மைனா நந்தினியின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? பேச்சுவாக்கில் உளறியதை கேட்டு அதிர்ந்து போன தனலட்சுமி!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு போட்டியாளர்களும் சம்பளம் பெற்றுக் கொண்டுதான் அங்கு விளையாடி வருகிறார்கள். இது அனைவருக்கும் தெரிந்தது தான். இருந்தாலும் இன்று என்னுடைய ஒரு நாள் சம்பளம் எவ்வளவு என்று மைனா நந்தினி பேச்சுவாக்கில் பேசியதை கேட்டு தனலட்சுமி அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.
ஏற்கனவே ஒரு சில வாரங்களுக்கு முன்பு கமல் போட்டியாளர்களை நீங்கள் சம்பளம் வாங்கிக் கொண்டுதான் இங்கே இருக்கிறீர்கள் என்று குத்தி காட்டி இருந்தார். இந்த நிலையில் மைனா நந்தினியின் பேச்சு பலருக்கும் வியப்பை கொடுத்து இருக்கிறது.

ஒரு வாரம் கழித்து அறிமுகம்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி 60 நாட்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு தரப்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தாலும் சின்னத் திரையில் இருந்து வெள்ளி திரையில் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் மைனா நந்தினியும் ஒரு போட்டியாளராக அறிமுகம் ஆகி இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய அன்று அறிமுகமாகாமல் ஒரு வாரம் கழித்து அறிமுகமானார். அப்போதே ஒரு வாரத்திற்குள் போட்டியாளர்கள் என்ன மாதிரி விளையாடுகிறார்கள் என்பதை நன்றாக தெரிந்து கொண்டு தான் அவர் விளையாட்டை விளையாடி வருகிறார் என்று ரசிகர்கள் ஆரம்பத்தில் இருந்தே அவரைக் குறித்து குறை கூறி வருகிறார்கள்.

மைனாக்கு கிடைத்த கெட்டப்
அது மட்டுமல்லாமல் ரட்சிதாவின் ரசிகர்கள் பலர் மைனாவை திட்டி தீர்த்து வருகின்றனர். ரச்சிதாவோடு இருந்து அவருக்கு துரோகம் செய்வதாக அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் இந்த வாரம் மாறுவேட போட்டியில் மைனா நந்தினிக்கு நாய் சேகர் கெட்டப் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர் அப்படியே வடிவேலுவின் பாடி லாங்குவேஜ் காட்டி போட்டியாளர்களிடம் ஒவ்வொரு முறையும் அதிகமாக பணம் பரிசாக பெற்றுக் கொண்டிருக்கிறார். இதை குறித்து ஏற்கனவே நேற்று தனலட்சுமி வருத்தமாக புலம்பி கொண்டிருந்தார். எனக்கு மட்டும் இப்படி நடக்கவில்லையே என்று அவர் வெம்பிக் கொண்டிருக்கும் நேரத்தில் இன்று இன்னொரு சம்பவம் நடந்திருக்கிறது.

அதிர்ச்சியடைந்த தனலட்சுமி
மைனா நந்தினி, மணிகண்டன், தனலட்சுமி மூவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது மைனாவிற்கு 1.5 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்து இங்கே இருக்க வைத்திருக்கிறார்கள் என்றால் சும்மாவா? என்று மணிகண்டன் பேச்சுவழக்கில் சொல்ல அதிர்ந்து போன தனலட்சுமி என்னது ஒரு நாளைக்கு ஒன்றரை லட்சமா என்று கேட்க, இல்லை 2 லட்சம் வரைக்கும் தருகிறார்கள் என்று மைனா நந்தினி சொல்ல அதை உண்மையாக நம்பி தனலட்சுமியின் முகம் அப்படியே சுருங்கி போய்விட்டது. இந்த வீடியோவை நெட்டிசன்கள் பலரும் பகிர்ந்து கலாய்த்து வருகிறார்கள். போட்டியாளர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 15,000 வரைக்கும் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தனலட்சுமியின் அதிர்ச்சியை பார்த்தால் பாவமாக தான் இருக்கிறது என்று சிலர் கலாய்த்து வருகிறார்கள்.

நெட்டிசன்களிடம் மாட்டிய வீடியோ
ஏற்கனவே டாஸ்க்கில் தன்னால் சரியாக பர்பாமென்ஸ் செய்ய முடியவில்லை அதனால் நான் குறைவாகத்தான் பணம் பெற்று இருக்கிறேன். எல்லோரும் ஒன்று சேர்ந்து விளையாடுகிறார்கள். நாம் ஒருவரிடம் பகைத்துக் கொண்டால் அவர் இருக்கும் அணியின் அனைவரும் நம்மை எதிரி போல பார்க்கின்றனர். நம்ம என்னதான் அழகாக பர்பாமன்ஸ் பண்ணாலும் 50,100 ரூபாய்கள் தான் தருகிறார்கள். ஆனால் ஒன்றுமே செய்யாதவர்களுக்கு 500,1000 என்று கொடுக்கிறார்கள் என்று நேற்று தனலட்சுமி புலம்பிய நிலையில் இன்று மைனாவின் சம்பளத்தை கேட்டு தவித்து போய் இருக்கிறார் என்று நெட்டிசன்கள் மீம்ஸ்களில் கலாய்த்து வருகிறார்கள்.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications