கண்ணமாவை பழி வாங்க பாண்டி போடும் திட்டம்.. கதறி அழும் லட்சுமி... இனி நடக்கப்போவது இதுதான்
சென்னை: பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவிடம் பாண்டி தப்பான அர்த்தத்தில் பேசியதால் கண்ணம்மா பாண்டியின் கன்னத்தில் அறைந்து விட்டார்.
தன்னை அடித்த கண்ணமாவை பழி வாங்க வேண்டும் என்று பாண்டி புது பிளான் போட்டிருக்கிறார்.
லட்சுமி பாரதியோடு சேர்ந்து விட்டதால் ஹேமா லட்சுமியின் மீது கோபத்தில் திட்டியதால் லட்சுமி கதறி அழுகிறார்.

பாண்டியை அறைந்த கண்ணம்மா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் இன்றைய எபிசோட்டில் கண்ணம்மாவை தடுத்து நிறுத்தி பாண்டி லைஃப் பார்ட்னராக இருக்க விரும்புவதாக சொல்ல கண்ணம்மா பாண்டியின் கன்னத்தில் பளார் என்று அறைந்து அவனை எச்சரித்து விட்டு கோபமாக வீட்டிற்கு வருகிறார். வீட்டிற்கு வந்ததும் கண்ணம்மாவை பார்த்த தாமரை என்னாச்சி என விசாரிக்க நடந்த விஷயத்தை சொல்கிறார். அந்த பாண்டி ரொம்ப மோசமானவன் அவகிட்ட ரொம்ப ஜாக்கிரதையாக இரு என தாமரை கண்ணமாவை எச்சரிக்கிறார்.

லட்சுமிக்கு பாரதியின் அறிவுரை
அடுத்ததாக ஞாயிற்றுக்கிழமை முடியப்போவதால் பாரதி லட்சுமியை வீட்டுக்கு அனுப்பி வைக்க, லட்சுமி நான் இங்கேயே இருக்கிறேன் என கண்கலங்க பாரதி கோர்ட்டில் சனி ஞாயிறு மட்டும் தான் என்னோடு இருக்கணும்னு தீர்ப்பு சொல்லி இருக்காங்க, அதுவும் இல்லாம நீ என்னோடு இருந்துட்டா அம்மா ரொம்ப கஷ்டப்படுவாங்க, உன்னை எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்தாக என அறிவுரை கூறி அனுப்பி வைக்கிறார். வீட்டிற்கு வந்த லட்சுமி இடம் கண்ணம்மா எதுவும் பேசாமல் இருக்க ஹேமா இங்கே எதுக்கு வந்த அப்படியே போய் விட வேண்டியது தானே என கோபமாக திட்டுகிறார்.

கதறி அழுத லட்சுமி
ஹேமா பேசுவதை கேட்டு அதை நீ ஒன்னும் சொல்லாதே, அம்மா சொல்லட்டும் என கண்ணம்மாவிடம் லட்சுமி அழுது கொண்டே பேச, உன் மேலே எனக்கு எந்த கோபமும் இல்லை ஐ லவ் யூ லட்சுமி என்று கண்ணம்மா சொல்ல லட்சுமி கட்டிப்பிடித்து கொள்கிறார். இவளுக்கு ஐ லவ் யூ சொல்றீங்க என ஹேமா கோபப்பட்டு எழுந்து செல்கிறார். அடுத்ததாக பாண்டி தன்னுடைய நண்பர்களோடு மது அருந்தி கொண்டிருக்கும்போது அந்த கண்ணம்மா என்னை அடித்து விட்டாள் அவளை அசிங்கப்படுத்தனும் என கோபத்தோடு பேசிக் கொண்டிருக்க அவர்களுடைய நண்பர் ஒருவர் ஐடியா கொடுக்கிறார்.

பாண்டியின் புது ஐடியா
மண்டபத்தில் கல்யாண பங்க்ஷன் நடைபெற இருக்கும்போது அங்கே கண்ணம்மா தான் சமையல் செய்ய இருக்கிறார். அந்த கண்ணம்மாவை கடத்தி அவளை தொட்டு அசிங்கப்படுத்து என சொல்ல வேண்டாம், என்னை அறைந்து அசிங்கப்படுத்தின கண்ணமாவை நான் தொடாமலே அசிங்கப்படுத்தனும் என பாண்டி முடிவு எடுக்கிறார். பின்பு அடுத்த நாள் காலையில் பாண்டி கல்யாண மண்டபத்தில் மணமகன் அறைக்குள் ஒளிந்து கொள்ள, சமையல் செய்து கொண்டிருக்கும் கண்ணம்மாவிடம் ஸ்வீட் செய்வதற்கான பொருள் மணமகன் அறைக்குள்ளே இருக்கிறது எடுத்துக் கொண்டு வர சமையல் மாஸ்டர் சொல்ல, கண்ணம்மா அங்கே செல்கிறார். கண்ணம்மா கிளம்பிய செய்தியை நண்பர்கள் பாண்டிக்கு போன் செய்து சொல்ல, கண்ணம்மா இன்னைக்கு உனக்கு இருக்கு என மனதுக்குள் கணக்கு போடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications