Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அனைவரையும் சிரிக்க வைத்த அமுதவாணனுக்கு இப்படி ஒரு கண்ணீர் கதையா? கலங்க வைத்து விட்டாரே

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது கதை சொல்லும் டாஸ்க் நடந்து வருகிறது. அதில் அமுதவாணனின் கதை கேட்பவர்களை கலங்க வைத்து இருக்கிறது.

பிறப்பதற்கு முன்பே வீட்டில் இவர் ஒரு வேண்டாத குழந்தையாக தான் இருந்திருக்கிறார். ஆரம்ப காலகட்டத்தில் பேசத் தெரியாமல் இருந்த இவர் வளர்ந்து வந்த பிறகு பட்ட அவமானங்களையும் கஷ்டங்களையும் கேட்டு பலருக்கும் வியப்பாகத்தான் இருக்கிறது.

போட்டியாளர்களின் எச்சரிக்கை

போட்டியாளர்களின் எச்சரிக்கை

பிக் பாஸ் ஆறாவது சீசனில் கதை சொல்லும் டாஸ்க் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் கதைகளை கூறி வருகின்றனர். போட்டியாளர்களை கவர்ந்த கதைகளுக்கு மட்டும்தான் அங்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. அதில் அமுதவாணன் தன்னுடைய கதையை சொல்ல துவங்கியிருக்கிறார். அவரிடம் நீங்கள் டேஞ்சர் நிலையில் அடுத்த வாரம் சென்றால் கூட உங்களை ரசிகர்கள் பாதுகாத்து விடுவார்கள் அதனால் உங்களுடைய கதைகளை நாங்கள் நிராகரித்து விடுவோம் என்று சொல்லி தான் அனுப்பி வைத்தனர்.

அப்போதே புறக்கணிக்க காரணம்

அப்போதே புறக்கணிக்க காரணம்

போட்டியாளர்கள் கதை சொல்பவர்களுக்கு மூன்று ரெட் பட்டனை அழுத்தி விட்டால் கதை சொல்பவர்கள் கதையை நிறுத்தி விட வேண்டும். இதுதான் பிக் பாஸ் இன் விதி இதில் ஒரு போட்டியாளர் கூட அமுதவாணன் கதைக்கு பட்டனை அழுத்தவே இல்லை. அந்த அளவிற்கு அனைவரையும் அமுதவாணனின் சோகமான மறுபக்கம் பாதித்து இருக்கிறதாம். அமுதவாணன் குழந்தையாக பிறப்பதற்கு முன்பே அவருடைய குடும்பத்தால் இவர் வேண்டாம் என்றுதான் முடிவெடுத்து இவருடைய அம்மா பல மருந்துகளை சாப்பிட்டு இருந்தாராம்.

விளையாட்டிலும் கெட்டிக்காரர்

விளையாட்டிலும் கெட்டிக்காரர்

இவருடைய குடும்பத்தில் அமுதவாணன் ஆறாவதாக பிறந்திருக்கிறார். ஏற்கனவே ஐந்து குழந்தைகள் இருப்பதால் அமுதவாணனை ஆறாவது வேண்டாம் என்று அம்மா நினைத்திருந்தாராம். கர்ப்பமாக இருக்கும் போது இவருடைய அம்மா இவரை வேண்டாம் என்று மருந்து சாப்பிட்டதால் இவருக்கு சரியாக எட்டு வயது வரைக்கும் பேச வராமல் தான் இருந்திருக்கிறது. சகஜமாக பேசும் வார்த்தைகளை கூட பேச முடியாமல் தான் திணறி வந்திருக்கிறார் .இந்த நிலையில் இவர் 9 ஆம் வகுப்பு படிக்கும் போது படிப்பில் மட்டுமல்லாமல் விளையாட்டிலும் கெட்டிக்காரராக இருந்திருக்கிறார்.

படிக்கிற வயதில் வறுமை

படிக்கிற வயதில் வறுமை

அமுதவாணன் ஒன்பதாம் வகுப்பு படிக்கின்ற வரைக்கும் அவருடைய அப்பா வெளிநாட்டில் தான் வேலை செய்து இருந்திருக்கிறார். அங்கு அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வேலையை விட்டு சொந்த ஊருக்கு வந்த பிறகு தான் இவர்களுடைய வீட்டில் வறுமை தலைவிரித்து ஆட தொடங்கி இருக்கிறது. வெளியே அனைவரும் இவர்கள் வசதியாக இருப்பதாக நினைத்து வந்தாலும் இவர்கள் வீட்டில் கடும் கஷ்டம் இருந்து வந்திருக்கிறது. அதனால் இவர் வேலைக்கு செல்ல தொடங்கி இருக்கிறார்.

போராட்டத்துக்கு பிறகு கிடைத்த வேலை

போராட்டத்துக்கு பிறகு கிடைத்த வேலை

அமுதவாணன் வேலைக்கு செல்வது அவர்களுடைய குடும்பத்தில் யாருக்கும் தெரியாத மாதிரி தான் பார்த்துக் கொண்டாராம். காரணம் தப்பாக யாரும் பேசுவார்கள். இளக்காரமாக பார்ப்பார்கள் என்று இவர் யாருக்கும் தெரியாமல் தான் வேலைக்கு சென்று வந்திருக்கிறார். அந்த நேரத்தில் தான் அமுதவாணனுக்கு கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆடிஷனில் கலந்து கொண்டு எல்லாம் சரியானதும் முதல் எபிசோடில் இவரால் கலந்து கொள்ள முடியாமல் இவருக்கு ஆக்சிடென்ட் ஆகிவிட்டதாம். இதனால் பலமுறை வீட்டில் அழுது இருக்கிறாராம். அதற்குப் பிறகு வெற்றிகள் கிடைத்தாலும் இவருக்கு வருமானம் குறைவாக தான் கிடைத்திருக்கிறது. வெளியே தான் இவர் புகழோடு வளர்ந்து வந்தாலும் இவருக்கு வருமானம் குறைவு தானாம். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் போது அமுதவாணனுக்கு 2000 ரூபாய் வந்த நிலையில் ஜோடி சீசன் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு 500 ரூபாய் அதிகமாக கிடைத்திருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+