இன்று முதலாவதாக சேவ் ஆன போட்டியாளர்.. அப்போ இவர்தான் டைட்டில் வின்னரா? வெளியான ரகசியங்கள்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி 97 வது நாள் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிலையில் இன்று சனிக்கிழமை எபிசோட்டில் கமல் இரண்டு போட்டியாளர்களை சேவ் செய்ய இருக்கிறாராம்.
முதல் போட்டியாளர் அசீம், அதைத் தொடர்ந்து விக்ரமனை கமல்ஹாசன் சேவ் செய்ய இருக்கிறாராம்.

போட்டுக் கொடுக்கும் நபர்கள்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி முடிவடைய இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருக்கிறது. இறுதி கட்டத்தை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு எதிர்பார்ப்புகளும் சுவாரசியங்களும் இந்த வாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. காரணம் இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்து கலந்துகொண்டு எவிட் ஆகி வெளியே சென்ற போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கின்றனர். ஒரு சில போட்டியாளர்கள் பிக் பாஸ் வெளியே என்ன மாதிரி நிலவரம் இருக்கிறது என்பதை உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு போட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டாங்க
தங்களுக்கு இருக்கும் ஆதரவு மற்றும் நெகட்டிவ் கருத்துக்களை தெரிந்து கொண்ட உள்ளிருக்கும் ஏழு போட்டியாளர்களும் அதற்கு தகுந்த மாதிரி தங்களுடைய விளையாட்டை விளையாட துணிந்து இருக்கின்றனர். இந்த நிலையில் இன்று சனிக்கிழமை எபிசோட்டில் வழக்கம்போல இரண்டு போட்டியாளர்களை கமல் சேவ் செய்ய இருக்கிறாராம். அதன் அடிப்படையில் முதல் போட்டியாளராக அசீம் மற்றும் அதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியாளராக விக்ரமன் சேவ் செய்யப்படுகிறார்களாம்.

முதல் சேவ் ஆகும் நபர்
ஏற்கனவே ஒவ்வொரு சீசனிலும் கடைசி வாரத்தில் முதலாவதாக சேவ் செய்யும் போட்டியாளர்தான் டைட்டில் ஜெயித்து வந்திருக்கின்றனர். அந்த வகையில் இந்த முறை அசீம் தான் டைட்டில் ஜெயிப்பார் என்று அசீமுடைய ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பல்வேறு தகவல்களை பரப்பி வருகின்றனர். இதுவரைக்கும் அதிகமான வாக்குகளின் அடிப்படையில் அசீம் இருந்து வந்தாலும், ஒவ்வொரு முறையும் கமல் பிக் பாஸின் அறிவுரைப்படி அசீமை கடைசி இடத்திலும் அதற்கு முன்பும் கூட சில நேரங்களில் மாறி மாறி சேவ் செய்து இருக்கிறார். இது ரசிகர்களுக்கு ஏற்கனவே வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் இன்று முதல் நாளாக அவர் சேவ் ஆகி இருப்பது தெரிந்ததும் ரசிகர்கள் இதை பாராட்டி வருகிறார்கள்.

கப்பு யாருக்கு
இந்த நிலையில் இது முழுக்க முழுக்க பொய்யான காரணம். ஏற்கனவே விக்ரமனுக்குத் தான் அதிகமான ஆதரவு இருக்கிறது. விக்ரமன் அறம் வெல்லும் என்று ஒவ்வொரு இடத்திலும் கூறிக்கொண்டு அவர் முன்னேறி வருகிறார். ஆனால் அசீம் ஒவ்வொரு இடத்திலும் தவறான வார்த்தைகளை பேசி, அடுத்தவர்களை புண்படுத்திக் கொண்டு இருப்பதால், அவருக்கு டைட்டில் கொடுத்தால் அது தப்பான முன் உதாரணமாக மாறிவிடும் என்று பலர் கருத்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த சிறப்பு விருந்தினர்கள் சிலர் அசீமுடைய மனதை மாற்றும் விதமாக பல்வேறு கேள்விகளை நெகட்டிவ் கருத்துக்களையும் உள்ளே பேசி இருந்தனர்.

உன்மை எதுவாக இருக்கும்
இதனால் அசீம் லாஸ்ட் வாரத்தில் எந்த பிரச்சனையும் செய்யாமல் இருந்து விடக் கூடாது என்றும் அவர் ஏதாவது பிரச்சனை செய்து கொண்டிருந்தால் தான் நிகழ்ச்சிக்கு சுவாரசியம் ஏற்படும் என்றும் அதற்காகத்தான் அசீமை முதலாக சேவ் செய்திருக்கின்றனர் என்று விக்ரமனுடைய ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். என்னதான் அசீம் இந்த வாரம் முதலில் செயல் செய்யப்பட்டாலும், டைட்டில் கடைசியில் விக்கிரமனுக்கு தான் என்று விக்ரமனுடைய ரசிகர்கள் ஆணித்தரமாக கூறி வருகின்றனர். இன்னும் ஒரு சில நாட்களில் தெரிய போகும் இந்த கடைசி கட்ட உண்மை எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொல்லும் விதத்தில் இருக்குமா என்பது பலருடைய எதிர்பார்ப்பு தான்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications