Bison box office: 'பைசன் - காளமாடன்' 4 நாளில் இத்தனை கோடி வசூல்! மெல்ல மெல்ல அதிகரிக்கும் வேட்டை!
சென்னை: இந்தத் தீபாவளி ரேஸில் பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' பயங்கர டஃப் கொடுத்தாலும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிச்சிருக்கிற 'பைசன் - காளமாடன்' திரைப்படம் தமிழ்நாட்டுல தனக்கான ஒரு இடத்தைப் பிடிச்சு, சூப்பர் டூப்பர் ஹிட் லிஸ்ட்ல சேர்ந்துருச்சுன்னே சொல்லணும்! இந்தப் படம் நாலாவது நாள்ல எவ்வளவு வசூல் பண்ணியிருக்குங்கிற தகவல் இப்ப வெளியாகி, சினிமா உலகத்துல ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கு!

அப்பா மாதிரியே ஆகணும்
கோலிவுட்ல அப்பா விக்ரம் மாதிரிப் பெரிய நடிகரா வரணும்னு ஆசைப்பட்டு வந்த துருவுக்கு, முதல் இரண்டு படங்கள் பெரிய கை கொடுக்கல. முதல் படம் பெரிய போராட்டமாவே அமைஞ்சது. இரண்டாவது படமான 'மகான்'கூட, விக்ரம் பட லிஸ்ட்ல சேர்ந்து, பெரிசா பேசப்படாம போயிடுச்சு. ஆனா, மூணாவதா வந்த 'பைசன்'ல மாரி செல்வராஜ் மேஜிக் வேலை செஞ்சுருச்சு!
பைசன் - காளமாடன் கதைக்களம்
இந்தப் படம் கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையையும், மாரி செல்வராஜோட கற்பனைக் கதையையும் சேர்த்து உருவாக்கி இருக்காங்க. படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க, பசுபதி, அமீர், லால், ரஜிஷா, அனுபமான்னு பெரிய பட்டாளமே நடிச்சிருக்காங்க. படம் அக்டோபர் 17ஆம் தேதி ரிலீஸானது.
மாரி மேக்கிங்கில் சீறிப்பாய்ந்த பைசன்
மாரி செல்வராஜ் படம்னாலே ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எகிறிடும். அதே மாதிரிதான் 'பைசன்' படமும்! படம் பார்த்தவங்க எல்லாருமே, ஒரு முழுத் திருப்தியோட தியேட்டரை விட்டு வெளியே வந்தாங்க.

விமர்சனம்
இயக்குநரோட மேக்கிங், கதை சொன்ன விதம், கேமரா, இசைன்னு எல்லா ஏரியாவுலயுமே 'பைசன்' சீறிப் பாய்ஞ்சதால, தீபாவளி ரேஸ்ல ஒரு வெற்றியைப் பதிவு செஞ்சுருச்சு. முக்கியமா, துருவ் விக்ரமின் நடிப்புக்கு பெரிய அப்ளாஸ் கிடைச்சது. "புலிக்குப் பிறந்தது பூனையாகுமா"ங்கிற மாதிரி, ஒவ்வொரு ஃப்ரேம்லயும் துருவ் அவ்வளவு உழைப்பைக் கொட்டி நடிச்சிருக்கார்னு ரசிகர்கள் பாராட்டுறாங்க.
4 நாள் வசூல் நிலவரம்
ஆரம்பத்துல கொஞ்சம் டல்லடிச்ச வசூல், அடுத்தடுத்த நாட்கள்ல மளமளன்னு பிக்கப் ஆகிடுச்சு. முதல் மூன்று நாட்கள்ல முறையே 2.7கோடி,3.4 கோடி, 4.5 கோடி ரூபாயை வசூலிச்சுச்சு. நாலாவது நாளான நேற்று, படம் 5.65 கோடி ரூபாயை வசூலிச்சிருக்குன்னு Sacnilk இணையதளம் சொல்லியிருக்கு. அந்தத் தளத்தோட கணக்குப்படி பார்த்தா, 'பைசன்' நாலு நாட்கள்ல இந்தியாவில் மொத்தம் 16.25 கோடி ரூபாயை வசூல் செஞ்சிருக்கு.
இனிமேல் துருவ் விக்ரம் தன்னோட கேரியர்ல பெரிய 'டேக் ஆஃப்' ஆவாருன்னு ரசிகர்கள் நம்பிக்கையோட இருக்காங்க!












Click it and Unblock the Notifications