பிக் பாஸ் தமிழ் 9 வாய்ப்புக்காக இளைஞர் செய்யும் செய்த விபரீத செயல்.. இதெல்லாம் தேவையா?
சென்னை: விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி முடிவடைந்திருக்கும் நிலையில் விரைவில் ஒன்பதாவது சீசன் தொடங்கப்படுமா? இல்லையா? என்ற கேள்விகள் ரசிகர்களுக்கு இருக்கும் நிலையில் இப்போது ஒன்பதாவது சீசனில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இளைஞர் ஒருவர் செய்த விபரீத செயல் குறித்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏப்ரல் மாதத்தில் அடிக்கிற வெயிலுக்கு இந்த இளைஞருக்கு இது தேவையா? என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. அவர் என்ன செய்தார் என்று பார்க்கலாம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பலர் போட்டி போடுகிறார்கள். ஆனால் ஒரு சிலருக்கு தான் வாய்ப்பு கிடைக்கிறது. ஒரு சிலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் கூட அதன் முக்கியத்துவம் தெரியாமல் பாதியிலேயே வெளியேறி விடுகிறார்கள். அதுபோல இந்த நிகழ்ச்சியில் நடைபெறும் போது மட்டும்தான் மக்கள் மத்தியில் அது பற்றிய பேச்சு இருக்கிறது, பிறகு டைட்டில் வெற்றி பெற்றால் கூட அவர்களை ரசிகர்கள் சில வருடங்களில் மறந்து விடுகிறார்கள்.

போட்டி அதிகம்
இவர்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறது என்பது கூட சிலருடைய நிலைமையாக இருக்கிறது. ஆனாலும் இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பலர் போராடுகிறார்கள். அதுபோல இந்த நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் தங்களை பற்றி பேச வேண்டும் என்பதற்காக நிகழ்ச்சிக்கு போவதற்கு முன்பே சிலர் பிஆர் செட் பண்ணிவிட்டு போகிறார்கள் என்றும் குற்றசாட்டு இருக்கிறது.
விபரீத முடிவு
விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஏழு சீசன்களாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி இருந்தார். அதுபோல இப்பொழுது விஜய் டிவியின் உரிமையை கலர்ஸ் தமிழ் வாங்கி இருக்கும் நிலையில் இனி விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒன்பதாவது சீசன் நடைபெறுமா? இல்லையா? என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. இந்தநிலையில் தற்போது ஒரு இளைஞர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக விபரீதம் முடிவெடுத்திருக்கிறார்.
இளைஞரின் வேண்டுகோள்
அதாவது தன்னுடைய சொந்த ஊரில் இருந்து சென்னை வரை முட்டி போட்டு சாலை வழியாக வர போவதாக அறிவித்திருக்கிறார். அதுபோல தான் முட்டி போட்டு நடக்கும் வீடியோக்களையும் தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார். இந்த வீடியோவை விஜய் டிவி மற்றும் பிக்பாஸ் டீம், விஜய் சேதுபதிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் வைத்து இருக்கிறார். சுட்டுஎரிக்கும் வெயிலில் தேவையில்லாமல் யாரும் வரவண்டாம் என்று நிபுணர்கள் அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
விமர்சனங்கள்
இந்த நேரத்தில் அந்த இளைஞர் சென்னை வரை நான் முட்டி போட்டே போகிறேன் என்று விபரீத முடிவு எடுக்கிறார். அதுவும் அவருடைய சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு 87 கிலோமீட்டர் போகிறேன் என்று இவர் கூறியிருக்கிறார். இது பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது. இதெல்லாம் விபரீதம் என்று பலர் அவருக்கு அட்வைஸ் கொடுத்திருக்கிறார்கள். நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்றால் தன்னுடைய திறமையால் முயற்சி செய்ய வேண்டும், அதற்காக இப்படியா செய்வது? இது தவறான செயல் என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. இந்த நபர் செய்யும் செயல் குறித்து நீங்க என்ன நினைக்கிறீங்க பாஸ்.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: கதிரை காப்பாற்ற வந்த முத்துவேல்... ஆனால் அதற்குள் நடந்த கொடூரம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications