வாழ்க்கையே வெறுத்து எடுத்த தப்பான முடிவு.. பெரியப்பா குடும்பத்தின் உதவி..ரச்சிதாவின் ஆரம்ப வாழ்க்கை
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருக்கும் ரச்சிதா தன்னுடைய ஆரம்ப கால வாழ்க்கையை பற்றி முதல் முறையாக மனம் திறந்து பேசி இருக்கிறார்.
இதுவரைக்கும் ரச்சிதாவை பார்த்து வந்த கண்ணோட்டம் தற்போது முற்றிலும் வேறு ஆனது என்று ரசிகர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.
சிறுவயதிலிருந்தே தான் பட்ட கஷ்டங்களும் எதனால் இந்த நடிப்பு துறைக்கு தான் வந்தேன் என்று காரணத்தையும் முதல்முறையாக மனம் திறந்து ரச்சிதா பேசியிருக்கிறார்.

கூட்டுக் குடும்பம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரச்சிதா கலந்து கொண்டதும் ஆரம்பத்திலிருந்து ரசிகர்கள் மட்டுமல்லாமல் போட்டியாளர்களும் இவர் எந்த பிரச்சனைகளையும் ஈடுபடுவது இல்லை, கோபப்படாமல் நடித்துக் கொண்டிருக்கிறார் என்று குற்றம் சாட்டி கொண்டிருந்த நிலையில், ரச்சிதா தன்னுடைய ஆரம்ப கால வாழ்க்கையை குறித்து கூறியிருக்கிறார். அதனால் தான் அவருடைய கேரக்டர் இப்படி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. மிகவும் எளிமையான குடும்பத்தை சார்ந்த இவர் கூட்டுக் குடும்பத்தில் தான் வாழ்ந்து வந்திருக்கிறார்.

அம்மாவின் ஆசை
ரச்சிதாவின் அப்பா ஒரு டிரைவர் ஆக இருந்திருக்கிறார். இவர் பிறக்கும்போது பிறக்கும்போது அவருடைய அப்பா 300 ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தாராம். ரச்சிதா ஒரே பெண்ணாக இருந்தாலும் கூட்டு குடும்பமாக இருப்பதால் இவருடைய அப்பா இவருடைய அம்மாவிடம் 100 ரூபாய் கொடுத்துவிட்டு குடும்பத்தினரிடம் 200 ரூபாய் கொடுத்து விடுவாராம். ரச்சிதாவின் அம்மா ஒன்றுமே படிக்கவில்லையாம். அதனால் ரச்சிதா அதிகமாக படிக்க வேண்டும் என்று ஆசையோடு ரச்சிதாவிடம் கடுமையாக நடந்து கொள்வாராம். பல நேரங்களில் ரச்சிதா சரியாக படிக்கவில்லை என்பதற்காக கழுத்தை நெரித்து செத்துப் போ என்றெல்லாம் திட்டி இருக்கிறார்களாம்.

பெரியப்பா குடும்பத்தின் அன்பு
ரச்சிதாவின் பெரியப்பா மற்றும் பெரியம்மா தான் அவருக்கு அதிகமாக ஆதரவாக இருந்திருக்கிறார். பத்தாம் வகுப்பு படிக்கும் போது வீட்டில் பல பிரச்சனைகள் அடிக்கடி ஏற்பட்டுக் கொண்டிருக்கும்போது இவர் வாழ்க்கையே வெறுத்து பல தடவை தப்பான முடிவு எடுத்திருக்கிறாராம். அப்போது ஒவ்வொரு முறையும் இவருடைய பெரியப்பா மற்றும் பெரியம்மா தான் காப்பாற்றி இதெல்லாம் பிரச்சனையே இல்லை என ஆறுதல் கூறி பார்த்துக் கொள்ளலாம் என்று மன தைரியமாக பேசிக் கொண்டிருப்பார்களாம். அவர்களுக்கு இருக்கும் சாப்பாட்டை கூட ஒதுக்கி வைத்து ரச்சிதாவுக்காக கொடுப்பார்களாம்.

முதல் வேலை
பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது தான் இவருக்காக பீஸ் கட்டும் போது இவருடைய அப்பாவின் கஷ்டத்தை இவர் புரிந்து கொண்டிருந்தார். அதற்கு பிறகு 12ஆம் வகுப்புக்கு பிறகு ரச்சிதா படிக்கவில்லையாம். அந்த நேரத்தில் வீட்டிலும் குடும்ப கஷ்டம் இருந்த நேரத்தில் இவர் பக்கத்தில் ஒரு தனியார் டிவி சேனலுக்கு தொகுப்பாளராக சென்று இருக்கிறார். ஆரம்பத்தில் மூன்று கிலோ மீட்டர் நடந்து சென்று அந்த சேனலில் இவர் வேலை செய்து வருவாராம். ஒரு நாள் சோ போனால் நூறு ரூபாய் சம்பளம் கொடுப்பார்களாம். இவருடைய பெரியப்பா தான் அப்போது அவர் சேர்த்து வைத்திருந்த பணத்தில் இவருக்கு ஒரு பைக் வாங்கி கொடுத்தாராம். பின்பு அங்கு தொகுப்பாளராக இருக்கும்போதுதான் ரச்சிதாவுக்கு நடிக்கறதுக்கு வாய்ப்பு கிடைத்ததாம்.

ஆரம்பத்தில் அதிகமான எதிர்ப்பு
இதுவரைக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எந்த இடத்திலும் தன்னுடைய குடும்பத்தை பற்றி அந்த அளவிற்கு பேசாமல் இருந்து வந்த ரச்சிதா முதல் முறையாக மனம் திறந்து பல விஷயங்களை கூறியிருக்கிறார். அதுவும் இவருடைய ஆரம்ப காலம் இவ்வளவு கஷ்டமானதாக என்று இவருடைய ரசிகர்கள் பலர் ஃபீல் பண்ணி வருகிறார்கள். சீரியலில் இவரை டாப் கதாநாயகியாக பார்த்து வந்த ரசிகர்கள் கூட ரச்சிதா இவ்வளவு கஷ்டத்தையும் தாண்டி தான் வந்திருக்கிறாரா? என்று கருத்து கூறி வருகின்றனர். கூட்டு குடும்பத்தில் இவர் வாழ்ந்து வந்ததால் இவருடைய நடிப்பு வாழ்க்கையில் ஆரம்பத்தில் அதிகமாக எதிர்க்கப்பட்டதாம்.பின்பு பல போராட்டங்களுக்கு பிறகு தான் இந்த நிலைமைக்கு வந்திருப்பதாக உருக்கமாக பேசியிருக்கிறார்.
-
சிறகடிக்க ஆசை: ஒரு வழியாக மாறிய கதைக்களம்.. வீட்டை மீட்ட கையோடு நடந்த தரமான சம்பவம்! மனோஜுக்கு புதிய அதிர்ச்சி! -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications