டாஸ்க்காக இப்படி செய்யலாமா? கொந்தளித்த மணிகண்டன்.. எதிர்பாராமல் வெளியே செல்பவர்! லீக்கான தகவல்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் மொத்த பூக்களை எல்லாம் எடுத்த அசீம் பற்றி இன்று காரசாரமாக விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
டாஸ்க் முடிந்த பிறகு பூக்களை யார் எடுத்தார் என்று மணிகண்டன் கேட்க அதற்கு கடைசியில் அசீம் உண்மையை ஒப்புக்கொன்டதும் மணிகண்டன் அவரிடம் சரமாரியாக கேள்விகளை கேட்டுக் கொண்டிருக்கிறார்.

சொல்லுங்க பார்ப்போம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இன்றைய 54வது எபிசோட்டில் முதல் ப்ரோமோவில் பூக்களை எல்லாம் எடுத்தது யார் என்று சொல்லுங்கள் என மணிகண்டன் கேட்க, ஒரு குறும்படம் மட்டும் போடுங்க என பிக் பாஸிட்ட கேளு என அசீம் நக்கல் அடித்துக் கொண்டிருக்கிறார். இதை பார்க்கும் போது வடிவேலுவின் காமெடி தான் நினைவிற்கு வருகிறது. ஒரு படத்தில் வடிவேலு யார் திருடியது, என்று கூட்டத்தில் அனைவரும் கேட்க வடிவேலு திருடியது யார் என்று சொல்லுங்கள் பார்ப்போம் என கத்தி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருப்பார். கடைசி வரைக்கும் அவர்தான் திருடினார் என்பதை யாரையும் சொல்லவிடாமல் மிரட்டி கொண்டிருப்பார்.அதுபோலத்தான் அசீம் இன்று செய்து கொண்டிருக்கிறார்.

உண்மையை ஒத்துக் கொண்டாரே
அசீம், நேற்று எபிசோட்டில் உடல்நிலை சரியில்லாமல் திடீரென மயக்கம் போட்டு கீழே விழுந்ததும், அவர் மருத்துவ உதவி பெற்று மீண்டும் வீட்டிற்குள்ளே படுத்து ரெஸ்ட் எடுக்க சொல்லி இருந்தனர். அவர் வீட்டிற்குள்ளே படுத்த பிறகு ஏலியன்ஸ் அணியினர் அனைவரும் தூங்கியதும் பூக்களை எடுத்து ஒளித்து வைத்து விட்டார். அதை குறித்து இன்று டாஸ்க் முடிவடைந்த பிறகு மணிகண்டன் அனைவரிடமும் விசாரித்துக் கொண்டிருக்கிறார். யார் பூக்களை எடுத்தது என்று சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்க, அசீம் பிக் பாஸ் இடம் கேட்க சொல்ல, மைனா பக்கத்தில் இருந்து சில பேர் குறும்படத்திற்காகவே எடுத்துக்கொண்டு வைத்திருப்பார்கள் என்று சொல்ல, மணிகண்டன் அசீம் நீ எடுத்தியா? என கேட்க ஆமாம் நான் தான் எடுத்தேன். எல்லோரும் பாருங்கள் நான் தான் பூவை எடுத்தேன் என்று கத்தி கூறுகிறார்.

வில்லங்கமான கேள்விகள்
இதை சற்றும் எதிர்பார்க்காத மணிகண்டன் நீ செய்தது தவறு என்று கூற, இது டாஸ்க் தானடா என்று அசீம் கூற, டாஸ்க் என்றால் ?நான் உன்னை உள்ளே தூங்க விட்டு இருக்க கூடாது. உனக்கு உடம்பு சரியில்லை என்று தானே உள்ளே தூங்க வைத்தேன் என்று சொன்னதும், அசீம் திணறிக் கொண்டு இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் அப்போ மணிகண்டன் மட்டும் ஏடிகேயிடம் சமரசம் செய்து எல்லோரும் தூங்கலாம் என பேசிவிட்டு காலையில் யாருக்கும் தெரியாமல் கற்களை களவாடியது மட்டும் சரியா? நீங்கள் மட்டும் டாஸ்க்காக விளையாடலாம் அசீம் செய்தால் தப்பா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஒரு குறும்படம் பார்சல்
இன்னும் ஒரு சிலர் மைனா குறும்படம் போட வேண்டும் என்று குறும்படத்திற்காக தான் இப்படி செய்திருப்பார் என்று கூறியதை தொடர்ந்து, அன்று தூங்குற மாதிரி விழித்து இருந்து எல்லோரும் கல்லை களவாடி கொண்டு செல்வதை பார்த்துக் கொண்டுதானே இருந்தீர்கள். அதனால் மைனாவுக்கு ஒரு குறும்படம் பார்சல் என்று கமெண்ட் பாக்ஸ் நிறைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து ஏற்கனவே இன்று வரை ஓட்டு அடிப்படையில் குயின்சி கடைசி இடத்தில் இருப்பதால் குயின்சி தான் இந்த வாரத்தில் வெளியேறி செல்வதற்காக அதிகமாக வாய்ப்பு உள்ளது. அதற்கிடையில் இவர்கள் மாணிக்க கற்களை பாதுகாத்து வைத்திருப்பதால் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படலாம் என்றும் சந்தேகம் கிளம்பி இருக்கிறது.
-
நடிகர் தியாகராஜனுக்கு கார் ஷோரூமில் நடந்த அவமானம்! இப்படி ஒரு பதிலடியை எதிர்பார்க்கலையே! நெகிழ வைத்த தருணம் -
கென் கருணாஸ் சொன்ன ஒரு வார்த்தை.. வம்புக்கு இழுக்கும் ப்ளூ சட்டை மாறன்.. வந்து குவியும் கண்டனங்கள் -
“என் கால் மேல் ஏறி நில்” சூட்டிங் ஸ்பாட்டில் உதயநிதி சொன்ன வார்த்தை! அந்த நொடி எதிர்பார்க்கல! சீரியல் நடிகை ஒபன் -
விஜயால் மது குடிக்காமல் இருக்க முடியாதா? யாரு சொன்னது? கண்முன்னே நடந்த சம்பவம்! சர்ச்சைக்கு அனு மோகன் பதிலடி -
ஐடி விங் மூலமாக வெறுப்பை பரப்புறாங்க.. பொறுப்பு உங்களிடமே உள்ளது தலைவரே! வெளுத்த நடிகை நிவேதா -
யூத் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்..! ப்ளூ சட்டை மாறன் ஒரே வார்த்தையில் இப்படி சொல்லிட்டாரே! -
நடிகை பானுப்ரியாவை வர்ணித்த நடிகருக்கு விழுந்த அடி.. இயக்குநர் செய்த தரமான சம்பவம்! இப்படியும் நடந்ததாம்! -
“இது சிம்பதிக்காக சொல்லல… இதுதான் ரியாலிட்டி!”.. காளிதாஸ் 2 விழாவில் நடிகர் பரத் எமோஷனல் -
சினிமாவை விட்டு விலகும் திரிஷா.. காரணம் இதுதானா? அதிர்ச்சி பின்னணி! லீக்கான தகவல்கள் -
நான் போலீஸ் படங்களை எடுக்காத காரணம் இதுதான்! ஸ்டேஷனுக்குள் இருக்கும் நிலை மாறனும்! பா ரஞ்சித் ஓபன் -
துரந்தர் 2 வசூலில் அதிரடி… 2 நாளில் இத்தனை கோடி வசூல்! உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபீஸ் புயல் சுற்றுதே -
ஜனநாயகனின் “Mute” செய்யப்பட்ட அரசியல் வசனம்.. இதுதான் காரணமா? விஜய்க்கு கிடைக்கும் நிம்மதி!












Click it and Unblock the Notifications