
வனிதா சொல்வது எல்லாமே பொய்.. இதுதான் உண்மை! நடந்த கதையே வேறு.. ராபர்ட் மாஸ்டரின் விளக்கம்
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு ராபர்ட் மாஸ்டருக்கு வாய்ப்பு நான் தான் வாங்கி கொடுத்தேன் என வனிதா சொல்லியதை குறித்து ராபர்ட் மாஸ்டர் தற்போது விளக்கம் கொடுத்திருக்கிறார்.
ஏற்கனவே பிக் பாஸ்க்கு சென்று வந்த வனிதா, ராபர்ட்டை பற்றி பல குறைகளை கூறிக் கொண்டிருக்கும் நேரத்தில் அதற்கெல்லாம் அவர் தகுதியானவரா என்று ராபர்ட் மாஸ்டர் கேள்வியை எழுப்பி இருக்கிறார்.
என்னுடைய ஓட்டு இவருக்குத்தான்.. ரட்சிதாவின் கணவரை தொடர்ந்து ஓப்பனாக பதிவிட்ட ராபர்ட்..மாறவே இல்லையே!

இது உண்மை இல்லையாம்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ராபர்ட் மாஸ்டருக்கு நான் தான் வாய்ப்பு வாங்கி கொடுத்தேன். நான் பிக் பாஸ் அணியினரிடம் பேசியதால்தான் ராபர்ட் மாஸ்டர் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்தது என்று வனிதா பேசி இருந்திருக்கிறார். ஆனால் தன்னுடைய பெயரை கெடுத்து விதமாக ராபர்ட் விளையாடி வருவதாகவும் அதில் கூறி இருந்தாராம். அதற்கு தற்போது ஒரு பேட்டி ஒன்றில் ராபர்ட் மாஸ்டர் இதுவெல்லாம் "உண்மை இல்லை" நான் ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக தான் இருந்தது. அதற்கான வாய்ப்பு எனக்கு வந்த பிறகு தான் நான் அதில் கலந்து கொள்ளலாமா? எப்படி என்பது பற்றி தான் வனிதாவிடம் விசாரித்தேன் என்று ராபர்ட் மாஸ்டர் கூறியிருக்கிறார்.

ஐடியா மட்டும்தான் கேட்டாராம்
அது மட்டுமில்லாமல் ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனுபவம் இருக்கும் வனிதாவிடம் பேசினால் தனக்கு ஒரு பயம் போகும் என்றுதான் நினைத்தேன். அதுபோல வனிதா இதில் கலந்து கொள்ளும்போது நீ ஹீரோவாக இருக்கப் போறியா? வில்லனாக இருக்க போறியா? காமெடியனாக இருக்க போறியா? எப்படி இருக்க போகிறாய் என்று முடிவு செய்து கொள் என்று கூறினார். நான் என்னுடைய விளையாட்டை என் பணியில் விளையாட போகிறேன் என்று கூறியிருந்தேன். அவ்வளவுதான், வேறு ஒன்றும் இல்லை நான் இதற்கு முன்பு கலந்து கொண்டிருந்த சான்டியிடம்தான் முதலில் பேசலாம் என இருந்தேன். ஆனால் சாந்தி இடம் அந்த அளவிற்கு தனக்கு நெருக்கம் இல்லாததால் ஏற்கனவே பழக்கமான வனிதாவிடம் பேசிக்கொள்ளலாம் என்று தான் வனிதாவிடம் பிக் பாஸ் பற்றி ஐடியா கேட்டேன். ஆனால் வாய்ப்புகள் எல்லாம் வாங்கி தரவில்லை என்று ராபர்ட் மாஸ்டர் கூறியிருக்கிறார்.

வனிதா செய்த உதவி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் இருக்கும் போது தன்னுடைய காதலியை பற்றியும் அவருக்கு வயது குறைவாக இருப்பதை பற்றியும் இந்த வயதில் எல்லாம் ராபர்ட்டுக்கு காதல் தேவைதானா? என்று வனிதா கேள்வி எழுப்பி இருக்கிறார். இதை சொல்வதற்கு முதலில் அவருக்கு தகுதி இருக்கிறதா? இவருடைய நிலைமை உலகத்திற்கே தெரியும். அவர் எந்த வயதில் எப்படி எல்லாம் இருக்கிறார் என்று என நக்கல் தனத்தோடு ராபர்ட் வனிதாவின் பேச்சுக்கு பதில் கூறிய வீடியோவை நெட்டிசன்கள் பலர் பகிர்ந்து கருத்து வெளியிட்டு வருகிறார்கள். பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது ராபர்ட் மாஸ்டர், வனிதாவுடன் தான் முன்பு பழகி இருந்ததாகவும் இப்போது தாங்கள் நட்பாக பழகி வருவதாகவும் ஆனால் எனக்கு பல நேரங்களில் வனிதா உதவி செய்து இருக்கிறார் என்று கூறியிருந்தார்.

அது வனிதாவுக்கும் தெரியுமாம்
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றி ரிவ்யூ செய்து வரும் வனிதா தினமும் ராபர்ட் மாஸ்டரை பற்றி ஒரு சில நிமிடங்கள் பேசாமல் இருந்ததே இல்லை. அதை குறித்து தற்போது தன்னுடைய பர்சனல் லைஃபை குறித்து வனிதா பேசியதை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. அது சுத்தமான பொய் என்று ராபர்ட் கூறி இருக்கிறார். அதுபோல நான் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது என்னுடைய நிஜ கேரக்டரில் இருந்தேன் என்பது வனிதாவுக்கு தெரியும் ஆனால் வெளியே அதை மாற்றி சொல்லிக் கொண்டிருக்கிறார் அவ்வளவுதான் என்று ராபர்ட் கூறி இருக்கிறார்.