ஓட்டு குறைவாகப் பெற்ற போட்டியாளருக்கு கடைசி நேரத்தில் கிடைத்த அதிர்ஷ்டம்.. இப்படி ஒரு மாற்றமா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த வார எலிமினேஷனில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
வாக்குகளின் அடிப்படையில் கடைசி இடத்தில் இருந்து வந்த மணிகண்டன் யாரும் எதிர்பார்க்காத விதமாக சேவ் ஆகி இருக்கிறார். ஆனால் அவருக்கு பதிலாக சற்றும் எதிர்பார்க்காத வேறு ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட இருக்கிறார்.

எதிர்பாராத வெளியேற்றம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு வாரத்திலும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார்கள். கடந்த வாரத்தில் மட்டும் இரண்டு போட்டியாளர் வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் இந்த வாரம் வெளியேற்றப்பட்டியலில் 6 போட்டியாளர்களின் பெயர்கள் இருந்தது. அதில் அசீம், விக்ரமன், ஜனனி, ரட்சிதா, ஏடிகே மற்றும் மணிகண்டன் இருந்தனர். இதில் அன்-அபிஷியல் ஓட்டு அடிப்படையில் இதுவரைக்கும் மணிகண்டன் தான் கடைசி இடத்தில் இருந்து வந்தார். ஆனால் இன்று எதிர்பாராத விதமாக ஏடிகே வெளியேற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

எதிர்பாராததை எதிர்பாருங்கள்
கடந்த சில வாரங்களில் தொடர்ச்சியாக ஏடிகேயின் பெயரும் நாமினேஷனில் வந்து வண்ணமாக இருக்கிறது. இந்த நிலையில் தன்னுடைய விளையாட்டை சிறப்பாக செய்து வந்தாலும் ஏடிகே கடந்த வாரத்தில் அசீம் ரசிகர்களின் பாராட்டை அதிகமாக பெறுவதை குறித்து ஒவ்வொரு வருடமாக புலம்பிக் கொண்டிருந்தார். அது மட்டும் அல்லாமல் அசீமோடு தற்போது நடந்து வந்த சொர்க்கவாசிகள் மற்றும் நகரவாசிகள் டாஸ்கிளும் கூட சண்டையிட்டு வந்தார். ஆனாலும் நிகழ்ச்சியில் சுவாரசியம் சேர்க்கும் போட்டியாளர்களில் ஒருவராக ஏடிகே இருந்து வந்தார். கடைசி வாரம் வரைக்கும் ஏடிகேயும் இருப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் தற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் அவருடைய வெளியேற்றம் அமைந்திருக்கிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

ஓட்டு குறைவு காரணம்
கடந்த வாரத்தில் மணிகண்டன் விக்ரமனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் டாஸ்க் விஷயத்தில் என்னதான் நானும் மைனாவும் தனித்தனியாக விளையாடுகிறோம் என்று சொல்லி வந்தாலும் இவர்களுக்குள் குரூப்பிசம் இருப்பதாகவே ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். பல போட்டிகளில் இவர்கள் ஒருவரை மாற்றி ஒருவர் நாமினேஷன் செய்து கொண்டிருந்தாலும் மணிகண்டன், தனலட்சுமி மற்றும் மைனா நந்தினி உடன் குரூப்பிசத்தில் ஈடுபடுகிறார் என்பது ரசிகர்களின் கருத்தாக இருந்து வருகிறது. இதனாலேயே இவருடைய அன்அபீசியல் ஓட்டிங் குறைவாகவே இருந்து வந்தது.

பயந்ததே நடந்து விட்டது
இதற்கு முதல் முன்பு பல போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு இருந்தாலும் அது ஓட்டின் அடிப்படையில் இருந்து வந்ததாகவும் ஆனால் இப்போது போட்டியின் முடிவு அப்படி இல்லாமல் மணிகண்டனுக்கு பேவராக கடைசி இடத்தில் இருந்த அவரை சேவ் செய்துவிட்டு ஏடிகேவை வெளியேற்றி விட்டார்கள் என்று பலர் கருத்து கூறி வருகின்றனர். ஏற்கனவே இந்த வாரம் ஏடிகே இதை தான் பகிர்ந்து கொண்டு இருந்தார். தான் இந்த வாரம் வெளியேற வாய்ப்பு இருப்பதாக அடிக்கடி கூறி வந்தார் .தற்போது அவர் பயந்தபடியே நடந்து விட்டது என்றும் அவருடைய ரசிகர்கள் பலர் கருத்து கூறி வருகிறார்கள்.
-
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications