Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வந்த தாமரை...வந்ததும் அவர் வேலையை தொடங்கிவிட்டாரே

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் தாமரை வந்தது அவருடைய ரசிகர்களுக்கு புத்துணர்வை கொடுத்திருக்கிறது.

இதுவரைக்கும் இருந்த தாமரை வேறு என்று சொல்லும்விதமாக கெட்டப்பில் வித்யாசமாக உள்ளே நுழைந்துள்ளார்.

வித்தியாசமான கெட்டப்பில் வருகை

வித்தியாசமான கெட்டப்பில் வருகை

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ஐந்தாவது சீசன் முடிவடைய இன்னும் நான்கு நாட்களே இருக்கும் நிலையில் தற்போது இந்த வீட்டை விட்டு எலிமினேஷன் ஆகி வெளியே சென்ற தாமரை மீண்டும் உள்ளே வந்து இருக்கிறார். அவருடைய வருகை எப்போது இருக்கும் என்று ஆர்வத்தோடு கேட்டுக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இன்றைய ப்ரமோ மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். ஆனால் அவருடைய கெட்டப் பார்த்ததும் வேற லெவல் என்று பலரும் கூறிவருகின்றனர். வரும் போதே மனதில் ஒரு முடிவோடுதான் வந்திருக்கிறாரோ?? என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

வித்தியாசமான செயல்பாடு

வித்தியாசமான செயல்பாடு

தாமரையின் இரண்டாவது என்ட்ரி என்ன மாதிரி இருக்குமோ என்று போட்டியாளர்களுக்கு சிறு கலக்கம் இருக்கத்தான் செய்கின்றது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். தாமரை உள்ளே வரும்போது ஓடி வந்து அணைத்த பாவனியிடம் அவர் சகஜமாக செயல்படவில்லை என்று ஒரு சிலர் கூறி வருகின்றனர். ஆனால் வெளியே வந்ததும் அனைவரும் தன்னை ஒதுக்கி வைத்து தான் இந்த வீட்டிற்குள் இருந்தார்கள். தான் மட்டும்தான் அனைவரிடமும் பாசத்தை காட்டிக் கொண்டிருந்தேன் என்று கூறிக் கொண்டு இருந்ததால் மீண்டும் இந்த வீட்டிற்கு உள்ளே வந்ததும் என்ன செய்யப் போகிறாரோ?? என்று பலரும் ஆர்வத்தோடு பார்த்து வருகின்றனர்.

பாட்டோடு வருகை

பாட்டோடு வருகை

ராஜுவிடம் இவர் குத்தலாக பேசியதை பார்த்ததும் ரசிகர்கள் வெளியே வந்த தாமரை நிலவரத்தை நன்றாக அறிந்து கொண்டது மட்டுமல்லாமல் நிகழ்ச்சியை நன்றாக பார்த்துவிட்டு இப்படி செயல்படுகிறாரா?? என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இது வரைக்கும் இல்லாத வகையில் வித்தியாசமான கெட்டப்பில் தாமரை உள்ளே நுழைந்திருக்கிறார். உள்ளே வரும்போதே மைக்கை பிடித்து, 'மானே மரகதமே என் மனசுக்கேத்த பூச்சரமே' என்னும் பாடலை பாடியபடி உள்ளே வருகிறார். இவருடைய வருகையை பார்த்து சந்தோஷமடைந்த பாவனி ஓடோடி சென்று அவரை கட்டிப்பிடித்து வரவேற்றுள்ளார்.

Recommended Video

    Bigg Boss வீட்டில் Thamarai Selvi வாங்கிய சம்பளம்?? | Bigg Boss பண பேட்டி
    செம ஆட்டம் தான்

    செம ஆட்டம் தான்

    குத்து குத்து கும்மாங்குத்து என்னும் பாட்டுக்கு தாமரை சக போட்டியாளர்களுடன் செம குத்து குத்தியுள்ளார். தாமரை இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வரவேற்பதில் மகிழ்ச்சி என்று பிக்பாஸ் சொல்லும்போது, இவருடைய முகத்தில் ஒரு இறுக்கத்தோடு ரொம்ப ரொம்ப நன்றிங்க சாமி...என்று கூறியிருக்கிறார். அடுத்ததாக ராஜுவிடம் அப்புறம் தம்பி, அக்கா வெளியே சென்றதும் பயங்கர சந்தோஷம் போல இருக்கு...என்று கேள்வியை தொடங்கியிருக்கிறார். புளிசாதம் நல்லா கலக்கி வைத்துவிட்டு போயிருந்தால்... கண்ணுக்குள்ளே நிக்கு அம்மா என்று ராஜு கலாய்த்துக் கொண்டு இருக்கிறார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+