பிக் பாஸில் வேணும்னு சாப்பாட்டில் உப்பை அள்ளி போட்ட கனி.. ஆதிரை கேட்ட கேள்வி! விஜய் சேதுபதி முடிவு
சென்னை: விஜய் டி.வி-யில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 ஆரம்பிச்ச சில நாட்களிலேயே டிராமாவுக்கும், சண்டைக்கும் பஞ்சமில்லாமப் போய்க்கிட்டு இருக்கு! இந்த வாரம் முழுக்கப் பாசம், கண்ணீர், வேலைன்னு ஓடின பிக் பாஸ் வீடு, இப்போ திடீர்னு ஒரு 'உப்புக் கரிக்கும்' பஞ்சாயத்துல சிக்கி, ரசிகர்களுக்கு செம கன்டென்ட் கொடுத்திருக்கு!

கனி-பிரவீன் விளக்கம்
பிக் பாஸ் வீட்டுல கன்டென்ட்டுக்கு ரொம்பவும் கஷ்டப்படுறாங்க போல! அதனாலதான், கனி மற்றும் பிரவீன் காந்தி இருவரும் சேர்ந்து, சமையல்ல ஒரு 'மாஸ்டர் பிளானை'ப் போட்டுள்ளனர். சமையலில் உப்பு அதிகமாப் போட்டதற்கான காரணம் என்னன்னு கேட்டதுக்கு, அவங்க ரெண்டு பேரும் கேமரா முன்னாடி நின்னு, "நாங்க ரெண்டு பேரும் தெரிஞ்சேதான் உப்பு அதிகமாப் போட்டு இருக்கோம்"னு கூலாகச் சொன்னாங்க!
இதுக்குக் காரணம் என்னன்னா, "சாப்பாடு இல்லைன்னா எப்படி இருக்கும்னு அவங்களுக்குத் தெரியணும்"னு கனி சொல்லியிருக்கிறார். சமையலை டேஸ்ட் பண்ணிப் பார்த்த எல்லாரும், "குழம்புல உப்பு ரொம்ப அதிகமா இருக்கு"ன்னு சொல்லி ஷாக் ஆகிட்டாங்க!
ஆதிரையின் டென்ஷன்
இந்த சமையல் பஞ்சாயத்துல, எப்போதும் அமைதியாக இருக்கும் ஆதிரை, திடீரென ஓபனாகிக் கேள்விகள் கேட்க ஆரம்பிச்சார். "நீங்க ஒண்ணு பண்றீங்கன்னா, அதைச் சரியாக பண்ணணும்"னு ஆதிரை கேட்டபோது, பிரவீன் காந்திக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் வெடித்தது!
இப்படி அமைதியா இருந்த ஆதிரை, திடீர்னு சவுண்ட் விட்டதால, பிக் பாஸ் வீடே ஒரு நிமிஷம் அதிர்ந்துபோச்சு! இப்போதான் பிக் பாஸ் வீடு சூடு பிடிச்சிருக்குன்னு ரசிகர்கள் கமெண்ட்ஸ் போட்டுட்டு இருக்காங்க.
கம்ருதீனும் - ஆதிரையும் போட்ட பிளான்
இந்த ஆதிரை மற்றும் கனி-பிரவீன் இடையேயான சண்டைக்கு முன்னாடி, "தண்ணீர் சேமிப்பு டாஸ்க்"ன்னு ஒண்ணு நடந்துச்சு. அந்த டாஸ்க்கில் கம்ருதீன் சிறப்பாச் செயல்பட்டாலும், சில தவறுகள் நடந்தது. அப்போதும் ஆதிரை, கம்ருதீனிடம் நேராகப் போய், பளீச்னு கேள்விகளை கேட்டுத் தன் மனதில் உள்ளதை கொட்டினார்.
கம்ருதீன், ஆதிரை இருவரும் விஜய் டி.வி-யின் பிரபலமான 'மகாநதி' சீரியலில் இணைந்து நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவங்க ரெண்டு பேரும் வெளியில இவ்வளவு க்ளோஸா இருந்தும், டாஸ்க்கிலும், பஞ்சாயத்துலயும் ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்கொடுக்காமல் பேசுறது, "எல்லாமே கன்டென்ட்டுக்காகத்தான் நடிக்கிறாங்களோ?"ன்னு ரசிகர்களைக் கேட்க வெச்சிருக்கு!
மொத்தத்துல, 'தண்ணீர் சேமிப்பு டாஸ்க்'-ல ஆரம்பிச்சு, இப்போ 'உப்பு' டிராமா வரைக்கும் பிக் பாஸ்ல நடக்கிற இந்தச் சண்டைகள், மீம்ஸ்களாகவும், வீடியோக்களாகவும் சமூக வலைதளங்கள்ல செம வைரலாகப் பரவி வருது!. பிக் பாஸ் வீட்டுல கன்டென்ட் இல்லன்னா, அடுத்து என்ன பொருளை வச்சுச் சண்டை போடுவாங்கன்னு நினைக்கிறீங்க? (மஞ்சள் தூள், மிளகாய்த் தூள்?)












Click it and Unblock the Notifications