Bigg Boss: பிக் பாஸ் கம்ரூதினின் முன்னாள் காதலி இந்த சீரியல் நடிகை? ஆனால் இப்போ இப்படி பேசலாமா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்தே சண்டை, சலசலப்புக்குப் பஞ்சமில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. அதிலும், இந்த வாரம் போட்டியாளர்கள் தங்கள் வாழ்க்கைக் கதைகளைப் பகிரும் செஷன், வீட்டுக்குள் பெரிய 'கன்டென்ட் பஞ்சாயத்தையே' கிளப்பியுள்ளது. இதுவரை யாரும் விமர்சிக்கப்படாத நிலையில், நடிகர் கம்ரூதின் சொன்ன பழைய காதலி கதைதான் இப்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

கம்ரூதின் விதிவிலக்கு
பிக் பாஸ் வீட்டில் தங்கள் கஷ்டமான வாழ்க்கைக் கதைகளைச் சொல்லும் போட்டியாளர்களைப் பார்த்து ரசிகர்கள் பொதுவாகப் பரிதாபப்படுவது வழக்கம். ஆனால், கம்ரூதின் கதைக்கு அது நடக்கவில்லை! அதிலும், அவர் தன் காதலி குறித்துப் பேசிய விதமும், உடல்மொழியும் பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
"என்னுடைய காதலியை பிரேக் அப் செஞ்சிட்டேன். ஆனா இப்போ..." என்று அவர் ஏளனமாகக் கை தட்டிய விதம், பிக் பாஸ் வீட்டுக்குள் தான் வந்துவிட்டதைப் பெருமையாகக் காட்டுவதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. வீட்டிற்குள் இருந்த போட்டியாளரான ஆதிரை கூட, "இதெல்லாம் தேவையா?" என்ற தொனியில் உடல் சைகை காட்டியதையும் பார்க்க முடிந்தது.
மகாநதி சீரியல் ஜோடி
கம்ரூதின் தான் காதலித்த அந்தப் பெண், தன்னுடைய சீரியலின் முதல் ஜோடிதான் என்றும் குறிப்பால் உணர்த்தியுள்ளார். கம்ரூதின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'மகாநதி' சீரியலில் குமரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக முதலில் கங்கா கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை பிரதீபா தான். ஆனால் பிரதீபா சில மாதங்களிலேயே காரணம் கூறாமல் சீரியலில் இருந்து வெளியேறியிருந்தார்.
கம்ரூதின் இப்போது சொன்ன காதல் முறிவுதான் பிரதீபா சீரியலில் இருந்து வெளியேறியதற்குக் காரணமாக இருக்கலாமோ என்று ரசிகர்கள் யூகித்து வருகின்றனர்.
அடுத்த வாரமே மீண்டும் நெகட்டிவ்
பிக் பாஸ் வீட்டுக்குள் வந்ததில் இருந்தே கம்ரூதின், திமிராகப் பேசிய விஷயங்கள் மூலம் ஏற்கனவே நெகட்டிவ் விமர்சனங்களைச் சந்தித்து வந்தார். இந்த வாரம் மட்டுமே அமைதியாக இருந்து ட்ரோல்களைக் குறைத்தார். ஆனால், இப்போது மீண்டும் பழைய காதலி குறித்து ஏளனமாகப் பேசி, தேவை இல்லாத நெகட்டிவ் விமர்சனங்களைக் குவித்துக்கொண்டு இருக்கிறார்.
மொத்தத்தில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் 'வாழ்க்கைக் கதை' செஷனும் கடைசியில் ஒரு கன்டென்ட் சண்டையையும், சர்ச்சையையும் மட்டுமே கொடுத்து முடித்திருக்கிறது! ஒருவரைப் பிரேக்கப் செய்ததை மேடையில் வந்து பெருமையாகப் பேசுவதுதான் பிக் பாஸின் புதுமையான 'கன்டென்ட்'டோ? என்று ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications