ஜனனிக்கு பாரபட்சமா?கிளம்பு கிளம்பு.. வாய் கொடுத்து சிக்கிய அமுதவாணன்..கடைசியில் நடந்தது எதிர்பாராதது
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் டாஸ்க் நேரத்தில் அமுதவாணன் ஜனனிக்கு மட்டும் பாரபட்சம் காட்டுவதாக மைனா நந்தினி சண்டையை தொடங்கி இருக்கிறார்.
கமல் கடந்த வாரம் வார இறுதி நாளில் மைனா கோவப்படாமல் சிரித்துக் கொண்டே இருப்பதாகவும் தன்னுடைய கோபத்தை தைரியமாக காட்ட வேண்டும். எப்பவும் காமெடி செய்து கொண்டே இருந்தால் அது உண்மையாகாது என்று அறிவுரை கூறியதாலோ என்னவோ இன்று மைனா வேற லெவலில் கோபத்தை காட்டிக் கொண்டிருக்கிறார்.

மைனா கேட்ட கேள்வி
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இன்று 66-வது நாள் தொடங்கி இருக்கிறது. இன்றைய முதல் பிரமோவில் அமுதவாணன் மற்றும் மைனா நந்தினியின் சண்டை சச்சரவுகள் களைகட்டி இருக்கிறது. ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் சண்டைக்களுக்கு பஞ்சமே இல்லாமல் இருக்கும் நிலையில் இன்று நேற்று எனக்கு கட்டும் போது எல்லாரும் தலையாட்டுனீங்களா? இன்னைக்கி சரியாக கட்டலாம், நீங்க கேளுங்க என சிறைக்குள் இருக்கும் மைனா கத்தி கொண்டு இருக்க அமுதவாணன் சிரித்தபடியே பக்கத்தில் போய் நின்று கொண்டு என்ன என கேட்கிறார்.

வாக்குவாதங்கள்
நேற்று எனக்கு செலோடேப் போடும்போது என்னுடைய சோல்டரில் போட்டீங்க, என்னுடைய தொடையிலிருந்து கால் வரைக்கும் போட்டீங்க, கையில் போட்டீங்க ஆனால் இன்று கைது செய்திருக்கும் ஜனனிக்கு மட்டும் அப்படி எல்லாம் போடலையே எதுக்கு போடல? என கேட்க, அவளுக்கு அதுவே போதும் என நான் விட்டு இருக்கேன் என்று அமுதவாணன் சொல்ல, அது எப்படி நீங்க டிசைட் பண்ணலாம் என மைனா கேட்க, நான் டிசைட் பண்ணலாம் என அமுதவாணன் சொல்ல, சரி என கைதட்டியபடியே நடக்கட்டும் நடக்கட்டும் என மைனா தலையாட்டிக்கொண்டிருக்கின்றார்.

கிளம்பு கிளம்பு
அமுதவாணன் இந்தா, இப்படி கைதட்டுவது அப்படி ஆக்சன் எல்லாம் பண்ணுவது எல்லாம் பண்ணாத நார்மலாக பேசு என அமுதவண்ணன் கூற, கெளம்பு கெளம்பு என மைனா சொல்ல, அங்கிருந்து கிளம்பியப்படியே அமுதவாணனும் கிளம்பு நீ கெளம்பு என கூறியபடி நடந்து கொண்டிருக்கிறார். இந்த பிரமோ தற்போது பரபரப்பாக வலம் வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலர் என்ன அமுதவாணன் ஜனனிக்கு சப்போர்ட் பண்ணி மாட்டிக்கிட்டீங்க போல என கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.

அசீம் சொன்னது நடந்து விட்டது
இன்னும் ஒரு சில ரசிகர்கள் அமுதவாணனும் ஜனனியும் பேவரிசம் பண்ணுகிறார்கள் என்று கருத்து கூற இன்னும் ஒரு சிலர் ரசிகர்கள் இதுதான் நேத்து அசீம் கேட்டது, இன்னைக்கு நடந்திருச்சி. அமுது ஜனனிக்காகத்தான் ஃபுல் சப்போர்ட் கொடுக்கிறார் என்று அசீமுக்கு ஆதரவாகவும் கருத்து கூறி வருகிறார்கள். இன்னும் ஒரு சில ரசிகர்கள் அமுதவாணன் தனக்கு சண்டை போடவே தெரியாது என்று சொன்னாரே அது இது தானா? என்று கேள்வி எழுப்ப, கடந்த வாரம் கமல் சொன்ன அட்வைஸ் யாரு கேட்டார்களோ இல்லையோ மைனா கேட்க தொடங்கிவிட்டார். அதனால் கத்தி பேசத் தொடங்கி இருக்கிறார் என்று கலாய்த்து கொண்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications