கடந்து போன வாழ்க்கை...மீண்டும் திரும்ப ஏங்கும் பாவனி...ரசிகர்களின் ஆறுதல்
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பாவனி ரெட்டி தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள பதிவு ரசிகர்களை பீல் பண்ண வைத்துள்ளது.
Recommended Video
தன்னுடைய கடந்த கால நினைவுகளை நினைத்து ஏக்கத்தோடு அதை மீண்டும் வாழ துடிக்கும் பாவனியின் மனதிற்கு ரசிகர்கள் பலர் ஆதரவு கூறி வருகிறார்கள்.

விஜய் டிவியில் அறிமுகம்
விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியல் மூலமாக சின்னத்திரை ரசிகர்களுக்கு பரிச்சயமான பாவனி ரெட்டி பிக் பாஸ் 5 வது சீசனில் மூலமாக ரசிகர்களை கவர்ந்து விட்டார் . தற்போது 5வது சீசனில் ரன்னர்-அப் வாக மூன்றாவது இடத்தில் இவர் வெற்றி பெற்றுள்ளார். இவருடைய வெற்றிக்கு ரசிகர்களின் அன்பு காரணமாக இருந்து வருகிறது. இவர் ஒவ்வொரு முறையும் எலிமினேஷனில் வரும்போதெல்லாம் ரசிகர்கள் தங்களுடைய வாக்குகளில் பாசத்தை தெரிவித்து இவரை சேவ் செய்து வந்தனர்.

லைவில் ரசிகர்களுக்கு நன்றி
பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு போட்டியாளர்கள் அனைவரும் தங்களுடைய அன்றாட பணிகளை தொடங்கி விட்டனர். பாவனி அவருடைய சொந்த ஊரான கர்நாடகாவிருக்கு சென்றுவிட்டதால் அவருடைய நண்பர்கள் யாரையும் சந்திக்கவில்லை என்று கூறியிருக்கிறார் .இந்த நிலையில் தன்னுடைய ரசிகர்களிடம் லைவில் பேசி அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து இருக்கிறார் .இது அவருடைய ரசிகர்களுக்கு மேலும் எனர்ஜி கொடுப்பதாக இருந்தது. மேலும் விரைவில் ரசிகர்கள் அனைவரையும் சந்திப்பதில் பற்றி இவர் யோசித்து வருவதாகவும் கூறியிருக்கின்றார்.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்வதற்கு முன்பு சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தாலும், ஒரு சில வருடங்களாக சீரியலை விட்டு விலகி இருந்தவர் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வந்தார் .அதன் மூலமாகத்தான் இவர் இளம் ரசிகர்கள் பலருக்கும் ஃபேவரைட் ஆக மாறி இருந்தார் .பிக்பாஸ் வீட்டில் இவருக்கு அதிகப்படியான ரசிகர்கள் ஆதரவு கொடுப்பதற்கு இவர் சமூக வலைத்தளத்தில் வைத்திருந்த செல்வாக்கும் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் இவர் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக மாறத் தொடங்கி இருக்கிறார்.

மனதில் இருக்கும் நினைவுகள்
தனக்கு கோவிட் பாஸிட்டிவ் வந்ததாக இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் அவருக்கு ரசிகர்கள் பலர் ஆறுதல் கூறி இருந்தனர். இந்த நிலையில் அவர் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதால் தன்னுடைய மனதின் நினைவுகள் கடந்த கால வாழ்க்கையை நினைத்து உருகிக் கொண்டிருப்பதை இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் தெரியப்படுத்தியுள்ளார். இவர் தன்னுடைய காதல் கணவர் இறப்பு மற்றும் அதற்கு பிறகு தன்னுடைய வாழ்க்கையில் பட்ட துன்பங்களை பற்றி ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் கூறி இருந்ததால் தற்போது மீண்டும் அந்த நினைவுகளை இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பதிவிட்டுள்ளார்.

ரசிகர்களின் ஆறுதல்கள்
அதில் மீண்டும் இந்த வாழ்க்கையை தேடுகிறது என்று இவர் தன்னுடைய திருமண வீடியோவை டேக் செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஒரு ரசிகர் இவருக்கு ஆறுதலாக இவருடைய கணவர் பிரதீப்பை திட்டியுள்ளார் .இவ்வளவு அழகான ஒரு மனைவியை விட்டு செல்வதற்கு உங்களுக்கு எப்படி மனது வந்தது என்று அந்த ரசிகர் மனமுருகி கூறியுள்ளார். அதையும் தன்னுடைய ஸ்டோரில் வைத்துள்ளார் .இதை பார்த்ததும் பாவனியின் ரசிகர்கள் பலர் இந்த மாதிரி ஃபீல் பண்ணாதீங்க என்று இவருக்கு பல்வேறு ஆறுதல்களை கமெண்டுகளாக அனுப்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications