"யாராலையும் காப்பாத்த முடியாது சிலரை"மாஸாக மிரட்டும் ஆண்டவர்..கிழியுமாமுகத்திரை?குறும்படம் இருக்காம்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இன்று கமல் முதல் ப்ரோமோவில் ஒரு சிலரை யாராலும் இன்று காப்பாற்ற முடியாது என்று கூறி இருக்கிறார்.
உள்ளே இருக்கவங்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாது இன்று அவர்களுக்கு தெரிய வைக்கப்படும் என்று மாஸாக கமல் மிரட்டிக் கொண்டிருக்கிறார்.
கமல் பேசும் தோரணையிலேயே தெரிகிறது இந்த வாரம் அசீம்க்கு அர்ச்சனை காத்துக் கொண்டு இருக்கிறது என்று பலரும் கூறி வருகின்றனர்.

என்ன நடக்கப் போகிறதோ
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் மட்டும் கமல் தோன்றி அந்த வாரம் முழுக்க நடந்த பிரச்சனைகளுக்கு பஞ்சாயத்து பேசி வருகிறார். இது கடந்த ஐந்து சீசன்களிலும் நடந்து கொண்டிருக்கிறது .தற்போது ஆறாவது சீசனிலும் தொடர்ந்து வருகிறது. இதில் இந்த வாரம் யாருடைய பஞ்சாயத்தை கமல் பேசுவார் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். ஏனென்றால் பல்வேறு பஞ்சாயத்துக்கள் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்து கொண்டிருக்கிறது .இதில் எந்த பிரச்சனையை பற்றி பேசுவார், யாருக்கு என்ன தண்டனை கொடுப்பார்? யாருக்கு குட்டு கொடுப்பார், யாரை ஆதரிப்பார் என்று பல்வேறு விதமான கருத்துக்களும் கேள்விகளும் எழுந்த வண்ணமாகவே இருக்கிறது.

அசீம்க்கு தண்டனை கிடைக்குமா
போட்டியாளர்களில் பலர் அசீம் சக போட்டியாளர்களிடம் நடந்து கொண்டது அவருடைய விளையாட்டு யுக்தியாக இருந்தாலும் மோசமான கேரக்டராக இருக்கிறது என்று கருத்து கூறி வருகின்றனர். நீயும் பொம்மை நானும் பொம்மை டாஸ்க்கில் அசீம் தான் எப்படியும் ஜெயித்து விட வேண்டும் என்பதற்காக மைண்ட் கேம் விளையாடி தனக்கு சாதகமாக சில போட்டிகள் தன்னோடு சேர்த்துக் கொண்டு
இவருக்கு பிடிக்காத போட்டியாளர்களிடம் செய்து வந்த பிரச்சனைகள், அதுமட்டுமல்லாமல் தனலட்சுமி மீது இவர் வைத்த குற்றசாட்டுக்கு இன்று பதிலடி கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று பலர் கூறி வருகின்றனர்.

கடந்த வாரம் கொடுத்த வார்னிங்
கடந்த வாரமே அசீம் பஞ்சாயத்து பெரும் பஞ்சாயத்தாக இருந்தது. ஆயிஷாவை வாடி போடி என்று பேசி அசீம் சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். அத்தனைக்கும் பதிலடி கொடுக்கும் விதமாக கமல் சக போட்டியாளர்களால் ரெட் கார்ட் கொடுத்து அசீம்க்கு வார்னிங் கொடுத்து இருந்தார். இந்த நிலையில் இந்த வாரமும் தன்னுடைய குணத்தை மாற்றிக் கொள்ளாமல் அசீம் நடந்து கொண்டதாகவும், அதனால் கமல் இந்த வாரம் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று பலர் கருத்து கூறி வருகிறார்கள்.

கமல் கூறிய உள்குத்து வார்த்தை
இந்த நிலையில் இன்றைய முதல் ப்ரோமோவில் கமல், என்ன நடந்தது? என்று உங்களுக்கு தெரியும், எனக்கும் தெரியும். ஆனா, உள்ள இருக்கிறவங்களுக்கு தெரியமாட்டுக்குது. பழி போடுவது என்பது ரொம்ப ஈசி ஆனால் பழியை தாங்குவது ரொம்ப கஷ்டம் .அது அவங்களுக்கு புரிய வைக்கணும், சில பேரை காப்பாற்றி ஆகணும் ,சில பேரை யாராலும் காப்பாற்ற முடியாது! "என்று அவருக்கே உரிய குதர்க்கமான பேச்சால் பேசியிருக்கிறார். இதனை புரிந்து கொண்டவர்கள் பலர் ப்ரோமோவில் மட்டும் இப்படி கருத்து தெரிவித்தால் போதாது, உள்ளேவும் போட்டியாளர்களுக்கு புரிகின்ற மாதிரி அறிவுரை கூறி நடத்தி வந்தால் நன்றாக இருக்கும் என்று கூறி வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications