Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பகையை மறந்து உறவு கொண்டாட்டம்.. என்னென்ன கதை சொல்றாங்க! விக்ரமன், அசீமிற்கு கிடைத்த பாராட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இன்று 101 வது நாளுக்கான முதல் பிரமோ வெளியாகி இருக்கிறது.

இதுவரைக்கும் பகையோடு இருந்த போட்டியாளர்கள் அதை மறந்து நட்பை கொண்டாடும் விதமாக புது டாஸ்க் தொடங்கி இருக்கிறது.

வானுக்கும் எல்லை உண்டு நட்புக்கு எல்லை இல்லை என்று இதுவரைக்கும் சிலரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை மறந்து இனி அவர்களோடு நட்பு வளர வேண்டும் என்று நட்பு கயிறு கட்டி தங்களுடைய நட்பை வளர்த்து வருகின்றனர்.

இறுதி கட்டத்தில்

இறுதி கட்டத்தில்

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி முடிவடைய இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருக்கிறது. கடைசி வாரத்தில் அடி எடுத்து வைத்திருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில
உள்ளே கடைசியில் ஆறு போட்டியாளர்கள் மட்டுமே மீதம் இருந்தனர். அதில் நேற்று கதிர் பண மூட்டையை எடுத்துக் கொண்டு வெளியேறிவிட்டார். இது யாரும் எதிர் பார்க்காத செயலாக இருந்தது. அதுபோக தற்போது ஐந்து போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டிற்குள் இறுதி கட்டத்தை அடைந்திருக்கின்றனர். அவர்களில் அனைவருமே இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்டில் இருக்கின்றனர் .

முடிவடையாத சண்டைகள்

முடிவடையாத சண்டைகள்

இந்த நிலையில் ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்திருக்கின்றனர். அந்த வகையில் பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் போட்டியாளர்கள் வந்ததும் ஆரம்பத்தில் நிகழ்ச்சி களைகட்டி இருந்த நேரத்தில் நேற்றைய எபிசோட்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில் மகேஸ்வரிக்கும், மணிகண்டனுக்கு ஆரம்பத்தில் சண்டை ஏற்பட அவருக்கு ஆதரவாக அசீம் சேர்ந்து கொள்ள, பிக் பாஸ் வீடு கலவரம் ஆகி சண்டை சச்சரவோடு ஆரம்பத்தில் இருந்தது போலவே மாறிவிட்டது. இது சமூக வலைத்தளத்தில் பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது. ஏற்கனவே ஆரம்பமான முதல் நாளில் இருந்து இப்ப வரைக்கும் சண்டை சச்சரவோடு வலம் வரும் சீசன் இந்த சீசன் தான் என்று ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

நட்பை தொடரலாம்

நட்பை தொடரலாம்

இந்த நிலையில் மீண்டும் விருந்தினராக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த போட்டியாளர்கள் சண்டையில் ஈடுபடுவதை பார்க்கும் போது கடுப்பாக இருக்கிறது என்று ரசிகர்கள் கருத்து கூறிக் கொண்டிருந்த நிலையில் இன்று பிக் பாஸ் இவர்களுக்குள் நட்பை ஏற்படுத்தி விட வேண்டும் என்று புது டாஸ்க் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் வானுக்கும் எல்லை உண்டு நட்புக்கு எல்லை இல்லையே என்று டாஸ்க் வைத்து இதில் இந்த வீட்டிற்குள் ஆரம்பத்தில் இருந்து யாரோடு நட்பை வளர்க்க தவறிவிட்டீர்களோ அவர்களுக்கு இந்த பிரண்ட்ஷிப் பேண்டை கட்டிவிட்டு உங்களுடைய பிரண்ட்ஷிப்பை தொடங்குங்கள் என்று டாஸ்க் லெட்டரில் குறிப்பிட்டு இருக்கின்றனர்.

மாறுபட்ட கருத்துக்கள்

மாறுபட்ட கருத்துக்கள்

அந்த வகையில் நேற்று வரைக்கும் சண்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மகேஸ்வரி இன்று அசீம் இடம் வந்த அன்னையிலிருந்து உங்களோடு எனக்கு பெருசா எந்த கனெக்ட் இல்ல அதற்கு காரணம் ஒரு செல்ப் ரெஸ்பெக்ட் போயிடுச்சே என்ற காரணம்தான். இனி இந்த ஹெட்ரட் வேண்டாம் என்று அசீமுடைய கையில் மகேஸ்வரி பிரண்ட்ஷிப் பேண்டை கட்டி விடுகிறார் .அதனை தொடர்ந்து குயின் சி இந்த வீட்டிற்குள் நான் பிரண்ட்ஷிப்பை வைத்துக் கொள்ள வேண்டாம் என்று நினைத்தது அசீம் தான் அதனால் அவருக்கு கட்டி விடுகிறேன் என்று கூறி இருக்கிறார். அதுபோல ஜிபி முத்து விக்கிரமனுக்கும் எனக்கும் ஆரம்பத்தில் இருந்தே சில கருத்து வேறுபாடு வந்து கொண்டே இருந்தது. அதனால் இனி அது வளர வேண்டாம் என்று கட்டி விடுகிறார். அதைத் தொடர்ந்து சாந்தி மாஸ்டர் அசீமுடைய கையில் கட்டி விட்டு வெளியில் போய் பார்க்கும் போது நீ ஒரு குழந்தை என்று கூறுகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+