"அ” போடுறதுக்கு முன்னாடியே முடிச்சிட்டீங்களே.. எதிரி வேறு எங்கும் இல்லை.. புலம்பும் அசீம் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை :பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய கதை சொல்லும் டாஸ்கில் முதலாவதாக கதை சொல்ல களமிறங்கிய அசீமை சும்மா நச்சு.. நச்சு.. என்று பஸ்ஸரை அமுக்கி அசீமின் வாயை மூடியுள்ள மூன்று சக போட்டியாளர்கள் குறித்தும் பார்வையாளர்கள் தங்கள் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

சினிமாக்காரனுக்கு எதிரி சினிமாகாரங்ளேதான் என்று சொல்வது போல் அசீமின் கதை சொல்லும் டாஸ்க் இருந்ததாக சிலர் பகிர்ந்து வருகின்றனர்.

சுவாரசியமான டாஸ்க்

சுவாரசியமான டாஸ்க்

பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்டு பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் பிக் பாஸ் போட்டியில் முக்கியமான டாஸ்காகவும் சக போட்டியாளர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி மற்ற போட்டியாளர்கள் தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பாகவும் இருக்கும் ஒரு டாஸ்காகவும் இந்த கதை சொல்லும் டாஸ்க் இருக்கும். இதற்கு முந்தைய சீசன்களில் எல்லாம் கண்ணீரும் கம்பளையுமாக இந்த டாஸ்க் கடந்து போகும்.ஆனால் சென்ற சீசன்களை விட இந்த சீசன் பரபரப்பாக இருப்பதாக கமலஹாசனே கூறிய நிலையில் இந்த டாஸ்க்குக்கான எதிர்பார்ப்பும் பார்வையாளர்களிடம் அதிகமாக இருந்தது.

ஆரம்பித்த ஆஷிம்

ஆரம்பித்த ஆஷிம்

ஒரு வழியாக கதை சொல்லும் டாஸ்க் அறிவித்துவிட்ட பிக் பாஸ் அதற்கான நிபந்தனைகளையும் வழிமுறைகளையும் கூறி அசீமை முதல் போட்டியாளராக களம் இறக்கினார்.தனக்கே உரிய ரோபோ பாடி லாங்குவேஜில் கதை சொல்லும் அறைக்குள் சென்று அமர்ந்த அசீம் அழகாக தன்னுடைய பெயர் அசீம், தான் சினிமா துறையில் இருப்பதாகவும், அதற்கு முதலில் வீட்டில் ஒத்துழைப்பு இல்லை என்றும் பிறகு சம்மதித்ததாகவும், தான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்து கொள்ள கொள்ளவும் வீட்டில் சம்மதம் சொல்லியதாகவும், திருமண வாழ்க்கையில் தங்களுக்குள் ஒரு சின்ன மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் என்றும் தன்னைப் பற்றிய விபரங்களை கூற லேசாக ஆரம்பித்தார்.

நச்சு நச்சுன்னு மூணு பேர்

நச்சு நச்சுன்னு மூணு பேர்

அசீம் சொல்ல துவங்கி முப்பது வினாடிகளுக்கு உள்ளாகவே பேசி வைத்தார் போல் ரட்சிதா, மகேஸ்வரி, சாந்தி,மூவரும் மாறி மாறி பஸ்சரை அழுத்தி அசீமின் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டனர்.அசீம் சொல்ல வந்த கதை தங்களுடைய வாழ்க்கையை ஞாபகப்படுத்துவது போல் இருப்பதாக நினைத்தார்களோ!? என்னவோ!? ரட்சிதாவும் மகேஸ்வரியும் பஸ்சரை அழுத்தி இருக்கலாம்.ஆனால் சாந்தி ஏன் அவ்வளவு விரைவாக பஸ்சரை அழுத்தினார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அடப்பாவிகளா இப்படி பண்ணிட்டீங்களே

அடப்பாவிகளா இப்படி பண்ணிட்டீங்களே

கதை சொல்லு அறையிலிருந்து வெளியேறிய அசீம், 'என்ன காயமான போதும் என் மேனி தாங்கிக் கொள்ளும்' என்று கமல் பாடிய பாடலை கூலாக பாடிக் கொண்டு சக போட்டியாளர்களிடம் வந்து, அடப்பாவிகளா..என் கதைக்கு இன்னும் 'அ'கூட சொல்லவில்லை அதற்குள் அவுட் செய்து விட்டீர்களே என்று உள்ளுக்குள்ளே அழுதாலும் வெளியே சிரித்துக்கொண்டு புலம்பியுள்ளார். பஸ்சரை அழுத்தியது யார் என்று தெரியாத அசீம் பிக்பாஸ் வீடே தனக்கு எதிரியாக இருப்பதாக நினைத்துக் கொண்டு இதிலும் தனக்கு த்ரில் தான் என்று ஹவுஸ் மேட்டுகள் இடம் சவால் விட்டு இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+