட்சுமி நான் உங்களோடு இருந்த இந்த இரண்டு நாட்களும் எனக்கு ரொம்பவே சந்தோஷமாக இருந்தது நான் உங்க கூடவே இருந்திடவா என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு பாரதியும் நீ கண்ணம்மா கூட இருந்துக்க வாரத்தில் இரண்டு நாள் மட்டும் என்கூட வா, நீ இல்லாமல் கண்ணம்மா ரொம்பவே கஷ்டப்படுவாள் என்று கூறிக் கொண்டிருக்க அதை கண்ணம்மா கேட்டுக் கொண்டே இருக்கிறார். பின்பு வீட்டிற்குள் வந்ததும் ஹேமா லட்சுமியின் மீது கோபமாக இருக்க, லட்சுமி செய்தது தவறு இல்லை அவளுக்கு அவர் அப்பாவிடம் செல்வதற்கு ஆசைப்பட்டால் சென்று வரட்டும் அவள் உனக்கு அக்கா மரியாதை இல்லாமல் பேசக்கூடாது என்று அறிவுரை கூறுகிறார்.

மசாலா பொருளுக்கு வரவேற்பு

மசாலா பொருளுக்கு வரவேற்பு

அடுத்ததாக கடைக்கு சென்று மசாலா பொருட்களை கொடுக்க அந்த கடைக்காரர் கண்ணம்மாவின் மசாலாவிற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. எல்லாமே விற்று தீர்ந்து விட்டது .அடுத்த முறை எனக்கு இரண்டு மடங்கு வேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கிறார். கண்ணம்மாவும் சரி கொடுத்து விடுகிறேன் என்று கூறிவிட்டு கிளம்புகிறார். அதை அங்கே இருக்கும் பாண்டி மற்றும் அவருடைய நண்பர்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். கண்ணம்மா சென்றதும் பாண்டியின் நண்பர் அவருடைய மசாலா பொருட்களைக் கொண்டு அந்த கடையில் கொடுக்க கடைக்காரர் பாட்டி ஏற்கனவே தந்த மசாலா விற்கவில்லை கொண்டு செல்லு என்று திருப்பிக் கொடுத்து அனுப்புகிறார். இதை பார்த்த பாண்டி கண்ணம்மாவை எப்படியும் சீக்கிரத்தில் பார்ட்னராக மாற்றி விட வேண்டும் என்று கூறி நக்கலாக சிரிக்கிறார்.

விளையாட்டு விபரீதமாச்சி

விளையாட்டு விபரீதமாச்சி

அடுத்ததாக பாரதி, லட்சுமி, கணபதி மூவரும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்க அதை ஹேமாவும் பூஜாவும் பார்த்தபடியே படித்துக் கொண்டிருக்கின்றனர். தாமரை வந்து ஹேமாவும் பூஜாவும் விளையாட செல்லவில்லையா என கேட்க எனக்கு படிக்க வேண்டும் நான் கிளம்ப மாட்டேன் என்று ஹேமா சொல்ல, தாமரை பூஜாவை விளையாட அனுப்புகிறார். விளையாடிக் கொண்டிருக்கும் போது லட்சுமி அடித்த பந்து ஹேமாவின் முகத்தில் பட்டுவிட பாரதி பதறிப்போய் விசாரிக்க யாரும் என்னிடம் பேச வேண்டாம் என்று கோபத்தோடு வேகமாக கிளம்புகிறார். ஹேமாவின் செயலால் பாரதி பீலாக லட்சுமி ஹேமா உங்களை சீக்கிரத்தில் புரிந்து கொண்டு வந்து விடுவாள் என்று ஆறுதல் கூறுகிறார்.

சௌந்தர்யாவுக்கு இன்ப அதிர்ச்சி

சௌந்தர்யாவுக்கு இன்ப அதிர்ச்சி

அடுத்ததாக லட்சுமி வீட்டில் இருக்கும்போது சௌந்தர்யா பாரதிக்கு போன் செய்கிறார். லட்சுமி ஃபோனை எடுத்து பேசியதும் சௌந்தர்யா ரொம்பவே சந்தோஷப்படுகிறார். நான் அப்பா கூடத்தான் இருக்கிறேன். அப்பா கூட வார இறுதி நாட்களும் நான் இருக்கப் போகிறேன்.சீக்கிரத்தில் அம்மாவும் ஹேமாவும் புரிந்து கொள்வார்கள் என்று சொன்னதை கேட்டு சௌந்தர்யா இன்ப அதிர்ச்சியோடு நீ சொன்ன மாதிரியே சீக்கிரமா நடந்துட்டா எனக்கு ரொம்ப சந்தோஷம் தான். நீயாவது பாரதியை புரிஞ்சிக்கிட்டியே அது போதும் என்று கூறி போனை வைக்கிறார்.

பாண்டிக்கு பளார் அடி

பாண்டிக்கு பளார் அடி

அடுத்ததாக இரவு நேரத்தில் கண்ணம்மா தனியாக நடந்து வந்து வந்து கொண்டிருக்கும் போது அவர் அருகில் வந்து பாண்டி காரை நிறுத்துகிறார். பின்பு பாண்டி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு நாம் இருவரும் சேர்ந்து பார்ட்னர் ஆகி விடலாமா?என கேட்க கண்ணமா அதிர்ச்சி அடைகிறார். ஆரம்பத்தில் மசாலா பொருள் விற்பனை செய்வதில் பார்ட்னர் ஆகலாம் என கேட்க, கண்ணம்மா தேவையில்லை நான் தனியாகவே செய்து விடுகிறேன் என்று சொல்ல, நீங்கள் பத்து வருடமாக தனியாக பிரிஞ்சு இருக்கீங்கன்னு கேள்விப்பட்டேன். அதனால நாம ரெண்டு பேரும் வாழ்க்கையிலும் பாட்னராக ஆகலாம் என கேட்க, கண்ணம்மா பாண்டியின் கன்னத்தில் பளார் என அடித்து விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+