தொடங்கியது புது பிரச்சனை.. போனவாரம் மாதிரி இந்த வாரம் வெளியே போவது இவர்தானா? வெளியான தகவல்கள்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் தற்போது கனா காணும் காலங்கள் டாஸ்க் நடைபெற்று வருகிறது
பிக் பாஸ் பள்ளிக்குள் போட்டியாளர்களுக்குள் புது பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.
நேற்று வரை இந்த டாஸ்க் சுவாரசியமாக இருந்த நிலையில் இன்று தனலட்சுமி மற்றும் கதிரவன் இடையே சண்டை தொடங்கி இருக்கிறது.

வாத்தியார்களின் தவிப்பு
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்த கனாக்காலம் காலங்கள் டாஸ்க் தொடங்கி இருக்கிறது. இதில் போட்டியாளர்கள் மீண்டும் பள்ளிக்கு செல்லும் டாஸ்க்கில் நுழைந்திருக்கும் நேரத்தில் நேற்று எபிசோடில் போட்டியாளர் பள்ளி குழந்தைகளாகவும், ஆசிரியர்களாகவும் மாறி நிகழ்ச்சிக்கு என்டர்டைன்மென்ட் கொடுத்திருந்தனர். அதுவும் குறிப்பாக தமிழ் வாத்தியார் விக்ரமன், ஸ்ட்டான ஸ்டோரி வாத்தியார் அசீம், உடற்கல்வி ஆசிரியர் அமுதவாணன் இவர்கள் குழந்தைகளிடம் மாட்டிக் கொண்டு படும் பாடுகள் பார்ப்பதற்கு என்டேர்டைன்மென்ட் ஆக இருந்ததாக ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

கதிரவனின் முதல் சண்டை
இதுவரைக்கும் நடந்து கொண்ட டாஸ்க்களில் எல்லாம் அதிகமாக சண்டைகள் தான் நடந்து வந்தது. ஆனால் இந்த கனா காணும் காலங்கள் டாஸ்க் சண்டை வராது விளையாட்டு என்டர்டைன்மென்ட் ஆக இருக்கும் என்று நினைத்த நேரத்தில் இன்று முதல் முறையாக கதிரவன் தனலட்சுமி சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார். பிரமோவில் தனலட்சுமிக்கும் கதிரவனுக்கும் சண்டையை பார்த்த ரசிகர்கள் இது நிஜமாகத்தான் நடக்கிறதா? அல்லது இவர்கள் நடிக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

முதல் பிரமோ
பிக் பாஸ் 6வது சீசனின் 73 ஆவது நாளில் முதல் பிரமோ வில் தப்பை உணர வேண்டும் சுகி என்று தனலட்சுமி இடம் பேசும் கதிர் அதற்கு தப்பு நான் பண்ணவில்லை கதிர் என்று தனலட்சுமி பேச, தப்பை அக்சப்ட் பண்ண வேண்டும் என்று கதிர் கூற, தப்புன்னா பண்ண அக்செப்ட் பண்ணிக்குவேன் என்று தனலட்சுமி கூற, நான் அழகா கேட்கிறேன் நீ அதை புரிஞ்சுகிட்டு எனக்கு ஆன்சர் பண்ணுனா போதும் என்று கதிர் கூற, என்னால் உங்களை மாதிரி கேட்க முடியாது ரொம்பவே நடிச்சு பேச முடியாது என்று கூறுகிறார்.

கடந்த வாரம் போல நடக்கிறதா
தனலட்சுமியின் பேச்சை கேட்ட கதிர் தனலட்சுமி என்று அருகில் செல்லும்போது உங்களுக்கு கோபம் வருகிறது என்று உங்களுடைய முகத்தை பார்க்கும் போது தெரிகிறது என்று தனம் சொல்ல, நான் கோபம் எல்லாம படலை. ஏன் நடிக்கிறேன் என்று பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க என்று கதிரவன் கேள்வி கேட்டு கொண்டிருக்கின்றார். இந்த நிலையில் இதை பார்த்த ரசிகர்கள் பலர் கடந்த வாரத்தில் ஜனனி மற்றும் விக்ரமன் இடையே இப்படித்தான் சண்டை வெடித்தது. அதுபோல இந்த வாரத்தில் தனலட்சுமி மற்றும் கதிர் இடையே சண்டை ஏற்படுவதால் தனலட்சுமி இந்த வாரத்தில் வெளியே அனுப்பி விடுவாரா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இந்த வாரம் அப்போ இவர்தானா
அது மட்டும் இல்லாமல் கடந்த வாரத்தில் ஓட்டுகளின் அடிப்படையில் ஏடிகே தான் குறைவாக இருந்தார். ஆனால் அவரை விட்டுவிட்டு ஜனனியை வெளியே தூக்கி விட்டார்கள். அதுபோல இப்ப வரைக்கும் ஓட்டுகளின் அடிப்படையில் மைனா தான் கடைசி இடத்தில் இருந்து வருகிறார். ஆனாலும் தனலட்சுமி போவதற்கு அதிகமான வாய்ப்பு இருப்பதாக பலர் கருத்து கூறி வருகின்றனர். எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொல்வது பிக் பாஸின் தாரக மந்திரமாக இருப்பதை கடந்த வாரம் நிரூபித்தது போல இந்த வாரம் நிரூபிக்கப்படுமா? என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications