விஜய் டிவி முன்னணி சீரியலில் அறிமுகமாகும் பிக் பாஸ் ஜூலி.. இரண்டாவது சீசனில் இப்படி ஒரு திருப்பமா?
பிக் பாஸ் ஜூலி தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் நடிக்கிறார்.
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட ஜூலி தற்போது விஜய் டிவியில் தென்றல் வந்து என்னை தொடும் எனும் சீரியலில் இரண்டாவது பாகத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த சீரியலில் ஜூலி வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
சின்னத்திரையில் ஜூலியை பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகம்
பிக் பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சி பெரிய அளவில் ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது பிக் பாஸ் நிகழ்ச்சி எப்படி இருக்குமோ என்று ஆரம்பத்தில் இருந்த நிகழ்ச்சியை பற்றி பலரும் பேசிக் கொண்டிருந்த நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு பாப்புலரான ஜூலி இந்த நிகழ்ச்சியில் அறிமுகமான போது அவருக்கு அதிகமான ஆதரவு இருந்த நிலையில் ஓவியாவோடு அவருக்கு ஏற்பட்ட சண்டை சச்சரவுகளுக்கு பிறகு அவருக்கு அதிகமான நெகட்டிவ் உருவாகிவிட்டது.

நெகட்டிவை மாற்றிய அல்டிமேட்
அதற்குப் பிறகு ஜூலி என்ன செய்தாலும் ரசிகர்கள் திட்டிக்கொண்டே இருந்தனர். ஆனாலும் அதை எல்லாம் கவலைப்படாத ஜூலி அடுத்தடுத்த தன்னுடைய பயணத்தை நோக்கி போய்க்கொண்டே இருந்தார். ஒரு செவிலியராக பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமான ஜூலி பிறகு ஒரு மாடலிங் பெண்ணாக மாறிவிட்டார். சமூக வலைத்தளத்தில் இவர் அதிகமான போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டிருந்தார். கடந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக மீண்டும் அறிமுகமாகி தனக்கு இருந்த நெகட்டிவ் கருத்துக்களை எல்லாம் பாசிட்டிவாக மாற்றி இவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருந்தார்.

சீரியலில் அறிமுகம்
இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலை தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் இரண்டாவது பாகத்தில் இன்றிலிருந்து ஜூலி அறிமுகம் ஆகி இருக்கிறார். அவர் நடித்து எபிசோடுகள் இன்று இரவு ஒளிபரப்பாக இருக்கிறது. தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் கடந்த சனிக்கிழமை யோடு முதல் பாகம் முடிவடைந்த நிலையில் இந்த வாரத்தின் திங்கள் கிழமையில் இருந்து இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி இருக்கிறது. இதில் வெற்றி கேரக்டரில் வினோத் நடிக்க, அபி கேரக்டரில் பவித்ரா நடிக்கிறார். இந்த நிலையில் வெற்றியை ஒருதலையாக ஆரம்பத்தில் இருந்தே காதலித்து வந்த கேரக்டரில் ஜூலி நடித்திருக்கிறார்.

சீரியலில் அட்வகேட்
அபியின் மீது கோபத்தில் இருக்கும் வெற்றி அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு வீட்டிற்கு வரும்போது அவரை ஜூலி தான் வீட்டில் கொண்டு வந்து சேர்க்கிறார். அது மட்டுமல்லாமல் அவர் இந்த சீரியலில் ஒரு வக்கீலாகவும் இருக்கிறார். அவருடைய தந்தை எதற்காக வெற்றியிடம் நீ இப்படி எல்லாம் நடந்து கொள்கிறாய் என்று கேட்க, அவருடைய உதவியால் தான் நான் அட்வகேட் ஆனேன் அது உங்களுக்கு மறந்து போய்விட்டதா என்று அவருடைய தந்தையிடம் ஜூலி கேட்கிறார். இந்த நிலையில் தற்போது ஜூலி விஜய் டிவி சீரியலில் நடிக்கும் சீன்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதற்கு ஒரு தரப்பு ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வரும் நிலையில், ஏற்கனவே இது மொக்க சீரியல் இந்த சீரியலில் ஜூலி நடித்தால் சீரியல் சீக்கிரமாக மூடிவிட வேண்டியதுதான் என்று வழக்கம்போல ஒரு சில நெட்டிசன்கள் எப்போதும் கலாய்த்து வருகிறார்கள்.
-
2 வருஷமா போராட்டம்.. 3 மாசத்துக்கு முன்பு பேசினேன்! அப்போது கூட.. பாரதிராஜா பற்றி நெப்போலியன் உருக்கம் -
சிறகடிக்க ஆசை: சத்யாவுக்காக களத்தில் இறங்கிய முத்து.. மீனா கண்டுபிடித்த உண்மை.. சிந்தாமணிக்கு சரியான அடி -
பாக்ஸுக்குள் இருந்த வைரக்கல்... பாரதிராஜாவின் அந்த ஒரு முடிவால் ராதாரவிக்கு ஏற்பட்ட வருத்தம் என்ன? -
சிறகடிக்க ஆசை: சத்யாவை நினைத்து சந்தோஷப்பட்ட விஜயா.. ஆனால் முத்து குடும்பத்திற்கு செக் வைத்த ரோகிணி.. அதிரடி சம்பவம் -
தேனி மண்ணில் பாரதிராஜா உடல் .. கை குழந்தைகளுடன் காத்திருக்கும் பெண்கள்.. பிரபலங்களின் நெகிழ்ச்சி செயல் -
கடைசியில யாருமே இல்லாம போயிட்டீங்க இல்ல? இப்படி அனாதையா.. பாரதிராஜா உடலை கண்டு கதறிய கங்கை அமரன் -
Bharathiraja: இறப்பதற்கு முன் பாரதிராஜா கூறிய கடைசி ஆசை? ரசிகர்களை கலங்க வைக்கும் நினைவுகள்! -
பாரதிராஜாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு.. தீவிர மருத்துவ கண்காணிப்பு! இமய இயக்குனருக்கு என்ன ஆச்சு -
பாரதிராஜா யார்? ஸ்டூடியோக்களில் முடங்கிய திரையுலகை கிராமத்து மண்வாசனைக்கு கூட்டிச்சென்ற கலை வித்தகன் -
சிறகடிக்க ஆசை: ஜெயிலுக்கு போன சத்யா.. மீனா கண்டுபிடித்த ரகசியம்.. இனி தான் பெரிய சம்பவம் இருக்கு! -
உடைந்த பாரதிராஜா.. மகன் மனோஜ்ஜை மறக்க முடியாமல் தேம்பி தேம்பி அழுது, புத்திர சோகத்தாலேயே போன உயிர் -
பாரதிராஜா, இளையராஜா வாழ்க்கையில் நடந்த "ஒரே” துயரம்.. நம்பிக்கை நாயகனுக்கு இப்படியா நடக்கணும்!












Click it and Unblock the Notifications