தன் உண்மையான கேரக்டர் பற்றி அடுத்தடுத்து பல உண்மைகளை உளறிய ரச்சிதா..இப்படி எல்லாம் வேற நடந்திருக்கா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருக்கும் ரச்சிதாவை பற்றி சக போட்டியாளர்கள் தொடர்ச்சியாக கூறிவரும் குற்றசாட்டுகளுக்கு முதல் முறையாக அவர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்தே போட்டியாளர்கள் பலரும் ரச்சிதா கோவத்தை காட்டாமல் நடித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய உண்மையான முகத்தை வெளியே காட்டவில்லை என்று கூறிக் கொண்டிருக்கும் நிலையில் தன்னுடைய உண்மை நிலை என்ன என்பதை பற்றி அமுதவாணனிடம் பேசி இருக்கிறார். அந்த வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

குவியும் குற்றச்சாட்டுகள்
சின்னத்திரை நடிகையாக பலருக்கும் தெரிந்த ரச்சிதா தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார். இவர் இந்த நிகழ்ச்சியில் ஆரம்பமானதும், இவருடைய ரசிகர்கள் தனியாக ஆர்மிகளை அமைத்து இவருக்காக வேலை செய்ய தொடங்கி விட்டனர். பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் சக போட்டியாளர்கள் இவரை குறித்து அதிகமான நெகட்டிவ் கருத்துக்களை கூறி வருகின்றனர். குறிப்பாக பலரும் கூறும் ஒரே கருத்தாக இருப்பது ரச்சிதா உண்மையான முகத்தை வெளியே காட்டவில்லை. எப்போதும் சிரித்தபடியே இருக்கிறார். கோவத்தை அடக்கி கொண்டிருக்கிறார். ரசிகர்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று இவருடைய கேரக்டரை மாற்றி காட்டி நடித்து வருகிறார் என்று இவர் மீது குற்றச்சாட்டுகள் கூறி வருகிறார்கள்.

எனக்கும் கோபம் வரும்
ஒவ்வொரு வாரமும் ரச்சிதாவை இதைக் குறித்து போட்டியாளர்கள் நாமினேஷன் செய்து வருகின்றனர். ஆனால் அதைப்பற்றி அவர் கண்டுகொள்ளாமல் எப்போதும் போலவே இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்றைய எபிசோட்டில் தன்னுடைய உண்மையான கேரக்டரை பற்றி ரட்சிதா அமுதவாணனிடம் கூறுகிறார். அதில் நான் எப்போதும் இதே போல தான் இருப்பேன். ஆனால் என்னை பற்றி எதற்காகத்தான் இப்படி எல்லாம் பரப்பி இருக்கிறார்கள் என்று எனக்கே தெரியாது. ஷெட்டில் கூட நான் கோபப்படுவேன் இல்லை என்று சொல்லவே இல்லை. எதற்காக என்றால் நான் நடிக்கும் சீன்கள் வரும்போது நான் அங்கே போய் மேக்கப் எல்லாம் போட்டுக் கொண்டு இருந்த பிறகுதான் அதுக்குள்ள ப்ராபர்ட்டி எல்லாம் எடுக்க செல்வார்கள். அது எனக்கு கடுப்பாக இருக்கும். கோபத்தில் நான் திட்டி இருக்கிறேன். மத்தபடி நான் பெரிய அளவில் எதுவும் பேச மாட்டேன்.

சக நடிகர் கூடிய வார்த்தை
எல்லோருக்கும் தெரியும் தானே! சூட்டிங்கில் இன்னைக்கு இதுதான் சீன் என்றால் இதற்கான பொருட்கள் வேண்டும் என்பது, அதை முன்னக்குட்டியே எடுத்துக்கொண்டு வைத்து விட்டால் என்னவாம்? என்று தான் என்னுடைய கேள்வியாக இருக்கும் . ஆனால் என்னுடன் நடிக்கும் பலர் நான் கோபக்காரி என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நான் நடிக்கும்போது கூட செந்தில் என்னிடம் இதேதான் கூறினார். உங்களைப் பற்றி நான் வேறு விதமாக கேள்விப்பட்டிருந்தேன். நீங்க தான் கதாநாயகி என்று சொன்னபோது கூட நான் அவங்களா? அவங்க கூட எப்படி நடிக்க முடியும் என்றுதான் பயந்தேன். ஆனால் பார்க்கும்போது வேறு விதமாக இருக்கிறீர்கள் என்று கூறி இருக்கிறார்.

இங்கு அந்த மாதிரி இல்லை
அதுபோல என்னைப் பற்றி என்னோடு நிறைய நடித்த நடிகர்களுக்கு தெரியும். குறிப்பாக செந்தில் கூட இப்போது யாராவது பேட்டி எடுத்தா அவர் இதைத்தான் சொல்வார் என்பது எனக்கு தெரியும். என்னுடைய வேலைகளில் நான் சரியாக இருக்க வேண்டும் என்று நான் அதிகமாக நினைப்பேன். அந்த நேரத்தில் வரும் சிலசில தடங்கல்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் இங்கே அப்படி இல்லை. அதனால் எப்போதும் போலத்தான் நான் இருக்கிறேன். இங்கேயும் அந்த மாதிரி ஏதாவது பிரச்சனைகள் வந்தால் ஒரு சில நேரங்களில் எனக்கு கோபம் வரலாமா இருக்கும் என்று கூறி இருக்கிறார். இந்த வீடியோவை ரசிகர்கள் பலர் பலர் பகிர்ந்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications