வருண் பிக்பாஸ் வீட்டிற்குள்... வெளியே வெறித்தனமான ஆட்டம் ஆரம்பம்...கொண்டாடும் ரசிகர்கள்
சென்னை:பிக் பாஸ் வீட்டிற்குள் எல்லா விதத்திலும் அனைத்து போட்டியாளர்களுக்கும் டப் கொடுத்து.. கலக்கி கொண்டிருக்கும் வருண் கதாநாயகனாக அறிமுகமாகும் "ஜோஸ்வா இமை போல் காக்க" திரைப்படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாக இருக்கிறது.
ஆரம்பத்தில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவருவதால் மட்டுமே எதிர்பார்க்கப்பட்டு கொண்டிருந்த இந்தத் திரைப்படம், தற்பொழுது பிக் பாஸ் 5 ல் வருண் கலந்து கொண்டு பிரபலமாகி விட்டதால் படத்திற்கான எதிர்பார்ப்பு இரு மடங்காக கூடியுள்ளது.

பிரபலமான வாரிசு நடிகர்
சென்னையில் பிரபல கல்வி நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் கல்வி நிறுவனங்களின் நிறுவனரான ஐசரி வேலனின் பேரனான வருண் தமிழ் சினிமாவில் சில சூப்பர் ஹிட் படங்களில் சிறு சிறு கேரக்டரில் நடித்திருந்தாலும், பெரிய அளவு அவரால் சினிமாவில் சோபிக்க முடியவில்லை. கதாநாயகனாக நடித்தால் மட்டுமே ஒரு லெவலுக்கு செல்ல முடியும் என்று முடிவு செய்த வருண், ஒருவழியாக தற்பொழுது பிரபல தயாரிப்பாளராக இருக்கிற தனது மாமாவான ஐசரி கணேசனின் தயாரிப்பில் கௌதம் மேனனை இயக்குனராக வைத்து "ஜோஸ்வா இமைபோல் காக்க"என்ற திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆனார்.

கதாநாயகனாக அறிமுகம்
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'என்னை நோக்கி பாயும் தோட்டா' படம் படப்பிடிப்பு முடிந்த பிறகும், ரிலீஸ் ஆவதில் பல பிரச்சனைகளை சந்தித்து வந்தது. பிரச்சினைகள் அனைத்தையும் தனது செல்வாக்கை பயன்படுத்தி சரி கட்டிய ஐசரி கணேஷ் தனது உறவினரான வருணனை கதாநாயகனாக அறிமுகம் செய்வதற்கு கௌதம் வாசுதேவ் மேனன் பயன்படுத்திக் கொண்டார். கௌதம் வாசுதேவ் மேனனும் ஐசரி கணேசன் செய்த உதவிக்கு கைமாறாக உதவுவதற்காக ஒப்புக் கொண்ட படம் தான் "ஜோஸ்வா இமை போல்காக்க.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
பொதுவாக கெளதம் வாசுதேவ் மேனன் படங்கள் என்றாலே பாடல் எல்லாம் பட்டைய கிளப்பி விடும், பிரபல பாடகர் கார்த்திக் இசை அமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் சில நாட்களுக்கு முன் கூட வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தை கௌதம் அவர்கள் முதலில் எடுக்கப்போவதாக சொன்னபோது இது தளபதி விஜய் அவர்களை வைத்து எடுக்க முயற்சி செய்து கைவிடப்பட்ட யோகனன் படம்தான் என்றும்,தலைப்பை மட்டும் மாற்றி தற்பொழுது எடுப்பதாகவும் சில வதந்திகள் இணையத்தில் பரவியது இவர் வதந்தியை குறித்து விளக்கம் அளித்த படக்குழு யோகனன் படத்திற்கும் இதற்கும் துளியும் சம்பந்தம் இல்லை என்றும் இந்தப் படம் பணக்கார பெண் ஒருவருக்கு மெய்க்காப்பாளராக வரும் வருண் அவர்களைப் பற்றிய கதை என்றும் விளக்கம் அளித்திருந்தது.
Recommended Video

டிரைலருக்காக வெயிட்டிங்
வருண் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் ராக்கே என்பவர் கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் யோகிபாபு,டிடி என்று பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் ராக்கே என்பவர் முந்தைய பிக்பாஸ் சீசன் போட்டியாளர் ஆரோவின் காதலி என்பது குறிப்பிடத்தக்கது .ஸ்டைலிஷாக படம் எடுப்பதில் ஸ்பெஷலிஸ்ட் ஆன கௌதம் மேனனின் ஜோஸ்வா படத்தின் ட்ரெய்லருக்காக சமூக வலைதளங்களில் ஒரு பெரும் கூட்டமே காத்துக் கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications