10 வாரத்தில் இதுவரை நாமினேஷனுக்கு வராத ஒரே நபர்.. இவர்தான் டைட்டில் வின்னரா? எகிறும் எதிர்பார்ப்பு
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி 10 வாரங்கள் ஆகியிருக்கின்ற நிலையில் இதுவரை ஒரு முறை கூட நாமினேஷனில் வராத ஒரே போட்டியாளர் இருக்கிறார்.
ரசிகர்களை மட்டுமல்லாமல் சக போட்டியாளர்களையும் கவர்ந்த போட்டியாளராக இருக்கும் திருநங்கை ஷிவின் கணேஷ் டைட்டில் ஜெயிப்பாரா? என்று இப்போது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

சாதனை படைத்த போட்டியாளர்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி இதுவரைக்கும் ஒளிபரப்பான எந்த சீசன்களிலும் இல்லாத வகையில் புது சாதனையை ஒரு போட்டியாளர் செய்து இருக்கிறார். தற்போதைய 10 வாரங்கள் ஆகின்றது இந்த 10 வாரத்திலும் ஒரு போட்டியாளர் மட்டும் எந்த ஒரு நாமினேஷன் லிஸ்டிலும் வராமல் தப்பித்துக் கொண்டிருக்கிறார். அப்படியே இனி அவர் வந்தாலும் ரசிகர்கள் முதல் ஆளாக அவரை சேவ் செய்து விடுவார்கள் என்பது இப்போது பலரும் கூறும் ஒரு கருத்தாக இருந்து வருகிறது. அந்த போட்டியாளர் வேறு யாருமில்லை ஷிவின் கணேஷ் தான். சண்டை போட வேண்டிய நேரத்தில் சரியாக சண்டையிட்டாலும், தன்னுடைய கருத்தை தெரிவிக்க வேண்டிய இடத்தில் தைரியமாக முன்வைத்து வரும் ஷிவின் கணேஷ் ரசிகர்களின் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

திருநங்கை போட்டியாளர்
இதுவரைக்கும் இல்லாத வகையில் கடந்த சீசனில் முதல் முறையாக திருநங்கை போட்டியாளராக நமீதா மாரிமுத்து அறிமுகமானார். அவருக்கு கிடைத்த வரவேற்பு காரணமாகவே இந்த சீசனிலும் திருநங்கை போட்டியாளராக ஷிவின் கணேஷ் அறிமுகப்படுத்தப்பட்டார். ஆரம்பத்தில் இவர் என்ன மாதிரி விளையாடப் போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் நீங்கள் எதிர்பார்த்ததற்கு மேலே நான் செயல்படுத்தி காட்டுகிறேன் என தன்னுடைய மெச்சூரிட்டியான கேரக்டர் மூலமாகவே பல இடங்களில் இவர் சிறப்பாக விளையாடி வருவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

அதிகமாக எலிமினேஷனில் வந்த போட்டியாளர்
முந்தைய பிக் பாஸ் தமிழ் சீசன் நான்காவது சீசனில் அதிகமான முறை போட்டியாளர்களால் நாமினேஷன் லிஸ்டில் கொண்டுவரப்பட்ட ஆரி ஒவ்வொரு முறையும் ரசிகர்களால் அதிகமான வாக்குகளின் அடிப்படையில் சேவ் ஆனார். அதுபோல கடந்த சீசனில் ராஜு டைட்டில் ஜெயித்திருந்தாலும் அவர் ஆரி வந்த அளவிற்கு நாமினேஷனில் வரவில்லை. ஆனால் இந்த சீசனில் அசீம் அதிக முறை நாமினேஷனில் வந்து கொண்டே இருக்கிறார். ஆனாலும் அதிகமாக ரசிகர்களால் அவருக்கு ஆதரவு கிடைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதுவரைக்கும் ஒரு முறை கூட நாமினேஷன் வராத போட்டியாளராக ஷிவின் இருந்து வருகிறார்.

ஆயிஷாவின் கருத்து
கடந்த வாரம் இரண்டு எவிக்ஷன் நடைபெற்றது அதில் ஒரு போட்டியாளராக இருந்த ஆயிஷா வெளியே வந்த பிறகு கூட ஷிவின் இந்த சீசனில் டைட்டில் ஜெயிப்பதற்கு அதிகமாக வாய்ப்பு இருக்கிறது. என்னுடைய ஆசையும் அதுதான் என்று கூறியிருக்கிறார். அவர் மட்டுமல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த போட்டியாளர்கள் பலரும் ஷிவினோடு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் தங்களுடைய நட்பு தொடர வேண்டும் என்றும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் தாங்கள் பார்த்து வியந்த ஒரு கேரக்டர் என்றால் ஷிவின்தான் என்று அவரைக் குறித்து பேசி வரும் நிலையில் அவர்தான் இந்த சீசனில் டைட்டில் வின்னராக வாய்ப்பிருப்பதாகவே கருத்து கூறி வருகிறார்கள்.

அந்த வாய்ப்பு இவருக்கு தானாம்
ஆரம்பத்தில் விக்ரமண் டைட்டில் ஜெயிப்பதற்காக அதிகமாக வாய்ப்பு இருக்கிறது என்று கூறி வந்த நிலையில், தற்போது அவர் அதிகமாக நியாயத்தை மட்டுமே பேசி வருகிறார், விளையாட்டில் அதிகமாக கவனத்தை செலுத்தவில்லை குறை கூறுவதில் கவனமாக இருக்கிறார் என்று அவரை குறித்து பல நெகட்டிவ் கருத்துகளும் பரவி வரும் நிலையில், ஷிவின் டைட்டில் ஜெயிப்பதற்கு அதிகமாக வாய்ப்பு இருப்பதாக அனைவரும் கூறி வருகின்றனர். அதே நேரத்தில் அசீமிற்கு என்னதான் ரசிகர்கள் அதிகமாக ஆதரவு கொடுத்து வந்தாலும் அவர் பல நேரங்களில் அநாகரிகமான வார்த்தைகளை பேசி விடுவதால் அவரை ஜெயிக்க வைப்பதற்காக பிக் பாஸ் முயற்சி செய்யாது. அவருக்கு டைட்டில் பட்டம் கொடுக்க வாய்ப்பில்லை. அதனாலே ஷிவினுக்கு தான் அந்த வாய்ப்பு இருப்பதாக ரசிகர்களும், பல பிரபலங்களும் கருத்து கூறி வருகிறார்கள்.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications