Bison box office: தோல்வியே காணாத இயக்குநர் மாரி செல்வராஜ்: "பைசன்" 7 நாட்களில் இத்தனை கோடி வசூல்!
சென்னை: நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியாகிச் சூப்பர் ஹிட்டடித்திருக்கும் 'பைசன்' திரைப்படம், இயக்குநர் மாரி செல்வராஜுக்கு ஒரு பெரிய மைல்கல்லைப் பதிவு செய்துள்ளது. தொடர்ச்சியாக 5வது ஹிட் படத்தைக் கொடுத்து, கோலிவுட்டில் தோல்வியே கொடுக்காத இயக்குநர் என்ற பெருமையை அவர் பெற்றிருக்கிறார். படம் ரிலீஸான 7 வது நாளில் எவ்வளவு வசூலாகியிருக்கிறது என்ற தகவல் வெளியாகி, படக்குழுவினரை உற்சாகப்படுத்தியுள்ளது.

பைசன் காளமாடன்
'பைசன்' திரைப்படம், அர்ஜுனா விருது வென்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டதாகும். எனினும், இது முழுக்க முழுக்க ஒரு பயோபிக்காக உருவாகவில்லை. அவரது வாழ்வில் நடந்த சம்பவங்களைத் தழுவி எடுக்கப்பட்டாலும், இந்தப் படம் தென் மாவட்ட இளைஞர்களின் வாழ்வியல், சமூகத்தில் நிலவும் சாதிப் பாகுபாடு எனப் பல முக்கியமான விஷயங்களைப் பேசியிருந்தது.
துருவ்வின் உழைப்பு
இந்தக் கதாபாத்திரத்திற்காக துருவ் விக்ரம் இரண்டரை முதல் மூன்று வருடங்கள் வரை கபடி பயிற்சி பெற்றும், திருநெல்வேலியில் வாழ்ந்து அந்த ஊரின் வாழ்வியலைக் கற்றுக்கொண்டும் நடித்திருந்தார். உழைப்புக்கேற்ற ஊதியமாக அவருக்குப் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கின்றன. மாரி செல்வராஜ் தனது படங்களில் முன்வைக்கும் அழுத்தமானச் சமூகக் கருத்துகள், இந்தப் படத்திலும் பலரிடமிருந்து பாராட்டைப் பெற்றிருக்கிறது.
பாராட்டிய பிரபலங்கள்
ரஜினி, லிங்குசாமி, வசந்தபாலன், சேரன், இரா. சரவணன் எனப் பெரும்பாலானோர் இந்தப் படத்தைக் "பெருமையோடு" முன் நிறுத்தியிருக்கிறார்கள். வழக்கம்போல், ஒரு தரப்பினர் இந்தப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் (சாதி ரீதியான மோதல்களைத் தூண்டுவதாகக் கூறி எதிர்ப்புகள் எழுந்ததாகத் தெரிகிறது), மாரி செல்வராஜின் படைப்பு பாராட்டு மழையில் நனைந்துவிட்டது.

பைசன் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
இந்தப் படத்துக்குப் போட்டியாகப் பிரதீப் ரங்கநாதன் நடித்த 'டியூட்' மற்றும் ஹரிஷ் கல்யாண் நடித்த 'டீசல்' ஆகிய படங்கள் வந்தன. அந்தப் படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றாலும், 'பைசன்' படத்தின் வெற்றியும், வசூலும் பாதிக்கப்படவில்லை. நேற்றைய முன்தினக் கணக்குப்படி உலகம் முழுவதும் 35 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வந்துவிட்டது.
7ஆம் நாள் வசூல்
படம் வெளியாகி நேற்றுடன் ஒரு வாரம் நிறைவடைந்த நிலையில், 7வது நாளான நேற்று 'பைசன்' செய்த வசூல் குறித்த தகவலை Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி இந்தியாவில் மட்டும் 1.50 கோடி ரூபாய் வசூலித்து, மொத்தம் ஒரு வாரத்தில் 27.15 கோடி ரூபாயை அள்ளியிருப்பதாகக் கூறப்படுகிறது.
துருவ் விக்ரமுக்குச் சிறப்பானத் தொடக்கமாக அமைந்திருக்கும் இந்தப் படம், மாரி செல்வராஜின் தொடர் வெற்றியை உறுதி செய்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications