Bigg boss 3 Tamil: மூணு வருஷமா ரிலேஷன்ஷிப்பா... ஐயோடா... லாஸுக்கு ஓகேவாமே!
Recommended Video
சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி, அந்த டிவியின் சூப்பர் டூப்பர் ஹிட் நிகழ்ச்சி.கடந்த இரண்டு சீசன்களை விட, இந்த சீசன் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது
இரண்டாவது சீசனில் காமிரா கான்ஷியஸுடன் ஹவுஸ்மேட்ஸ் இருந்தார்கள்.ஆனால், மூன்றாவது சீசனில் யாருமே காமிரா கான்ஷியஸுடன் இல்லை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.
கடந்த இரண்டு நாட்களாக டாஸ்க் என்று தெருக்கூத்து, பொம்மலாட்டம் என்று நாட்டுப்புற கலைகளைக் கற்றுக் கொடுத்து, அதில் டாஸ்க் வைக்கிறார்கள்.

கவின் காதல்
கவின் முதலில் சாக்ஷியை காதலிச்சார் கவினின் மேல் கிரஷ் என்று சொல்லிக்கொண்டு இருந்த அபிராமியை கவின் உதாசீனப்படுத்தினார். அபிராமி ஒதுங்கிக்கொண்டார். ரூட் கிளியர் என்று சாக்ஷி கவின் காதல் உருவானது. பிரேக் அப் ஆனது.சாக்ஷி வெளியேறிப் போகும் வரை, அழுது அழுது புலம்பினார். அவர் கண் முன்னே கவினும், லாஸும் கைக்கோர்த்து சிரித்து நடப்பதை பாவம் பார்த்து பார்த்து மனம் வெதும்பிப் போனார் சாக்ஷி.

ஒதுங்கினார் ஷெரீன்
கவினிடம் இருந்து விளையாட்டுக்கு பேசுவதைக் கூட தவிர்த்து ஒதுங்கிக்கொண்டார் ஷெரீன். சாக்ஷி, அபிராமி இருவரும் வெளியில் போக, லாஸ் கவினை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். கடந்த வாரம் கமல் சார் வந்தப்போ ஒரு விளக்கப் படம் போட்டு காண்பித்து, மைக்கின் பேட்டரியை கழட்டிவிட்டு பேசும் அளவுக்கு விஷயம் முக்கியமானதாக இருந்தால், வெளியில் போயி பேசலாமேன்னு கமல் ஹாசன் சொன்னார்.

இவ்வளவு எளிதா
கவின் தனது முந்தைய ரிலேஷன்ஷிப் பத்தி லாஸிடம் சொல்லி, அத்தோடு தனது காதலையும் சொல்கிறார். ஒரு ஆண் காதலை இவ்வளவு எளிதில் பெண்களிடம் சொல்லிவிட முடியுமா என்று வியக்க வைக்கிறார் கவின். மூணு வருஷமா ரிலேஷன்ஷிப்ல இருந்தேன்.இப்போ சுத்தமா இல்லேன்னு சொல்லிட்டு போயிட்டாங்க. இனிமே அவங்க என் வாழ்க்கையில இல்லைன்னு சொல்லிட்டு,இனி நீ என்ன முடிவு எடுக்கிறியோ எடுன்னு சொல்லிட்டு லாஸை பார்த்துகிட்டே இருக்கார்.

மற்றதை வெளியில
உங்களுக்கு சரி எண்டால் எனக்கு ஓகேதான்.. மற்றதை வெளியில போயி பேசுவோம்னு சொல்றார் லாஸ். வெளியில, உள்ளே எப்பவுமே நான் இப்படித்தான். இதுல வெளியில போயி பேசறதுக்கு என்ன இருக்குன்னு லாஸ்லியாவைப் பார்த்து பேசுகிறார். நிஜமா கவின் ரொம்ப தில்லா அசால்ட்டா பெண்களை கையாள்கிறார்.
கவின் டேஞ்சரஸ்!
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications