மகேஸ்வரி ஒரு பாம்பு.. நல்லது எது, கெட்டது எதுன்னு தெரியாது லைவில் பேசிய அசீம்.. குவியும் கருத்துக்கள்

வி.ஜே மகேஸ்வரி ஒரு பாம்புக்கு சமம் என்று அசீம் முதல் முறையாக லைவில் கூறி இருக்கிறார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு பிறகு முதல் முறையாக லைவில் அசீம் மகேஸ்வரி பற்றி பேசி இருக்கிறார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த போட்டியாளர்களில் பாம்பு போன்றவர் மகேஸ்வரி என்று அசீம் கூறி இருக்கிறார்.

அசீம் லைவில் மகேஸ்வரியை பற்றி கூறிய கருத்திற்கு நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.

ஒரு வாரம் ஆகிவிட்டது

ஒரு வாரம் ஆகிவிட்டது

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி முடிவடைந்து ஒரு வாரம் ஆகி இருக்கிறது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை பற்றி பேச்சு மட்டும் சமூக வலைத்தளத்தில் இன்னும் ஓய்ந்தபாடு இல்லை. பிக் பாஸ் நிகழ்ச்சி வழக்கமாக முடிவடைந்ததும் அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கியதும் அதை பற்றி ரசிகர்கள் ஒவ்வொரு சீசனிலும் பேச தொடங்கி விடுவார்கள். ஆனால் இந்த சீசன் கொஞ்சம் மாறுதலாக தான் இருந்து வருகிறது. கடைசி நேரத்தில் ஏற்பட்ட எதிர்பாராத பல மாற்றங்கள் ரசிகர்களை இந்த அளவிற்கு பேச வைத்திருக்கிறது என்று கூறலாம் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போட்டியாளர்களும் இந்த நிகழ்ச்சியை பார்த்து வந்த பிரபலங்களும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த சீசனில் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்ட அசீம் முதல் முறையாக லைவில் ரசிகர்களோடு பேசி இருக்கிறார்.

முதல் லைவ்

முதல் லைவ்

ஏற்கனவே அசீம் கோபத்தில் தர குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி அடுத்தவர்களை மட்டம் தட்டி உடல் மொழிகளை ஏளனப்படுத்தி வந்தார் என்று அவரைப் பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில் அவருக்கு டைட்டில் கொடுத்தது தவறு என்று அதிகமானோர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அசீம் இரண்டு நாட்கள் கழித்துதான் முதல் வீடியோ வெளியிட்டு தன்னுடைய ரசிகர்களுக்கு நன்றி கூறி தான் கூறியது போலவே தன்னுடைய வெற்றி பணத்தில் பாதியை கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பள்ளி படிப்பு செலவுக்கு உதவுவதாக கூறியிருந்தார். பின்பு அவ்வப்போது ஒவ்வொரு போஸ்ட்டுகளாக வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் முதல் முறையாக இன்று விஜய் டிவி அதிகாரப்பூர்வமான பக்கத்தில் லைவில் ரசிகர்களோடு பேசியிருக்கிறார்.

யார் பாம்பு

யார் பாம்பு

அதில் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த போட்டியாளர்களை மிருகங்களோடு ஒப்பிட்டு கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பாம்பு என்று கேட்கும் போது அது மகேஸ்வரி தான் என்று அசீம் கூறி இருக்கிறார். காரணம் பாம்பு எப்போதும் உஸ்.... உஸ் என்று சீறி கொண்டே இருக்கும். அதே போலத்தான் மகேஸ்வரியும் எப்போதும் சீறி கொண்டே இருப்பார். பாம்புக்கு நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என்று தெரியாது. அது போல மகேஸ்வரிக்கும் தெரியாது. அது எதிர் வருபவர்களை கொத்துவதற்கு பார்ப்பது போல தான் மகேஸ்வரியும் என்று கூறியிருக்கிறார்.

பலதரப்பட்ட கருத்துக்கள்

பலதரப்பட்ட கருத்துக்கள்

அசீமுடைய இந்த கருத்துக்கு அதிகமான ரசிகர்கள் தீ பொறிகளை பறக்க விட்டு வந்தாலும், பல ரசிகர்கள் மகேஸ்வரி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விக்கிரமனோடு சேர்ந்து நேர்காணலில் கலந்து கொண்டதால் தான் அசீமிற்கு இந்த வயித்தெரிச்சலா? என்று கேள்வி எழுப்பியிருக்கின்றனர். இன்னும் ஒரு சில ரசிகர்கள் அசீம் பற்றி தொடர்ச்சியாக மகேஸ்வரி அசீமிற்க்கு டைட்டில் கொடுத்தது ஒரு தப்பான உதாரணம் என்று கூறுபவர்களை பாராட்டி வருவதால் தான் அசீமிற்கு இந்த கோபமா? அதனால் மகேஸ்வரி கூறியதும் ஒருவேளை உண்மையாகத்தான் இருக்குமோ? இதுதான் வன்மமா என்று பல்வேறு கருத்துக்கள் பலவிதமாக குவிந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+