கடைசி நேரத்தில் ரச்சிதாவிற்கு கணவர் கூறிய அறிவுரை...என்ன இப்படி கூறிவிட்டார்? அதிகரிக்கும் கேள்விகள்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி யில் இருக்கும் ரச்சிதாவிற்கு அவருடைய கணவர் அறிவுரை கூறி பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
இந்த வாரத்தில் ரச்சிதா நாமினேஷன் லிஸ்டில் இருக்கும்போது தன்னுடைய ஆதரவு வழக்கம்போல ரச்சிதாவிற்கு தான் என்று கூறியிருக்கிறார்.
யார் என்ன சொன்னாலும் நாம் செய்வதை செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று ரச்சிதாவை பற்றிய பலருடைய பேச்சுக்களுக்கு பதிலடி கொடுக்க விதமாக தினேஷ் கூறியிருக்கிறார்.

கருத்து வேறுபாடு
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் ரச்சிதா சின்னத்திரை நடிகையாக பலருக்கும் தெரிந்தவர் தான். இவர் சீரியலில் அவரோடு முதல் சீரியலில் நடித்த தினேஷ் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீப காலமாக இவர்கள் இருவரும் பிரிந்து இருக்கும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக ரச்சிதா கலந்து கொண்ட பிறகு ரச்சிதாவிற்கு தொடர்ந்து தன்னுடைய ஆதரவை தினேஷ் கொடுத்து வருகிறார். இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருந்தாலும் இவர்களுடைய குடும்பத்தினர் ஒற்றுமையாக தான் இருக்கின்றனர். ரச்சிதாவின் அம்மா அடிக்கடி ரச்சிதாவை பற்றி தினேஷ் உடன் பேசிக்கொண்டு தான் இருக்கிறாராம்.

ரசிகர்களின் விருப்பங்கள்
அதனால் தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரச்சிதாவின் அம்மா போகும்போது கூட தினேஷ் கொடுத்து அனுப்பிய ரச்சிதாவின் ஃபேவரைட் பூனை குட்டி புகைப்படம் ரச்சிதாவின் கையில் கிடைத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர்கள் இருவரும் மனம் விட்டு பேசி சேர்ந்து வாழ வேண்டும் என்று ரசிகர்கள் விருப்பப் தெரிவித்து வருகின்றனர் .பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் ரச்சிதா எடுத்துருக்கும் முடிவு பற்றி அவருடைய அம்மா ரகசியமாக தங்களுடைய விருப்பத்தையும் தெரிவித்து வந்தார். அது குழந்தை தத்து எடுக்கும் விஷயமாக இருக்கும் என்று பலரும் கருத்து கூறி வருகின்றனர்.

கணவர் வெளியிட்ட கருத்து
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்து ராபர்ட் மாஸ்டர் ரச்சிதாவின் பின்னாடியே சுற்றிக்கொண்டு திரிந்தது பற்றியும் அப்போதே பல சேனல்களுக்கு பேட்டி கொடுத்து தனது கோபத்தையும், ரச்சிதாவின் மீது தனக்கு இருக்கும் நம்பிக்கையும் மற்றும் ரச்சிதாவின் கேரக்டர் பற்றி பல விஷயங்களை பேசிக் கொண்டிருந்தார். இதனாலே ரசிகர்கள் பலரும் தினேஷை பாராட்டி வந்தனர். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவருடைய கேரக்டர் ரசிகர்கள் விரும்பும் வகையில் இருப்பதாக பாராட்டி வந்தனர். அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீரியலிலும் இவர் நடித்துக் கொண்டு இருக்கிறார்.

மனைவிக்கு அறிவுரை
இந்த நிலையில் ரச்சிதா இந்த வாரமும் எலிமினேஷன் லிஸ்டில் இருக்கும் நிலையில் ஒவ்வொரு வாரமும் தன்னுடைய ஓட்டு ரச்சிதாவிற்கு தான் என்பதை உறுதி செய்து அதை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு ரசிகர்களிடம் ரசிகர்களிடம் வாக்கு செலுத்த தொடர்ந்து பதிவிட்டு வருவார். அதே போல தற்போது இந்த வாரமும் ரச்சிதாவிற்கு தன்னுடைய ஓட்டை செலுத்தி, 85 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து உங்களுடைய பாசிட்டிவிட்டியை பரப்புகள், தொடருங்கள், தாங்கள் ரச்சிதாவிற்கு துணையாக நிற்கிறோம் என்ற பதிவை வெளியிட்டு இருக்கிறார். இது ரசிகர்களின் மத்தியில் பல்வேறு பாராட்டுகளை பெற்று வருகிறது. பிரிது இருந்தாலும் அன்பு மாறாமல் தினேஷ் செய்யும் செயலுக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications