இணையத்தில் லீக்கான பிக் பாஸ் 6 வீடியோ... அடப்பாவிங்களா இப்படி பண்ணிட்டீங்களே..!!
சென்னை: தற்போது சோஷியல் மீடியாக்களில் வலம் வரும் மீம்ஸ் களை பார்க்கும் பொழுது நம்ம மீம்ஸ் கிரியேட்டர்கள் டைம் ட்ராவல் மிஷின் எதுவும் கண்டுபிடித்து விட்டார்களோ!!?? என்னவோ!!?? என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
அந்த அளவிற்கு அட்வான்ஸ் கிரியேட்டர்களாக மாறி மீம்ஸ் கிரியேட்டர்கள் உருவாக்கியுள்ள மீம்ஸ்கள் பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களையே ஒரு நிமிடம் திகைப்புக்கு உள்ளாக்கி இருக்கும்.

பிக் பிரதர் டூ பிக் பாஸ்
வெளிநாடுகளில் பல பஞ்சாயத்துக்களுடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த பிக் பிரதர் நிகழ்ச்சியின் உரிமத்தை பெற்ற நிறுவனம் பிக் பாஸ் என்று பெயரை வைத்து தமிழ்,தெலுங்கு ஹிந்தி என்று பல மொழிகளில் இந்தியாவில் தயாரித்து வழங்கி வருகிறது.ஹிந்தியில் இந்த நிகழ்ச்சியை சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். அதேபோல் தெலுங்கிலும் முன்னணி நடிகர் நாகார்ஜுனா வெற்றிகரமாக தொகுத்து வழங்கி வந்து கொண்டிருக்கிறார். தமிழில் கமல் தொகுத்து வழங்குவதாலேயே முதலில் பிக் பாஸ் நிகழ்ச்சி நல்ல அறிமுகம் கிடைத்தது.

பிக் பாஸ்னா கமல் கமல்னா பிக் பாஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சி வாரம் முழுவதும் ஒளிபரப்பினாலும் கமல் தோன்றும் சனி, ஞாயிறு கிழமைகளில் அந்த நிகழ்ச்சியின் டிஆர்பி லெவல் வேற லெவலில் இருக்கும். அந்த அளவிற்கு கமலும் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒன்றிணைந்து தமிழ் ரசிகர்களை ஈர்த்து வைத்துள்ளனர்.கமல் தனியாக கட்சி தொடங்குவதற்கு பிக் பாஸ் நிகழ்ச்சி தான் உந்து கோலாக இருந்தது என்றே சொல்லலாம். தமிழில் கமல் நிகழ்ச்சி தொகுத்து வழங்க கிட்டத்தட்ட ஐந்து சீசன்களை வெற்றிகரமாக ஒளிபரப்பிவிட்டது பிக் பாஸ் நிகழ்ச்சி குழு.

லீக்கான பிக் பாஸ் சீசன் 6 வீடியோ
பிக் பாஸ் சீசன் 6க்காண வேலையை ஆரம்பித்து விட்ட விஜய் டிவி அதற்கான ப்ரோமோவை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறது. ஒவ்வொரு முறை பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பும் அந்த சீசனில் கலந்து கொள்ள கூடிய போட்டியாளர்கள் குறித்து யூகங்கள் அடிப்படையில் ஒரு பட்டியல் இணையத்தில் பரவுவது வழக்கமாக இருக்கும். அந்தப் பட்டியல் அந்த நேரத்தில் பிரபலமாகவும், சர்ச்சைக்குரியவர்களாகவும் இருப்பவர்களை அடக்கியதாகவும் இருக்கும்.இந்த முறையும் அவ்வாறு சுவாரசியமான பல பட்டியல்கள் இணையத்தில் பரவி வரத்தான் செய்கிறது. இப்படி பரவி வரும் பட்டியலில் ஒரு சில போட்டியாளர்களின் பெயர்கள் ஒரே மாதிரியாக இருந்து வருகிறது.அவர்களை உறுதியான போட்டியாளர்கள் போல கருதிய மீம்ஸ் கிரியேட்டர்கள் அவர்களை வைத்து மீம்ஸ்களை உருவாக்கியுள்ளனர்.

வேற லெவலில் மீம்ஸ் கிரியேட்டர்கள்
அஸ்வின்,விஜே ரக்சன், குக் வித் கோமாளி ஸ்ருத்திகா இவர்கள் போட்டியாளர்களாக பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பது போன்ற மீம்ஸ்கள் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி குழுவே ஒரு நிமிடம் தங்களுக்குத் தெரியாமல் வேறு ஏதும் சேனல்கள் நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறதோ..!!?? என்று குழம்பும் அளவிற்கு ஒரிஜினலாக கிரியேட் பண்ணி உள்ள மீம்ஸ்கள் பார்ப்பதற்கு நகைச்சுவையாகவும், சுவாரசியமாகவும் இருப்பதாக பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்ததை வைத்து மீம்ஸ் போட்டு வந்த மீம்ஸ் கிரியேட்டர்கள் தற்பொழுது நடக்க போவதாக நினைத்து போட்டுள்ள மீம்ஸ்கள் மூலம் நம்ம மீம்ஸ் கிரியேட்டர்கள் வேற லெவலுக்கு சென்று விட்டார்கள் என்று இனையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications