இந்த வாரம் ரசிகர்களிடம் சிக்கிய அசல்... காத்திருக்கும் நெட்டிசன்கள்.. கமல் பேச்சு காத்தோட போச்சி
சென்னை: பிக் பாஸ் ஆறாவது சீசனில் இரண்டாவது வார எலிமினேஷனுக்காக போட்டியாளர்கள் நாமினேஷன் செய்து வருகின்றனர்.
போட்டியாளர்களில் பலர் அசல் பெயரை குறிப்பிடுவதால் இந்த வாரம் அவர் நாமினேஷனில் சிக்க போகிறார்.
ஏற்கனவே அசல் மீது காண்டில் இருக்கும் ரசிகர்கள் இந்த வாரம் சம்பவம் செய்ய இருப்பதாக கருத்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

இரண்டாவது வார எலிமினேஷன்
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆறாவது சீசன் இரண்டாவது எலிமினேஷனக்கான நாமினேசன் நடந்து வருகிறது. ஏற்கனவே முதல் எலிமினேஷனாக சாந்தி மாஸ்டர் வெளியேறிய நிலையில், இந்த வார யார் வெளியேறுவார்கள் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கின்றன. அதிலும் தங்களுக்கு பிடிக்காத போட்டியாளர்களின் பெயர்கள் வந்துவிட்டால் நன்றாக இருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்து காத்திருக்கின்றனர்.இந்த நிலையில் இன்று அசல் கோளாறு, அசிம், ஆயிஷா, ரட்சியா மகாலட்சுமியின் பெயர்கள் அதிகமாக அடிபட்டு கொண்டிருக்கிறது.

போட்டியாளர்களின் குற்ற சாட்டுகள்
ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து அசல் கோளாறுக்கு ரசிகர்களின் மத்தியில் அதிகமான நெகட்டிவ் கருத்துகளும் மீம்ஸ்களும் அதிகரித்து வருகிறது. ரசிகர்களில் நினைப்பதையே நேற்றைய எபிசோட்டில் போட்டியாளர்கள் பலரும் கமல் முன்னிலையில் தெரிவித்துவிட்டனர். அசல் அதிகமாக நிவாவுடன் சுற்றிக் கொண்டிருக்கிறார். நிவா உடன் தான் அதிகமாக நேரத்தை செலவழிகிறார். விளையாட்டில் கவனம் செலுத்தவில்லை, வந்த வேலையை விட்டுவிட்டு இவர் புதிய வேலையை தொடங்கிவிட்டார். என்றெல்லாம் இவரை குறித்து பல குற்றச்சாட்டுகள் போட்டியாளர்கள் கூறியிருந்தனர்.

தொடங்கியது நாமினேஷன்
இந்த நிலையில் இன்றைய முதல் ப்ரோமோவில் போட்டியாளர்கள் இந்த வார எலிமினேஷனுக்கான போட்டியாளர்களை நாமினேஷன் செய்து வருகின்றனர். அதில் குயின் சி,ரட்சிதாவின் பெயரை நாமினேஷன் செய்கிறார். அதுபோல ஆசீம், அசல், ஆயிஷாவின் பெயரை நாமினேஷன் செய்கின்றனர். ஆயிஷா, விக்ரமன், ரட்சிதா இவர்கள் அசீமை நாமினேஷன் செய்கின்றனர். அது போல அசல், மைனா, மகேஷ்வரியின் பெயரை நாமினேஷன் செய்கின்றனர். அதுபோல ஆயிஷா, அசல் பெயரை நாமினேஷன் செய்கிறார். இதனால் இந்த வார நாமினேசன் லிஸ்டில் அசல் பெயர் வந்துவிடும் என்று அவரைக் குறித்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

அசல் செய்து செயல்
இந்த வாரம் முதல் ப்ரோமோவில் அசல்,ஜனனியின் காதில் கிசுகிசு பேசிக் கொண்டிருப்பதை பார்த்து, நேற்றைய எபிசோட்டில் தான் கமல் அனைவருக்கும் அவ்வளவு அட்வைஸ் கொடுத்தார். யாரும் கிசுகிசு பேசக்கூடாது ,மைக் மூடக்கூடாது என்று ஆனால் இன்று கமல் பேச்சி எல்லாம் காத்தோட போச்சி என்று சொல்லும்போது விதமாக அசல் நடந்து கொள்வதை பார்த்து பலர் கமாண்டுகளில் திட்டி வருகின்றனர். அதனால் இந்த வாரம் வெளியேறப் போவது அசலாக தான் இருக்கும் என்று இப்போதே பலர் கருத்து கூறி வருகிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications