பிக் பாஸ் வின்னரான அசீம்... மேடையிலே அவமானங்கள்.. எல்லாம் வேஸ்ட்டா போச்சா? கலாய்க்கும் நெட்டிசன்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் வின்னராக அசீம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

வின்னராக ஆனதற்கு ரசிகர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து பிக் பாஸ் நிகழ்ச்சியை திட்டி தீர்க்கின்றனர்.

அசீமுடைய வெற்றியை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் எதிர்பார்க்காத பல நிகழ்வுகள் நேற்று கிராண்ட் பினாலே மேடையில் நடைபெற்றதை குறித்து நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் கலாய்த்து வருகிறார்கள்.

தவறான முன் உதாரணம்

தவறான முன் உதாரணம்

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி 105 நாளோடு நேற்று முடிவடைந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து அதிகமாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது காரணம். இந்த நிகழ்ச்சியில் யாருக்கு டைட்டில் வின்னர் என்று அதிகமானோர் ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஒரு பக்கம் அசீம் தன்னை எதிர்ப்பவர்களை தரக்குறைவாக பேசிக்கொண்டு பெண் போட்டியாளர்களிடம் மரியாதை இல்லாமல் நடந்து கொண்டு கோபம் வந்தால் எதிரே இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்ட மேனிக்கு பேசிக்கொண்டு பிறகு அவர்களிடம் மன்னிப்பு கேட்டு சமாதானம் செய்து கொண்டிருந்தார். இது தவறான எடுத்துக்காட்டு இதை பார்த்து பலரும் இதைத்தான் செய்ய தோன்றுவார்கள் என்று அசீம் பற்றி பல்வேறு நெகடிவ் கருத்துக்கள் சமூக வலைத்தளத்தில் குவிந்து கொண்டிருந்தது.

மன்னிக்கும் ரசிகர்கள்

மன்னிக்கும் ரசிகர்கள்

ஆனாலும் ஒரு பக்கம் அசீம் சரியாக இருக்கிறார். நடிக்காமல் உண்மையாக இருக்கிறார். கோபம் வராத மனிதன் யாராகவும் இருக்க முடியாது. வரும் கோபத்தை அவர் காட்டி விட்டாலும் அதற்கு பிறகு அவர் மன்னிப்பு கேட்டு விடுகிறார் என்ற ஒற்றை வார்த்தையை கூறியே அவரை அதிகமான ரசிகர்கள் ரசிக்க தொடங்கினார்கள். ஆரம்பத்தில் இருந்து அசீம், ஆயிஷாவிடம் தொடங்கி விக்ரமன், ஷிவின்,ரச்சிதா, தனலட்சுமி, மகேஸ்வரி, ஜனனி என பல போட்டியாளர்களிடம் சண்டையிட்டு மரியாதை குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியிருக்கிறார். குறிப்பாக வாடா போடா, வாடி போடி என்கிற வார்த்தைகளை கூட இவர் அதிகமாக பயன்படுத்தியிருக்கிறார். ஆனாலும் அவரை மன்னிக்கும் ரசிகர்கள் அதிகமாக இருந்தனர்.

விக்ரமனுக்கு வாக்கு குறைய காரணம்

விக்ரமனுக்கு வாக்கு குறைய காரணம்

இந்த நிலையில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே அசீம் வின்னர் ஆகிவிட்டார். விக்ரமன் அறத்தின் வழியில் தான் நடந்து கொண்டிருப்பதாக அடிக்கடி கூறிக்கொண்டு அறம் வெல்லும் என்று கூறிக் கொண்டிருந்தார். இவருக்கு ஆரம்பத்தில் இருந்து அதிகமான ரசிகர்கள் ஆதரவு கொடுத்துக் கொண்டிருந்த நேரத்தில், கடைசி கட்டத்தில் முக்கியமான அரசியல் கட்சித் தலைவர்களின் ஆதரவு இவருக்கு கிடைக்க தொடங்கியதும் ரசிகர்கள் பலர் பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் அரசியல் புகுத்தப்படுகிறது. அதனால் இது சரியான முன்னுதாரணம் இல்லை என்று விக்ரமனுக்கு எதிராக கருத்து கூற தொடங்கி விட்டனர். இந்த நிலையில் கடைசி கட்டத்தில் விக்ரமனுடைய வாக்குகள் குறைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

மேடையில் நடந்தது

மேடையில் நடந்தது

என்ன இருந்தாலும் கடைசியில் அசீம் ஜெயித்து கப்பை தட்டி தூக்கி விட்டார். ஆனால் அவருடைய வெற்றியை அந்த மேடையில் இருந்த பலரும் சந்தோஷமாக கொண்டாடவில்லை என்பது அப்பட்டமாக தெரிகிறது என நெட்டிசன்கள் குறிப்பிட்டு காட்டுகின்றனர். குறிப்பாக மேடையில் அசீம்,விக்ரமன், ஷிவின் மூவரும் நிற்கும் போது மூவருடைய குடும்பத்தினரிடம் இவர்களில் உங்களுடைய உறவினர் போக மீதம் இருப்பவர்களில் யார் ஜெயிக்க வேண்டும் என்று கேட்டதற்கு விக்ரமுடைய குடும்பத்தினரும், அசீமுடைய குடும்பத்தினரும் ஷிவின் பெயரை கூறினார். ஷிவினுடைய குடும்பத்தினர் விக்ரமுடைய பெயரை கூறினார். ஆரவாரமாக விக்ரமன் உடைய பெயரை கூறியதும் மக்கள் சத்தம் கொடுத்தனர்.

ஜெயித்தாலும் அவமானம் தானா

ஜெயித்தாலும் அவமானம் தானா

அது மட்டும் அல்லாமல் அசீம் தான் டைட்டில் வின்னர் என்று கமல் கூறியதும் அவருக்கு 50 லட்சத்திற்கான காசோலை கொடுக்கப்பட்டது. பிறகு வெற்றி கோப்பை கொடுக்கும் போது விக்ரமனையும் சேர்த்து கமல் கொடுக்க வைத்தார். பின்பு அசீமிற்கு கப்பை கொடுத்துவிட்டு விக்ரமனை முதலாவதாக பேச வைத்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் அசீம் ஜெயிக்கும் போது மணிகண்டன், தனலட்சுமி, சாந்தி மாஸ்டர், கதிரவன் என ஒரு சிலர் போட்டியாளர்கள் மட்டும்தான் அதிகமாக கர ஓசை எழுப்பி கூக்குரல் இட்டனர். மீதம் உள்ள போட்டியாளர்கள் கைத்தட்டி இருந்தாலும் அவர்களுடைய முகத்தில் எந்த எக்ஸ்பிரஷனையும் காட்டவில்லை. இதுவே அசீம் வெற்றி பெற்றாலும் இது பலரும் விரும்பாதது என்று தெரிகிறது என நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+