பிக் பாஸ் தமிழ் 5: முதல்முறையாக பினாலே மேடையில் நடந்த அதிசயம்.. வாழ்த்தும் ரசிகர்கள்
சென்னை: பிக்பாஸ் ஐந்தாவது சீசனின் இறுதி நிகழ்ச்சியில் உணர்ச்சிகரமான செயல்கள் நடந்திருப்பதை ரசிகர்கள் ரசித்துள்ளனர்.
எந்த சீசனிலும் இப்படி ஒரு பாசத்தை பார்த்ததில்லை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

வித்தியாசமான ஐந்தாவது சீசன்
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது ஐந்தாவது சீசன் வெற்றிகரமாக முடிவடைந்திருக்கும் நிலையில் இதற்கு முந்தைய சீசன்களில் எதிலும் இந்த சீசனை போல இல்லை என்று ரசிகர்கள் மட்டுமல்லாமல் போட்டியாளர்களும் கூறி வருகின்றனர். இதற்கு முந்தைய சீசன்களில் போட்டியாளர்கள் ஆரம்பம் முதலே அடித்துக் கொள்வதில் கவனமாகவும், தன்னை சிறப்பாக வெளிக்காட்டிக் கொள்ள வேண்டும் என்று செயல்பட்டுக் கொண்டு இருந்ததாகவும், ஒரு சில நேரங்களில் ரசிகர்கள் குற்றம்சாட்டி கொண்டிருந்தனர்.

ஒற்றுமை குறையவில்லையே
ஐந்தாவது சீசனின் ஆரம்பத்திலிருந்து போட்டியாளர்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்தும், பல நேரங்களில் சண்டை வந்தாலும் அதை அடுத்த நிமிடமே மறந்து ஒன்றுகூடி விடுவதும் இவர்களுடைய சிறப்பு அம்சமாக இருந்தது. ஒரு சில ரசிகர்கள் இந்த சீசன் மொக்கையாக இருக்கிறது என்று சமூக வலைத்தளத்தில் கலாய்த்துக் கொண்டிருந்தாலும், போட்டியாளர்களுக்குள் இருக்கும் ஒற்றுமை குறைந்ததாக தெரியவில்லை. இது உண்மைதானா அல்லது நடிப்பா என்று ரசிகர்கள் குழம்பும் வகையில்தான் இந்த சீசனில் இருந்து வந்தது.

ஒற்றுமையான செயல்பாடு
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதற்கு முன்பு 4 சீசன்களில் கிராண்ட் பினாலேவை ரசிகர்கள் பார்த்து ரசித்து இருக்கும் நிலையில் எந்த ஒரு சீசனிலும் தற்போதைய ஐந்தாவது சீசனில் நடைபெற்ற மாதிரி ஒரு இறுதி போட்டியில் நடைபெறவில்லை என்று பலர் பெருமையாக கூறி வருகின்றனர். இந்த சீசனில் கலந்துகொண்டு எலிமினேஷன் ஆன போட்டியாளர்கள் பலர் இந்த சீசனில் கலந்து கொள்ளவில்லை. அவர்களுக்கு தவிர்க்க முடியாத காரணங்களால் அவர்கள் வரவில்லை என்று கூறப்பட்டிருந்தாலும், வந்திருந்த போட்டியாளர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தோடு செயல்பட்டது அனைவருக்கும் வியப்பாக இருந்தது.
Recommended Video

மறக்க முடியாத தருணம்
இப்போது ஐந்தாவது சீசனின் டைட்டிலை ராஜூ தட்டி தூக்கிய தருணத்தில் அவருக்கு அடுத்ததாக வந்த பிரியங்கா மேடையிலே கூக்குரலிட்டு ஆரவாரமிட்டது அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. தான் ஜெயித்த மாதிரிதான் பிரியங்கா ராஜூவின் வெற்றியை கொண்டாடிக் கொண்டிருந்தார். பிரியங்கா மட்டுமல்லாமல் சக போட்டியாளர்கள் எழுந்து நின்று கைத்தட்டி உற்சாகம் ஊட்டி இருந்தனர். இந்த ஒரு உற்சாகமும் வரவேற்பும் எந்த ஒரு சீசனிலும் போட்டியாளர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தோடு செய்ததில்லை என்று ரசிகர்கள் பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த ஐந்தாவது சீசன் கடைசி நாளில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications