விஜய் டிவி பிரபலத்திற்கு பிக் பாஸ் அனுப்பிய ஸ்பெஷல் கிப்ட்.. அப்போ இவர்தான் வைல்ட் கார்ட் என்ட்ரியா?
சென்னை: விஜய் டிவி பிரபலமான நாஞ்சில் விஜயன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் பிக்பாஸில் இருந்து தனக்கு கிப்ட் அனுப்பி இருப்பதாக அந்தக் கிப்டை நாஞ்சில் விஜயன் காட்டி இருக்கிறார்.

இதனால் இவர் தான் இந்த சீசனில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே போகப் போகிறாரா என்ற கேள்விகள் அதிகரித்து வருகிறது. அது குறித்து விரிவாக பார்ப்போம்.
அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி பல மாதங்களாகவே ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே இப்போது பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் ஆரம்பிக்கில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ஆரம்பமான முதல் நாளிலிருந்து சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சம் இல்லாமல் இந்த சீசனம் இருக்கிறது. அதில் முதல் போட்டியாளராக நடிகை அனன்யா எலிமினேஷன் காரணமாக வெளியேற்றப்பட்டார்.
அதைத்தொடர்ந்து பவா செல்லத்துரை தன்னால் இந்த நிகழ்ச்சியில் தொடர முடியவில்லை. தனக்கு உடல்நிலை சரியில்லை என்று காரணம் கூறி அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருந்தார். இந்த நிலையில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறியிருக்கும் நிலையில் இனி அடுத்ததாக வைல்ட் கார்ட் என்டிரியாக யார் உள்ளே நுழைவார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் இருக்கிறது. அதே நேரத்தில் இந்த சீசனில் இதுவரைக்கும் இல்லாத வகையில் இரண்டு வீடு கான்செப்ட் இருக்கிறது.

ஒன்று பிக்பாஸ் வீடு என்றும் என்னென்று ஸ்மால் பாஸ் வீடு என்றும் கூறப்பட்டு இருக்கிறது. இதில் இந்த வார தலைவரின் மனதை கவராத போட்டியாளர்கள் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அதே நேரத்தில் சரியாக டாஸ்க் செய்யாதவர்களும் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இப்படியாக நிகழ்ச்சி பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் பிரபலமாக இருக்கும நாஞ்சில் விஜயன் instagram பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் தனக்காக பிக் பாஸில் இருந்து ஒரு கிப்ட் வந்திருக்கிறது என்று அதை காட்டியிருக்கிறார். அதோடு இதில் என்ன கிப்ட் இருக்கும் என்று நீங்கள் யோசிங்கள் என்றும் கூறியிருக்கிறார். அதே நேரத்தில் நாஞ்சில் விஜயனுக்கு சமீபத்தில் தான் திருமணம் முடிந்து இருக்கிறது. அதனால் பிக் பாஸில் இருந்து இவருக்கு எதுவும் கிப்ட் வந்து இருக்குமா? என்று ரசிகர்கள் கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.
ஆனாலும் அந்தப் பெட்டியை பார்க்கும்போது உள்ளே இவர் வைல்ட் கார்ட் என்ரியாக அறிமுகமாவதற்கு லெட்டர் எதுவும் இருக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் அது குறித்த அப்டேட்டுகளை இணையத்தில் யாருக்கும் சொல்லக்கூடாது என்ற விதிமுறை இருக்கும் நிலையில் ஒருவேளை நாஞ்சில் விஜயன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இருந்தால் இவர் இதை சொல்லி இருக்க மாட்டார் என்று சிலர் கூறி வருகின்றனர்.
அதை நேரத்தில் இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் முடித்திருந்தது. இந்த நிலையில் இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் புது மாப்பிள்ளை, மனைவியை பிரிய வேண்டி இருக்கும் கவனம் என்று இப்போதே ரசிகர்கள் இவருக்கு எச்சரிக்கையும் செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications