Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bigg Boss: பிக் பாஸில் மாறி போன ஆட்டம்! பார்வதிக்கு எகிறும் வரவேற்பு! ஆனா இது ஓவர்! அடியோடு மாறிட்டாரே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 பற்றி தான் சோசியல் மீடியாவில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இந்த சீசன் ஆரம்பத்தில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டாலும் இப்போது விளையாட்டு ஓரளவுக்கு வேகம் எடுக்க தொடங்கி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே பார்வதி தான். பார்வதி ஆரம்பத்தில் திவாகருடன் சேர்ந்து அலப்பறை செய்து கொண்டு இருந்தார், இப்போது தனியாக விளையாட்டை தொடங்கி இருக்கிறார்.

பொதுவாக ஒருத்தங்க வாழ்க்கையில் என்னதான் திருந்தினாலும் அவங்க முன்பு செஞ்ச செயல்களை எல்லாம் சொல்லி அவங்களுக்கு அடி கிடைக்கிறது போல தான் இப்போது பார்வதிக்கு கிடைச்சிட்டு இருக்கு. ஆரம்பத்தில் இருந்தே இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு ப்ரொமோக்களிலும் பார்வதி தான் இருப்பாங்க. பார்வதி இல்லாத ப்ரோமோ இருக்கா என்று தேடிப்பார்த்தால் அங்கு ஏமாற்றம் தான் இருக்கும். எல்லா ப்ரோமோவிலும் நான் வரணும்னு பல மாசமா ட்ரைனிங் எடுத்த மாதிரி பார்வதி சண்டை போட்டுட்டே இருந்தாங்க.

Bigg Boss Bigg Boss Tamil Vijay Sethupathi Kemi

ஆனா அவங்களோட அண்ணன் தர்பூசணி திவாகர் வெளியேற்றப்பட்ட பிறகுதான் பார்வதி கொஞ்சம் அவங்களோட விளையாட்டை ஆரம்பிச்சிருக்காங்க. அதற்கு முன்பு திவாகரை ஒரு பக்கம் மண்டையை கழுவி சண்டையை ஏத்தி விடுவாங்க. இன்னொரு பக்கம் கம்ருதீன் கிட்ட பேசிட்டு இருப்பாங்க. ஆனா இப்போ இவங்க இப்படித்தான்னு எல்லாருக்கும் தெரிஞ்சதால எல்லாருமே கொஞ்சம் அலர்ட் ஆயிட்டாங்க.

இந்த வாரம் அமித் தான் இவரிடம் வந்து சிக்கி இருந்தார். அவரும் ஒரு கட்டத்தில் பார்வதியின் விளையாட்டு பார்த்து அலர்ட் ஆகிட்டாரு. உண்மையில் பார்வதி நல்லவங்களா? கெட்டவங்களா? என்று கேட்கிற மாதிரி தான் தன்னோட விளையாட்டை விளையாடிட்டு இருக்காங்க. ஆரம்பத்தில் சண்ட கோழியா இருந்த பார்வதி இப்போ எல்லோருடைய அனுதாபத்தையும் பெறுகிற மாதிரி நடந்துக்கிறாங்க.

எல்லா சீசன்களிலும் ரசிகர்கள் அதிகமா எதிர்பார்க்கிற ஸ்கூல் டாஸ்க் இந்த சீசனிலும் இப்போ வந்தாச்சு. இதில் டீச்சராக பார்வதி நடிக்கிறாங்க. அவங்க அந்த கேரக்டராகவே மாறி இருக்காங்க. ஸ்டுடென்ட்டா இருக்கிற போட்டியாளர்கள் எல்லோரும் பார்வதியின் மீது இருக்கும் வன்மத்தை எல்லாம் கொட்றாங்க. ஆனாலும் பார்வதி நான் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவேன்னு சொல்லிட்டு இருந்தாங்க.

ஒரு கட்டத்தில் அமித்துடன் தன்னை சேர்த்து பேசியதை பார்த்து தாங்க முடியாமல் பார்வதி அழுதுவிட்டார். இந்த இடத்தில் தான் மக்களுக்கு இவர் மீது அனுதாபம் கூடி இருக்கு.( நம்ம மனுசங்க மனசே அப்படித்தானே) ஒருத்தங்க அழுதுட்டாலே பாவம்னு சொல்லிடுவோம் அதற்கு முன்பு அவர்கள் செஞ்சதெல்லாம் மறந்திடும். அதேபோல இப்போ பார்வதிக்கும் சப்போர்ட் இருக்கிறது.

நேற்று நடந்த டாஸ்க்கில் பார்வதி வார்டனாக இருக்கும்போது அவருக்கு உதவியாளராக இருந்த எப்ஜே கையில் அடிபட்டு விடுகிறது. அதனால பார்வதியே தான் கிச்சனை முழுக்க கிளீன் பண்ணி இருக்காங்க. அதுவும் விடியகாலை வரைக்கும் அங்க வேலை பண்ணிட்டு இருந்தாங்க. இதே இடத்துல பிக் பாஸ்க்குள் இருக்கும் வேற யாராவது செஞ்சிருப்பாங்களா? என்றால் சந்தேகம் தான். அதனால பார்வதிக்கு அதிகமா சப்போர்ட் வருது. இந்த வாரம் விஜய் சேதுபதி பார்வதியை பாராட்டுறாரான்னு பொறுத்திருந்து பார்ப்போம். பார்வதியுடைய மாற்றத்தை பார்த்து நீங்க என்ன நினைக்கிறீங்க பாஸ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+