ஏன் பேசினோம் என்று வேதனைப்படுகிற மாதிரி ஆயிடுச்சி.. வருத்தத்தோடு நொந்து கொண்ட கமல்ஹாசன்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் 97வது நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
சனிக்கிழமை எபிசோடுக்காக கமல் வந்துவிட்டார்.
வெளியே சென்று மீண்டும் வந்த போட்டியாளர்களால் பிக் பாஸ் வீட்டிற்குள் இந்த வாரம் நடந்த பிரச்சனைகளை பேசுவதற்கு கமல் தொடங்கி இருக்கிறார்.

குதர்க்கமான பேச்சு
பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி முடிவடைய இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருக்கின்றது. கடைசி கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிற்குள் எவிக்டாகி வெளியே சென்ற போட்டியாளர்கள் மீண்டும் வந்த வண்ணமாக இருக்கின்றனர். இந்த நிலையில் இந்த வாரம் முழுக்க கலகலப்பாகவும் பிரச்சனைகள் நிறைந்ததாகவும் பிக் பாஸ் வீடு இருந்தது. ஏற்கனவே இந்த வீட்டில் போட்டியாளர்கள் இருந்து வெளியே சென்று நிலவரத்தை அறிந்து மீண்டும் உள்ளே வந்த நிலையிலும் அவர்களுடைய விளையாட்டு மற்றும் வில்லங்கத்தனமான வார்த்தைகள் குறித்து இன்று கமல் பேசி இருக்கிறார்.

பிக் பாஸ் வார்னிங்
பிக் பாஸ் போட்டியாளர்கள் வெளியே சென்று உள்ளே வந்த நிலையில் உள்ளே இருக்கும் ஒரு சில போட்டியாளர்கள் வெளியே நிலவரம் எப்படி இருக்கிறது என்று கேட்டுக் கொண்டிருக்க பிக் பாஸ் விதிமுறையையும் மீறி ஒரு சில போட்டியாளர்கள் வெளியில் இருக்கும் நிலவரங்களை பற்றி கூறிக் கொண்டிருக்கின்றனர். சுற்றி வலம் வந்து கொண்டிருக்கும் நிலையிலும் போட்டியாளர்கள் செய்த செயல் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்த நிலையில் பிக் பாஸ் கூட மணிகண்டன் தனலட்சுமி போன்ற ஒரு சில போட்டியாளர்களை வார்னிங் கொடுத்து இருந்தார்.

சாக்ரிஃபைஸ் டாஸ்க்
இந்த நிலையில் இந்த வாரம் நடந்து வந்த சாக்ரிஃபைஸ் டாக்ஸ்கில் விக்ரமன், அசீம், அமுதவாணன், ஏடிகே, மைனா, ஷிவின், கதிரவன் எழு ஏழு போட்டியாளர்களும் சாக்ரிஃபைஸ் செய்து விளையாண்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று பிக் பாஸ் அறிவுறுத்தலின் பேரில் சாக்ரிஃபைஸ் குறைவாக இருக்கும் போட்டியாளர்கள் மீண்டும் சாக்ரிஃபை செய்ய தொடங்கினார். அந்த வகையில் விக்ரமன் தன்னுடைய முகத்தில் ஒரு பக்கம் தாடி மற்றும் மீசையை எடுத்துக் கொண்டிருக்கிறார். அதுபோல ஷிவின் தன்னுடைய முகத்தில் கருப்பாக மேக்கப் போட்டிருக்கிறார். மைனாவும் தன்னுடைய தலை முடியை வெட்டி இருக்கிறார். ஏடிகே மற்றும் அமுதவாணன் இருவரும் தன்னுடைய தலைமுடியில் பாதி இடத்தை மொட்டை அடித்திருக்கின்றனர்.

கமல் எடுக்க போகும் முடிவு
இந்த நிலையில் இன்று கமல் சனிக்கிழமை வழக்கம் போல பஞ்சாயத்து பண்ணுவதற்காக வந்திருக்கிறார். இன்றைய முதல் பிரமோ வில் பிரிந்தவர்கள் கூடினால் பேசவும் வேண்டுமோ என்று கம்பர் சொன்னது ஆனால் இங்கே ஏன் கூடினோம் ஏன் பேசினோம் என்று வேதனை படுகிற மாதிரி ஆயிருச்சு. தியாகம் என்பது விரும்பி செய்வதாக இருக்கணும் ஆனால் கேட்டு வாங்குவதாக இருக்கக் கூடாது. கேட்டு வாங்குவது தானம், வழிய போய் புகுத்துவது வன்மம் இந்த மூன்று வேற வேற என்பது வீட்ல இருக்க உங்களுக்கு யாராவது சொல்லணும், யார் சொல்லுவா? அதை நாமதான் சொல்லணும் என்று சொல்லி இருப்போம் என்று கமல் கூறி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications