பிக்பாஸ் அல்டிமேட்: ஓவியா எங்கே..அவருக்காகத் தான் இதை செய்தோம்..குழப்பத்தில் ரசிகர்கள்
சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஓவியா கலந்து கொள்கிறாரா?? இல்லையா?? என ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
ஓவியாவை பற்றி எந்த அறிவிப்பும் வரவில்லையே என அவருடைய ரசிகர்கள் குழப்பத்தில் தவிக்கிறார்களாம்.

பிக்பாஸ் அல்டிமேட் அறிமுகம்
பிக்பாஸ் நிகழ்ச்சியை போன்று டிஸ்னி ஹாட்ஸ்டாரில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. இதை பற்றி கமல் தற்போது நடந்து முடிந்த பிக் பாஸ் ஐந்தாவது சீசனின் கிராண்ட் பினாலேவில் தெரிவித்துள்ளார் .அவர் தெரிவித்ததும் பிக் பாஸ் ரசிகர்கள் இதைப் பற்றி வலைத்தளங்களில் விவரங்களை தேட தொடங்கிவிட்டனர். இதில் யார் யார் எல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என்று ரசிகர்கள் அவர்களாகவே பலருடைய பெயர்களை கூறி வந்தனர். அதுபோல நம்பகமான பல அறிவிப்புகளும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வருகிறது.

தொடங்கிய புது ஆர்மிகள்
ஒவ்வொரு சீசனிலும் ரசிகர்களின் மனதை கவர்ந்த போட்டியாளர்கள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதால் அதில் தங்களுக்கு பிடித்த போட்டியாளர்கள் இருக்கிறார்களா? ? என்று தான் பலரும் தேடி வருகின்றனர். முதல் சீசனில் ரசிகர்களின் படை பலத்தோடு வலம் வந்த ஓவியா இந்த நிகழ்ச்சியில் அறிமுகமாக போகிறார் என்ற செய்திகள் சமூக வலைத்தளத்தில் பரவியதை தொடர்ந்து அவருடைய ரசிகர்கள் அவருடைய பெயரில் ஆர்மிகளை தொடங்கிவிட்டார்கள். அவருக்காக பேன்ஸ் பேஜ்களும் புதிதாக தொடங்கப்பட்டு வருகிறது.

ரசிகர்களின் மனக்குமுறல்
ஓவியாவின் தீவிரமான ரசிகர்கள் தங்கள் தலைவியின் அறிமுகம் எப்போது வரும் என்று ஆர்வத்தோடு கேட்டு வருகின்றனர். ஏற்கனவே 3 போட்டியாளர்களின் ப்ரமோ வெளியான நிலையில் எப்போது ஓவியாவின் ப்ரமோ வரும் என்று ஒவ்வொருவரும் தினமும் தொடர்ந்து பார்த்து வருவதாக கூறி வருகின்றனர். இந்தநிலையில் ஓவியாவின் ரசிகர்கள் பலர் அவருக்காகவே ஹாட்ஸ்டார் அக்கௌன்ட் தொடங்க உள்ளார்களாம். அப்படி தொடங்கி பிறகு தங்கள் தலைவி வரவில்லை என்றால் நாங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகும் என்று சமூக வலைத்தளத்தில் தங்களுடைய குமுறல்களை கொட்டி வருகின்றனர்.

செம ஃபீலிங் தான்
ஓவியா கலந்து கொள்வது பற்றி உறுதியான தகவல்கள் இன்னும் வெளி வரவில்லையே என்று தான் பலரும் ஆர்வத்தோடு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். கடைசி நேரத்தில் அவர் கலந்து கொள்வாரா?? இல்லையே என்று தெரியவில்லையே என்று பலர் தங்களுடைய மனக் குமுறல்களை கொட்டி வருகின்றனர். ஓவியாவிற்கு இப்போதே உயர்ந்து வரும் ஆர்மிகளை பார்க்கும்போது அவர் தான் இந்த சீசன் டைட்டில் வின்னராக இருக்குமா..!?? என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். எதுவாக இருந்தாலும் ஓவியாவின் ப்ரமோவை விரைவில் வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்பது அவருடைய ரசிகர்களின் வேண்டுகோளாகும், பீலிங்காகவும் இருந்து வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications